வியாழன், 17 பிப்ரவரி, 2011

உலககோப்பையில் நடக்க போகும் துளிகள் .. ( WORLDCUP PREDICTIONS)
WORLD  CUP  PREDICTIONS  இன்னும் இரண்டு தினங்கள் இருக்கும் முன்பு உலககோப்பை கிரிக்கெட் போட்டி அனுமானங்கள் ..


அணி பிரிவுகள் - துளிகள் ..

இது வரை நடந்த உலககோப்பை போட்டிகளை விட கண்டிப்பாக இந்த உலககோப்பையில் 300  ரன்கள் அதிகமாக எடுப்பார்கள்.

குரூப் A  போட்டிகள் குரூப் B  போட்டிகளை விட  சுவாரஸ்யமாக இருக்கும். இந்த குருப்பில் ஆஸ்திரேலியா , பாகிஸ்தான் , இலங்கை , நியூசிலாந்து  அணிகள் தங்களுக்குள் விளையாடும் போட்டிகள் ஒவ்வன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.  இந்த அணிகள் ஆடும் ஆட்டத்தில் கிடைக்கும் ஒவ்வரு புள்ளிகளும் மிக முக்கியதாக இருக்கும்.


குரூப் B - கண்டிப்பாக இந்தியா, தென்னாப்பிரிக்கா,இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றிக்கு முன்னேறும்.அணி - துளிகள் ..


மேற்கு இந்திய அணியில் கெய்ல் 70  பந்துகள் , போலார்ட் 40 -50  பந்துகள் ஆடினால் மட்டுமே வெற்றி பெரும்/பெற வாய்ப்பு உள்ளது.  பிராவோ கை கொடுப்பார் என்று இந்த அணி நம்பி உள்ளது. சர்வன் , சந்தர்பால் எப்போது ஆடுவார்கள் என்று கணிப்பது கடினமே .இந்த அணி இங்கிலாந்து அணியுடன் விளயாடும் போட்டி இந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை நிச்சயுக்கும்.

தென்னாப்பிரிக்க அணியை பொறுத்த வரையில் இது கண்டிப்பாக முக்கியமான உலக கோப்பையாக அமையும்.  இவர்களது அரை இறுதி சாபம் கண்டிப்பாக இந்த முறை நடக்காது. IPL  போட்டிகளால் மிகவும் பயன் அடைந்து இருக்கும் அணியாக இருக்கும். அதிகமான வீரர்கள் இந்திய  மண்ணில் இங்கு இருக்கும் தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தவாறு ஆட கட்ட்ருகொண்டுள்ளணர. ஆம்லா நிச்சயமாக இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில்  இடம் பெறுவார். ஸ்டெய்ன் அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் இடம் பெறுவார். சில முக்கியாமான போட்டிகளில் டுமினி,டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக இருப்பார்கள். கல்லிஸ் வழக்கமாக முக்கிய வீரராக இருப்பார்.

இங்கிலாந்து அணியை பொறுத்த வரை இந்த அணியின் கடைசி வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்களாக பீட்டர்சென் மற்றும் மோர்கன் இருப்பார்கள். இந்த அணி நிச்சயாமாக அரை இருந்திக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதிக எதிர் பார்ப்பு இல்லாதது இந்த அணிக்கும் பெரும் பலம். 1983  இந்தியா, 1992  பாகிஸ்தான் இந்த கோப்பையை வெல்லும்போது இருந்த அணைத்து தகிதுகலுக அணிக்குள்ளது. நல்ல அணி, எதிர் பார்ப்பு இன்மை. பேட்டிங் , பௌலிங் பலம் என அணைத்து தகுதிகளும் உள்ளது. இளம் , அனுபவ வீரர்கள் கொண்டு சரிசமமாக உள்ளது.  ஸ்ட்ராஸ் , பெல் , ட்ராட், பீட்டர்சன் , மோர்கன் , காலிங்க்வூட் மற்றும் பிரியர் இந்த பேட்டிங் வரிசை மற்றும் அன்டர்சன் , பிராட் ,ப்ரெஸ்ணன்  வேகபந்து, சுவான் சுழற்பந்து என ஒட்டுமொத்த அணியின் பலம் நிச்சயம் கோப்பையை வெல்லும் தகுதியை கொடுக்கும்.

இந்திய அணியை பற்றி அதிகம் பேச தேவை இல்லை. தேவையான அளவிற்கு மேலேயே பேசி விட்டோம். பதற்றம் வென்றால் கோப்பை நமக்கு. இந்த வீரர்களை வைத்து கொண்டு இந்த அணி வெல்ல வில்லை என்றால் இனி உலக கோப்பையை வெல்லவே முடியாது.  வீரர்கள் தனித்து விளையாடாமல் , ஒரே அணியாக விளையாண்டால் கண்டிப்பாக கோப்பை நம் கையில் . எல்லாதிற்கும் மேலாக எல்லோருடைய கனவும் உலக கோப்பையை சச்சின் கையில் பார்க்க வேண்டும் என்பது .

இந்த பிரிவில் பங்களாதேஷ் வழக்கம் போல சில அதிர்சிகளை கொடுக்கலாம்.குரூப் b :

பாகிஸ்தான் அணியை பொறுத்த வரை அப்ரிடி, மிஸ்பா, அக்தர் இவர்களை நம்பி மட்டுமே இருக்கிறது அணி. குல்,ரசாக், நீண்ட நாட்களுக்கு பின்பு ஆடும் தன்வீர் ,அக்மல் இவர்கள் நிச்சயம் ஏமாற்றுவார்கள் . இந்த அணி அரை இறுதிக்கு முன்னேறுவது  சிரமமே.

நியூசிலாந்து இந்த அணி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்க அதிக மிக அதிக வாய்ப்பு உள்ளது.
Brendon McCullum, Jesse Ryder, Jamie How, Martin Guptill, Ross Taylor, Scott Styris, Kane Williamson, Daniel Vettori (captain), James Franklin, Jacob Oram, Nathan McCullum, Tim Southee, Kyle Mills,

இந்த பதினாலு வீரர்களில் எந்த 11 வீரர்கள் வேண்டுமானாலும் ஆடலாம் என்று, ஆல்- ரௌண்டர்கள் அதிகம் கொண்ட ஒரே அணி என்பது இந்த அணியின் பெரும்பலம். இந்த அணி பலம் அற்ற அணி என்பது உண்மை அல்ல.

ஆஸ்திரேலியா - இந்த அணி எப்போதும் பயிற்சி போட்டிகளில் வேண்டும் என்றே தோற்ப்பார்கள், பின்பு உண்மையான போட்டிகள் ஆரம்பிக்கும்போது தோற்ர்க்கவே மாட்டார்கள் என்பது இந்த முறை நடக்காது. பாண்டிங் , கிளார்க் , லீ , வாட்சன் மற்றும் டேவிட் ஹஸ்சி மட்டுமே தெரிந்த முகமாக இருப்பார்கள். அனால் இவர்கள் OUT OF FORMIL இருப்பது இந்த அணியின் குறை. மைக் ஹுசே , வைட் FITNESS  கேள்விக்குறியே ..  இந்த முறை இந்த அணி அரை இறுதிக்கு முன்னேறுவதே கஷ்டம்.

இலங்கை - இந்த உலககோப்பையின் முக்கியாமான ஒரு அணி.

தரங்கா, தில்ஷான், சங்ககாரா,ஜெயவர்த்தனா இந்த நாலு வீரர்களின் தொடக்கம் மற்றும் இறுதி ஓவர்களில் மேத்யூஸ், கப்புகதேரா,பெரேரா,
இவர்களின் ஆட்டம் முக்கயமாக அமையும். சொந்த மண்ணில் ஆடுவது இவர்களுக்கு மிகவும் சாதகம். முரளி - இவரை  பற்றி ஒன்றும் சொல்வதிர்க்கில்லை . மலிங்கா இந்த அணியின் அஸ்திரம் .


 கவனிக்க பட வேண்டிய வீரர்கள்

தென்னாபிர்க்கா - ஆம்லா, கல்லிஸ், ஸ்டெய்ன்
மேற்கு இந்திய தீவு - பொல்லார்ட், கெய்ல். பிராவோ.
இங்கிலாந்து - பீட்டர்சன் , அன்டர்சன், மோர்கன்
இந்தியா- சச்சின் , சேவாக், பதான்
இலங்கை - மலிங்கா, டில்ஷான்,முரளி
பாகிஸ்தான் - மிஸ்பா, அப்ரிடி,அக்தர்
நியூசிலாந்து - மக் கல்லம்,ரைடர்,  வெட்டோரி
ஆஸ்திரேலியா- வாட்சன்,வைட், லீ 

மொத்தத்தில் அரை இறுதியில் விளையாட போகும் நாலு அணிகள் ..

இந்தியா , இலங்கை , தென்னாப்பிரிக்கா , இங்கிலாந்து.

6 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

உங்கள் கணிப்பைப் பார்ப்போம்...

வந்தியத்தேவன் சொன்னது…

என்னுடைய கணிப்பும் ஓரளவு உங்களுடையதுடன் ஒத்துப்ப்போகின்றது, பொறுத்திருந்துபார்ப்போம்

ஆகாயமனிதன்.. சொன்னது…

//கவனிக்க பட வேண்டிய வீரர்கள்
தென்னாபிர்க்கா - ஆம்லா, கல்லிஸ், ஸ்டெய்ன்
மேற்கு இந்திய தீவு - பொல்லார்ட், கெய்ல். பிராவோ.
இங்கிலாந்து - பீட்டர்சன் , அன்டர்சன், மோர்கன்
இந்தியா- சச்சின் , சேவாக், பதான்
இலங்கை - மலிங்கா, டில்ஷான்,முரளி
பாகிஸ்தான் - மிஸ்பா, அப்ரிடி,அக்தர்
நியூசிலாந்து - மக் கல்லம்,ரைடர், வெட்டோரி
ஆஸ்திரேலியா- வாட்சன்,வைட், லீ//

கவனிக்க பட வேண்டிய வீரர்கள் என்றால் ?
ஒழுங்காக விளையாட மாட்டார்கள், கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்ற அர்த்ததிலோ ?
பதினோரு (+2) பேரில் 5 பேரை செலக்ட் பண்ணுங்க சார்....
நல்ல பதிவு !

எல் கே சொன்னது…

நெறைய கோட்டை விட்டு இருக்கீங்க நபா. மோர்கன் அணியில் இல்லை. யாரை வைத்து துவக்குவது என்று இங்கிலாந்து இன்னும் முடிவு செய்யவில்லை..

Senthil சொன்னது…

srilanka wl not make it to semifinal

senthil, doha

Guna சொன்னது…

நன்றி வந்தியதேவன், மதுரை சரவணன் .. பொறுத்திருந்து பார்ப்போம்

செந்தில் - உங்களது நான்கு அணிகளை கொடுக்கவும்.நன்றி ஆகாய மனிதன் .. :)

கவனிக்கப்பட வேண்டியவர்கள் - இந்த தொடரில் முக்கிய ஆட்டக்காரர்கள் என்று வைத்து கொள்ளலாம். நீங்கள் சொன்னது போல 14 வீரர்களை கூறினால் ..
சச்சின் , சேவாக்,ஆம்லா, கல்லிஸ்,சங்ககாரா , பீட்டர்சன் , மோர்கன், பதான்
மலிங்கா,ஸ்டெய்ன்,அன்டர்சன்,முரளிதரன், ஜெயவர்த்தனா,ரைனா.

இவர்களை எடுத்து கொள்ளலாம். (சங்ககாரா,ஜெயவர்த்தனா சேர்க்கபட்டது )5 வீரர்கள் என்றால் சச்சின் ,சேவாக் , ஆம்லா ,சங்ககாரா ,மலிங்கா) கண்டிப்பாக இவர்கள் அதிக ரன்கள் , விக்கெட்டுகள் எண்ணிக்கையில் இடம் பெறுவர்)