நம்ம தமிழ்நாடு நீதிகதைக்கும் , இப்ப நடக்குற சட்ட சபை 2011 தேர்தலுக்கு நடக்குற கதையும் PORUNTHI போய்ட்டு இருக்கு...நாம சின்ன புள்ளைய இருந்தப்ப படிச்ச/கேட்ட குட்டி நீதி கதைகளும் தற்போது நடக்கும் அரசியல் கதையும்..
இதில் தொப்பை வியாபாரி-திமுக,தொப்பி- தொகுதி , குரங்கு - காங்கிரஸ்
எடுத்த தொப்பியை எப்படி வியாபாரி திரும்பவும் சுமுகமாக மீட்பது என்பது வியாபாரிக்கு நன்றாக தெரியும். குரங்கும் லேசு பட்ட குரங்கு அல்ல.
பொண்முட்டை இடுகின்ற வாத்து அறுத்த கதை - காங்கிரஸ்
இதில் வாத்து-திமுக, அறுக்க நினைப்பவர் - காங்கிரஸ், முட்டை - ஓட்டுகள்/தொகுதி .
தன்னோட பலம் தமிழ்நாட்டில் எவ்வளவு , தணியா நின்றால் ஒட்டு எவ்வளவு என்று தெரிந்தும், திமுக விடும் தொகுதிகளை மொத்தமாக கேட்ட காங்கிரஸ்.
முயல் ஆமை ஓட்டபந்தய கதை - அதிமுக
எப்போதும் "அம்மா" தான் ஒய்வு எடுத்து வந்தார். ஆனால் இப்போது திமுக தூங்கி ...அதிமுக வெல்லும் கதையாக மாறும் போல..
விக்கிரமாதித்தன் வேதாளம் கதை - பா ம க - ராமதாஸ்
வேதாளம் முருங்கை மரத்துக்கு மரம் தாவும் ... அது போல தான் நம்ம " மருத்துவர் அய்யா" வும் .. எப்ப இந்த வார்த்தைய சொல்றதுக்கு எவ்ளோ கச்தபட வேண்டி இருக்கு :) .. இந்த வேதாளம் எப்ப பார்த்தாலும் கேள்வி கேட்டு இம்சை பண்ணும் .. அப்புறமா பல மரம் தாவி மறுபடியும் வந்து தோள்ல உக்கார்ந்துக்கும் .. இப்போதைக்கு இதுக்கு மரமும் ,விக்ரமாதித்தனும் நம்ம பாச தலிவன் மன்னிச்சுகோங்க "பாசதலைவன்" தான்.
காக்கா கல் போட்டு தண்ணீர் குடித்த கதை - தேமுதிக
இந்த காக்கா கு தண்ணி மேல வராதுன்னு தெரிஞ்சுடுச்சு ... அப்படியே விட்டா தண்ணி வத்தி போய்டும்னு புரிஞ்சுடுச்சு .. புத்திசாலிதனமா தண்ணிய மேல கொண்டு வர்ற கல் எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. இதுல கல் - கூட்டணி , தண்ணி - தொகுதி/ஒட்டு , காக்கா - தேமுதிக.
பாட்டி வடை சுட்ட கதை - மதிமுக
இதுல வடை- தொகுதி, பாட்டி - அம்மா/அதிமுக,நரி-தேமுதிக, காக்கா- வைகோ/மதிமுக
தொகுதி நிறைய கிடைக்கணும்னு நெனச்ச காக்க ஓடி வந்து மரத்துல உக்கார்ந்துச்சு.. ஆனா கடைசியா அது நரிக்கு போய்டுச்சு .. " வட போச்சே .."
கோடாரி விறகுவெட்டி கதை - விடுதலை சிறுத்தைகள் திருமா
இந்த விறகுவெட்டிக்கு இத்தன கோடரி கிடைக்கும்னு தனக்கே தெரிஞ்சு இருக்காது . இப்போதைக்கு கோடை கொடுதாவர் இவருக்கு கடவுளா தெரியறாரு .. கோடரி - தொகுதி , கடவுள் - பாசதலைவன்.
( கதைகள முழுசா எழுதி COMPARE பண்ணினா அலுத்துடும் அதான் சுருக்கமா முடிச்சுறேன் )
( கதைகள முழுசா எழுதி COMPARE பண்ணினா அலுத்துடும் அதான் சுருக்கமா முடிச்சுறேன் )
தேர்தல் முடிஞ்சு ஒட்டு எண்ணிக்கை முடிஞ்சதும் எந்த நீதிக்கதை ஜெய்க்கும்னு பார்ப்போம்.
20 கருத்துகள்:
ஹா ஹா ஹா... செம கதை...
அட நீங்களும் ஒரு கதைய சொல்லுணுக.. இல்லனா ஒரு கருத்த சொல்லிடு போங்க
கதை சொல்ல வராதுங்க...
அதான் கருத்து சொல்றோம்... பதிவு நல்லாருக்கு...!!!
athu sari.. athan KAVITHAYAA ELUTHI THALLITU IRUKKEENGALEY... NALLA IRUKKU...
nice one!
sure..I have added u to gmail chat also :)
@ samuthra nandri
அடேங்கப்பா..... செம.....!
ஃபாலோயர்ஸ் விட்ஜெட் வெக்கலியா பாஸ்? இந்த வெர்ட் வெரிஃபிகேசனை எடுத்துட்டா கொஞ்சம் நல்லாருக்கும், மூச்சு முட்டுது.....!
@ Raamsaamy-- itha neraya ber sollitaanga.... Romba neram spend panna mudiyala .. Neenga sonna rendayum eppadi pannurathunu konjam sollunga.. udane thiruthidalam
ப்ரொஃபைல் பக்கம்ல உங்க ப்ளாக் பெயருக்கு கீழே seetings optionஐ தேர்ந்தெடுத்து.. உள்ளே sub tabகளில் இருக்கும் comments பட்டனை க்ளிக்கிட்டு அதில் விரியும் பக்கத்தில் Show word verification for comments? அப்படி ஒரு ஆப்ஷன் இருக்கும்.. அதில் NOன்னு கொடுத்தா வோரட் வெரிஃபிகேஷன் போயுடும்.. Followers widget: Design->Add a gadget->Followers.
ஆஹா அருமையான கதைகள்!
Good comparison with the stories.. Liked it..!!! :)
தம்பி கூர்மதியன் - உதவிக்கு மிக்க நன்றி .... verification எடுக்கப்பட்டது. ஆனால்
Followers
Experimental -Displays a list of users who follow your blog.This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon! என்று வருகிறது.. எனினும் உதவிக்கு மிக்க நன்றி
J.P Josephine Baba, vicchu - mikka nandri :)
ஹி ஹி ...நல்ல ஒப்பீடு சகா...ரசித்தேன்
குரங்கு ஆப்பம் பிய்த்த கதையை தொகுதி பங்கீட்டுக்கு ஏற்றதாக இருக்கும்
@ kuratai puli - :)
Nice one Guna !
What about 4 cows and a Lion story?
Could it be
DMK - Congress - PMK - VC
Vs
ADMK ?
- NNN
@ NNN - ha :) u r rit :)
கருத்துரையிடுக