புதன், 9 பிப்ரவரி, 2011

பட விமர்சனம்!?!?

ஒரு படத்த  எப்படி நல்ல படம், கெட்ட படம்னு விமர்சனம் பண்ணுறது?  நெறைய  வார பத்திரிக்கை, நாளிதழ்ல விமர்சனம் பண்ணி நல்லா இருக்கு நல்ல இல்லனு சொல்லுறாங்க.. டிவில கூட விமர்சனம் பண்ணி நல்லா இருக்கு நல்ல இல்லனு சொல்லுறாங்க..

ஒரு படத்த  நல்ல படம் , மோசமான படம்னு சரியான விமர்சனம் கொடுக்குறது எந்தளவுக்கு சாத்தியம்?அப்படி ஒரு வார பத்திரிக்கைல மதிப்பெண் கொடுத்தா.. நெறைய தடவ அதிக  மார்க் கொடுத்த படம் நல்ல ஓடுறது இல்ல, குறைஞ்ச  மார்க் கொடுத்த  நிறைய படங்கள்  நல்லா ஓடி பணம் சம்பதிக்குது.. இது எப்படி?

எந்த படத்தையும் நாம சரிசமமா  ஒரே மாதிரி விமர்சனம் பண்ண முடியாதுங்குறது உண்மை. உதாரணத்திற்கு  ஒரு COMMERCIAL  படத்திற்கு  நாம அவ்ளோவா  லாஜிக் பார்த்து விமர்சனம் பண்ணுறது இல்ல.. ஆனா ஒரு நேர்த்தியானான படத்துக்கு லாஜிக் குறை கண்டுபிடிக்குறது ரொம்ப அதிகமாக இருக்கும். இப்ப நம்ம சிறுத்தை படத்த எடுத்துகிட்டா  அதுல இருக்குற லாஜிக் குறைய அவ்ளோவா  நோண்டாம , படம் முடிஞ்சு வெளிய வந்து.. நல்லா இருக்குன்னு சொல்லுவோம். அதுவே ஆடுகளம் பார்த்துட்டு வந்தா  ... கோழி சண்டைல கால்ல  கத்தி இல்ல ...  கிஷோர்க்கு, மூணு தடவ தனுஷ் கொல்லாம விட்டும் உண்மைய  யோசிக்க தெரியாதா? அது இதுனு தேடி தேடி லாஜிக் தவறு கண்டு பிடிப்போம்.

இப்படி ஒரு படத்த  எடை போடுறதுலையே பாரபட்சம் பார்க்குறோம். நடைமுறைலையும் இது சாத்தியம் இல்ல. அதாவது எல்லா படத்தையும் ஒரே மாதிரி எடை போடுறதோ , விமர்சிக்குறதோ  கண்டிப்பா முடியாது. 

 படத்தோட எதிர்பார்ப்பு, டைரக்டர், நடிகர், இசை  இது விமர்சனம் ஆரம்பிக்குப்ப  ரொம்ப பெருசா ஒரு impact  கொடுக்கும்.  டைரக்டர்+ நடிகர்+ இசை அமைப்பளார்  இந்த கூட்டணி நெறைய  எதிர்பார்ப்ப உண்டாக்கும். இந்த  எதிர்பார்ப்பு கொஞ்சம் பூர்த்தி ஆகலைனா  கூட. .எதிமறை விமர்சனங்கள் வர்றது அதிகரிச்சிடும். எந்திரன் , ராவணன்,ஆயிரத்தில் ஒருவன் மாதிரி.

 ஒரு அசாதராமான கதாபாத்திரம் செய்யறது உண்மைல  கொஞ்சம் சுலபம்தான்.. அதாவது பைத்தியக்காரன்,  மனநிலை சரி இல்லாதவன்  இப்படி. இதுல ஒரு தப்பு செஞ்சாலும்  தெரிய போறது இல்ல. சித்தன், அகோரி இந்த மாதிரி. உண்மைய்லையே யாவரும் நலம் மாதவன், மறுமலர்ச்சி  ராசு படையாச்சி இந்த  மாதிரி கதாபாத்திரம் யதார்த்தமா  பண்ணுறதுதான் கஷ்டம். நல்ல யோசிச்சா இது உணமைன்னு தெரியும்.

படங்கள் COMMERCIAL , மசாலா COMMERCIAL , யதார்த்தம், டாகுமெண்டரி , பாண்டஸி , வித்தியாசமான  படம்னு இப்படி நெறையா  முறைல வருது. சில நடிகர்களுக்கு சில படங்கள் கிடக்குது. எல்லாராலும் எல்லா படங்களும் பண்ண முடியுரதுல்ல.. பண்ணினாலும் நல்லா இருக்காது. இப்ப கஜினி,அந்நியன் படத்துல விஜய் நடிச்சு இருந்த அது காமெடி படம் ஆகி இருக்கும். அதே மாதிரி வசீகரா படத்த விக்ரம் பண்ணி இருந்த அது சீரியஸ் படமாகி  இருக்கும்.


கருத்துகள் இல்லை: