புதன், 2 பிப்ரவரி, 2011

தலைமுறை ( பிறப்பு 1980 - 1990)


தலைமுறை  இதை பற்றி நாம் பேசி இருப்போம்.. தலைமுறை இடைவெளி இதை பற்றியும் பேசி இருப்போம். பாத்து வருடங்களுக்கு முன்பு தலைமுறை இடைவெளி என்பது 33  வருடங்கள் என்று சொல்வார்கள்.. பின்பு அது தேய்ந்து தேய்ந்து சிரிதாகிக்கொண்டு வந்தது ... முப்பது, இருபது ஐந்து, இருபது என்று.. ஆனால் உண்மையில் நாம் யோசிச்சா  இப்போது தலைமுறை இடைவெளி என்பது மிகவும் சுருங்கிவிட்டது என்பது நிஜம்.  கல்லூரி படித்து விட்டு இரண்டு , மூன்று வருடங்கள் ஆனவருக்கும் தற்போது கல்லூரியில் முதல்  வருடம் படிப்பவருக்கும் தலைமுறை இடைவெளி என்பது நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றது . அதாவது தற்போது எண்ணங்களும், குணம், அணுகுமுறை,கல்வி,பேச்சு,பழக்கவழக்கம் என்பது  ஏழு- எட்டு வயது வித்தியாசம் இருக்கும் இருவருக்கு இடையேயே ஆரபித்து விடுகிறது. ( இரண்டு பேர் என்று என்பது பொதுவாக இருக்கும் இரண்டு வயது உள்ள பல ஆட்கள்) .

இந்த இரு தலைமுறைக்கும் இடையே என்ன பிரச்சனைகள் , யார் மீது தவறு அல்லது எந்தந்த தலைமுறைக்கு என்ன வித்தியாசம் என்பதை இங்கே எழுதவில்லை.

( பிறப்பு  1980 - 1990) இந்த வருடத்தில் பிறந்த ஆட்களின் அதிர்ஷ்டம் அல்லது இவர்குக்கு கிடைத்த மற்ற யாருக்கும் கிடைக்காத அனுபவங்கள் என்னன்னு பார்ப்போம். ( இரண்டு , மூன்று வருடங்கள் முன்ன பின்ன இருக்கலாம்) .

முதலில் நாம 1999 -9 , 2000 + னு  தேதி குறிக்கும்போது நம்ம கையாள எழுதினதே நம்ம அதிர்ஷ்டம்தான்.

நாம் பிறந்து வளர்ந்தது ஒரு கலாச்சாரம்  , இப்போது வேறு ஒரு கலாசாரத்தில்  வாழ்ந்து  கொண்டு, வேறு ஒரு  கலாச்சாரத்திற்கு  போக போகிறோம். கண்டிப்பா அதற்க்கு அடுத்த வருபவர்களால் எந்த அளவுக்கு  கலாச்சார மாற்றத்தை சந்திப்பார்கள் , எத்தனை கலாச்சார மாற்றத்தை   அனுபவித்து இருப்பார்கள் என்று உறுதியாக கூற முடியாது. ஆனா நம் அளவுக்கு பார்க்க முடியாது, கேள்விபட முடியாது என்று தோனுகிறது.


வீட்டில் தொலைபேசி இல்லாமலும், பின்பு  நம்பர் சுழற்றி போன் செய்தும், பின்பு நம்பர் அழுத்தி போன் செய்தும் பிறகு பேஜர் பயன்படுத்தியும் , கடைசியாக  செல்போன் பயன்படுத்தி வரும் எல்லா காலங்களிலும் அனுபவித்தது இந்த வருட பிறப்பில்தான் இருக்கும்.

டிவி இல்லாத காலத்திலும் , பிறகு தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில், ஒளியும் ஒலியும் பார்த்து பிறகு , வெறும் கேபிள் டிவி நாடும் பார்த்து, பிறகு தனியார் தொலைக்காட்சி வந்த காலத்திலி பயணித்து  , ஆங்கில படம் பார்க்க ஆரம்பித்த காலத்திலும் வந்து, இந்த cd  காலத்திலும் போய் கொண்டு இருக்கிறோம்.

பின்னாடி வர்றவங்க  ஒரு படம் 100  நாள் ஓடுச்சான்னு ஆச்சரியாம பார்க்குற காலமும் வரும். அப்பாவும்  நாம அத கேட்டுட்டு இருப்போம். பின்னாடி வர்றவங்க இது வரைக்கும் ரிலீஸ் ஆனா படங்கள்ல எல்லாத்தயும் பார்க்க கூட அவங்களோட மொத்த  கால அளவு இருக்காது.

 இந்திய கிரிக்கெட் அணி னு ஒண்ணு வெளிய வந்ததே நம்ம காலத்துல .. இப்ப 20 -20 காலம் வரைக்கும் போய்ட்டு இருக்கு ... பின்னாடி 50  ஓவர் இருந்தத கூட அதிசயமா பார்க்குற காலமும் வரும்.

வரதட்சணை கொடுத்த தான் கல்யாணம்னு இருந்த காலத்த  பார்த்து LIVING TOGETHER வரைக்கும் பார்த்தாச்சு . பொண்ணும் பையனும் பார்த்தா தப்புன்னு போய், குரூப் ஸ்டடி வரைக்கும் பார்த்தாச்சு .,, ஒரு பொண்ணு வண்டி ஓட்டினா அத அதிசயமா பார்த்தா காலம் போய்.. இப்ப பஸ் ல கண்டக்டர் இருக்குற காலம் வரைக்கும்  பார்த்தும் நாம தான்.

தனிப்பட்ட CELIBIRITIES ஒவ்வரு காலத்துலயும் மாறிட்டே இருந்தாலும்.. இந்த காலத்துல இருந்த CELIBRITIES ஸ்பெஷல் தான்.
பள்ளிக்கூடம்ல வெள்ளை காக்கி சீருடைல இருந்து , கம்ப்யூட்டர்னா என்னனு தேரியாம இருந்த காலத்துல இருந்து , இப்ப பள்ளிகூடத்துல LKG கு  கம்ப்யூட்டர் கிளாஸ் நடக்குறத வரைக்கும் பார்த்துட்டு இருக்கோம்.

இந்த மாதிரி இன்னும் சில கால அதிசயங்கள பார்த்தும் நாமளா தான் இருக்கும். இப்படியே இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்.. எல்லாத்தையும் கண்டிப்பா எழுத முடியாது , தனி தனியா எழுதலாம்.... ஆனா கண்டிப்பா எல்லாரும் அவங்கவங்க  யோசிச்சு பார்த்தா இந்த மாதிரி நம்ம 1980 - 1990  ஸ்பெஷல் என்னன்னு தெரியும் ..


இது எல்லாமே முன்னாடி இருந்தவங்களுக்கு கிடைக்காத , இன்னும் வர்ற போறத பார்க்க முடியாம போனா ஆட்களா இருப்பாங்க. இதுக்கு அப்புறமா பிறந்தவங்க இந்த பழைய அழகான விஷயங்கள கண்டிப்பா MISS  பண்ணினவன்களாதான் இருப்பாங்க.

கருத்துகள் இல்லை: