புதன், 16 மார்ச், 2011

பிரபல தமிழ் இயக்குனர்- மொக்கை படம்

தமிழ் சினிமாவில் இது வரை எத்தனையோ இயக்குனர்கள் வந்து பொய் இருகிறார்கள்.. அனால் அதில் நிலைத்து நின்று பெயர் வாங்குபவர்களின் சதவீதம் மிக குறைவே..

திறமை இல்லாமல் அதிர்ஷ்டம் மட்டும் வைத்து கொண்டு சினிமாவின் இந்த துறையில் நிற்கவே முடியாது. சரக்கு இல்லை என்றாலோ அல்லது சரக்கு தீர்ந்ந்து விட்டாலோ அவ்ளோதான்..  சரக்கு தீர்ந்ததும் துரதபடுவார்கள்..

நல்ல இயக்குனர் என்று வரிசைபடுதுவது மிக கஷ்டம்.. நல்ல படமாகவும் இருக்கவா வேண்டும் , வாங்கிய ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும்.. இதை செய்பவர்கள் நிலைத்து விடுகின்றனர்.. அதிலும் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுபவர்கள் கண்டிப்பா ஜெய்ப்பார்கள். சினிமா நன்கு தெரிந்தவர்களுக்கு கோப்பி அடிக்காத இயக்குன்றர்கர்களின் படங்களை கண்டிப்பாக பார்க்க விருபுவார்கள். இந்த இயக்குர்னரின் பெயர் கண்டிப்பா நிலைத்து இருக்கும்.. தொடர் தோல்விகள்  கொடுத்தாலும்  இவர்கள் பெயர் அழியாமல் இருக்கும்.

சில இயக்குனர்கள் ஒரு படத்திருக்க்ம் மறு படத்திற்கும் வித்தியாசம் கொடுத்து எதிர்பார்ப்பை கொடுப்பார்கள்... உண்மையில்  இவர்கள் அடுத்தடுத்த படங்களை விரைவாக  கொடுத்தால்   அந்த படங்கள்  வணிக ரீதியாக வெற்றி பெறாது .


1995  வரை சில மனிதர்கள் மட்டுமே நல்ல இயக்குனர்கள் என்று பெயர் எடுத்து இருந்தார்கள். இவர்கள் எதை செய்தாலும் அது புதுமை, நல்ல படம் ( அதர பழசா, மொக்கயா இருந்த கூட) என்று சொல்லுவார்கள்.

எல்லா இயக்குனரும் மொக்க படம் ஒன்னு  கொடுத்து இருப்பாங்க.


சில இயகுனார்கள் ...

பாலச்சந்தர் -  இவர தான சிகரம் என்று சொல்லுவார்கள்.. அனால் இவர் கொடுஹ்ட எல்லா படங்களும் நிச்சயமாக நல்லதாக இருக்காது. தனிபட்ட்ட மூறையில் இவரது சில படங்கள் மட்டுமே எனக்கு பிடிக்கும்.

இவரது நாலு படங்கள் தேசிய விருதுகள்  வாங்கினாலும் அதில் தண்ணீர்  தண்ணீர் மட்டுமே விருதுக்கு  தகுந்த படம்.

இவரது படங்களின் கதாநாயகிகளின் வித்தியசமான முக பாங்களை பார்த்தல் பற்றி கொண்டு வரும்.. எல்லா படத்திலும் கவனிக்கலாம். வசங்கள் விதிச்யாமாக இருக்கும் என்ற பெயரில் சுவாரஸ்யமாக இருக்கும் அனால் தனிச்சையாக  தெரியும்.

புன்னகை மன்னன், தில்லு முள்ளு, நெற்றிகண், உன்னால் முடியும் தம்பி,எதிர் நீச்சல், போன்ற படங்கள் இவரிடம் அதிகமாக வெளிப்பட வில்லை.

அரங்கேற்றம்,மனத லீலை, அவர்கள் இந்த மூணு படமும் பார்க்கணும்..

பார்த்தாலே பரவசம், ஒரு வீடு  இரு வாசல், இந்த ரெண்டு மொக்க படமும் மறக்கவே முடியாது


பாலு மகேந்திரா - நிஜமாக வித்தியாசமான  படங்களை கொடுத்த முதல் ஆள் என்ற பெயர் இவரிடம் போய் சேரும். வணிக ரீதியாக வெற்றி இல்லை என்றாலும் கண்டிப்பாக  இவரது அணைத்து படங்களும் வித்தியாசமான  முயற்சியாகவே இருக்கும். அனால் இவரது சில படங்களும் சோடை போனது உண்மை. பொதுவாக இவர் படத்தில் அனைவரும் சொல்லுவது படம் மெதுவாக நகரும் என்பது. இவரது படங்களின் ஒரு காட்சி பார்த்தாலே  சொல்லி விட முடியும்  இது இவரது படம் என்று... ஒளி  அப்படி இருக்கும்... இவரது படத்திற்கென்றே உள்ள அக்மார்க் முத்திரை.

 அது  ஒரு  காண காலம் ,ராமன் அப்துல்லா, வண்ண வண்ண பூக்கள் போன்ற சில படங்கள் மொக்கயாகி போனது.

ஜூலி கணபதி போன்ற படம் ஏற்கனவே மட்டற்ற மொழிகளில் வந்து இருனஹ்டலும் தமிழில் இந்த மாதிர படம் தன்னால் கொடுக்க முடியும் என்று நிரூபித்தவர். 

சதி லீலாவதி ஸ்பெஷல் .

இவரது ஒரே கம்ர்சியல் படம் என்னை பொறுத்த வரை - நீங்கள் கேட்டவை .மூன்றாம் பிறை - இதை பற்றி நாம் பேசவே தேவை இல்லை.
வீடு,  மூடுபனி இவரது பேரை என்றும் சொல்லி கொண்டே இருக்கும். 


மகேந்திரன்-  முள்ளும்  மலரும், கை கொடுக்கும் கை இந்த இரு படங்கள் மட்டுமே பார்த்து இருக்கிறேன்.. 
இவரது  உதிரி பூக்கள்   ,பூட்டாத  பூட்டுகள் , நெஞ்சத்தை கிள்ளாதே , நண்டு, மெட்டி  ,அழகிய கண்ணே, கண்ணுக்கு மை  எழுது
 இந்த படங்களை பார்க்க ஆசை.. யாரவது பார்த்து இருந்தால் படம் எப்படி என்று சொல்லுங்க.

ஊர் பஞ்சாயத்துனு ஒரு சரத்குமார் படம் அது இவர் டைரக்ட் பண்ணின படமாம்.. நம்ம முடியல ... ஆனைக்கும் அடி சறுக்கும்.

பாக்யராஜ் - இவரு நம்ம அஆளுங்க .. இவரது படம்ணா குஷியா  பார்க்க தோணும்..   ஆரம்பத்துல இருந்து  எல்லா படமும் ஹிட் மட்டும் தான்..


இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, டார்லிங், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, சின்ன வீடு, தாவணி கனவுகள், இது நம்ம ஆளு, ஆராரோ ஆரீராரோ, அந்த 7  நாட்கள்,மௌன கீதங்கள் , பவுனு பவுனு பவுனுதான்.. இது எல்லாமே ஆல் டைம் FAV ...

தமிழ் இயக்குனர் வரலாற்றுல இவரோட படங்கள் தான் அதிக அளவில் ஹிந்தி ல ரீமேக் பண்ண பட்ட  படங்கள்.

ஆனா இவருக்கும் ஒரு டைம் ல சரக்கு தீருந்துடுச்சு,, எனக்கு தெரிஞ்சு ராசுகுட்டி கடைசி படம் இவருக்கு,..  அம்மா வந்தாச்சு , ஒரு ஊர்ல ராஜகுமாரி,வேட்டிய மடிச்சு கட்டு,ஞானபழம் இதுல இருந்து எல்லாமே சொதப்பல்.. திரும்ப 2 -3  படம் கொடுத்ததும் அந்த பழைய டச் வரல

S .P  முத்துராமன் - ஒரே வார்த்தை அந்த கால கே.எஸ்   ரவிக்குமார். எல்லா விதமான படங்களையும் கொடுத்த ஆள் .. நெற்றிகண் , ஆடு புலி ஆடம், எனக்குள் ஒருவன்,புவனா ஒரு கேள்வி குறி, இப்படி ....

ஆனா இவரும் கிளம்புற சமயத்துல பாண்டியன் அப்படீன்னு ஒரு மொக்கைய போட்டுட்டு போன்று 

பாரதி  ராஜா -


கண்களால் கைது  செய், ஈர நிலம், கடல் பூக்கள் ,தாஜ் மஹால்   - இது எல்லாம் எடுக்காம இவரு அப்படியே போய் இருக்கலாம் . சரக்கு தீர்ந்த்டுசுனு   ஒரு பேர் வாங்கிட்டு போய் இருக்க கூடாது ..

,பசும்பொன்,கருத்தம்மா,கிழக்கு சீமையிலே, கிழக்கே  போகும்  ரயில்  ,16 வயதினிலே, ,கடலோர  கவிதைகள்  ,முதல்  மரியாதையை, அலைகள் ஓய்வதில்லை  இது எல்லாம் இவரோட தனி முத்திரை படங்கள்


எனக்கு தெரிஞ்சு  இவர் கிட்ட இருந்து வித்தியாசமா வந்த படங்கள் -

அந்திமந்தாரை ,நாடோடி தென்றல், என் உயில் தோழன், வேதம் புதிது, சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், டிக் டிக் டிக்,கல்லுக்குள் ஈரம் ,

அட இது இவர் படமானு  கேட்க வைக்குற படங்கள் -

கேப்டன் மகள்,ஒரு கைதியின் டைரி,
 அப்பவே சில  மொக்க படங்கள்

புது  நெல்லு புது நாத்து, கோடி பறக்குது, மண் வாசனை, புதுமை பெண், வாலிபமே வா  வா  ( இத அலைகள் ஓய்வதில்லை ஹிட் ல முட்டாள் தனமா எடுத்த படம்)



 பார்க்கணும்னு நினைக்குற  படங்கள் -நிழல்கள்,நிறம்,மாறாத பூக்கள் ,புதிய  வார்ப்புகள்,,
 
 
மணிரதன்ம - தமிழ் சினிமாகு புதிய வண்ணம் கொடுத்தவர்.. தளபதி, நாயகன், இருவர், இதயதை திருடாதே, மௌன ராகம்,அஞ்சலி, இதுக்கு மேல என்ன வேணும்...

ஆனா போக போக இப்படி ஆய்டுச்சு.. ஒரு படாத இந்தியா முழுசும்  மார்க்கெட் பண்ணும்னு தப்பு பண்ணுறாரு... அதுக்கு ஒரு CULTURE  ல எடுத்து டப்பிங் பண்ணி விட்டா  கூட நல்லா  ஓடும்... இப்படி கொதற ஆரம்பிச்சா அவ்ளோதான்..  ஆனால்  இன்னும் BRAND  நேம் இருக்குற குதிரை இது.. இன்னும் ஓடிட்டு  இருக்கு.. பார்க்கலாம்.. திரும்ப  அந்த MAGIC  நிகழுதான்னு .

P வாசு  - ரஜினிக்கு நாலு  படம் கொடுத்து பேர் வாங்கின ஆள்.. அதுலயும் உழைப்பாளி னு  ஒரு மொக்க படம்.. இளையராஜா தயவுல  பேர் வாங்கின இயக்குனர்.. அஜித வச்சு பரமசிவன்னு கொடுத்தாரே ஒரு படம்.. நம்ம தல சுத்தி  போய்டுச்சு ..  ஒரு நல்ல படத்ஹா  ரீமேக் பண்ணி.. ஒரு தடவ ரெண்டு தடவ இல்ல இருக்குற எல்லா மொழியலையும் ரீமேக் பண்ணி காலம் ஓடிட்டே இருக்கு. மொக்க படம் நிறைய இருக்கு... பட்டியல் நீளும் ...

சந்தான பாரதி - நிசமா சொல்லுங்க குணா , மகாநதி ரெண்டும் உங்க சொந்த படைப்பா ? உலகத்துக்கே தெரியும் ...
 
S.A  சந்திரசேகர- ஹி ஹி ஹி .. சூப்பர் பா . அந்த மொட்ட வில்லனும். கிருதா  வில்லனும், சுருட்டை முடி தலையனும் கதாநாயகி  அல்லது படத்துல இருக்குற பொண்ண  துரத்த வச்சு  படத்த துரத்திடுவாறு .

மொக்க படம் - . தல சுத்துதுடா சாமி..
 
,அகதியன் -பத்து படங்கள் எடுத்து அதுல பத்து படமும் காதல் படம்.. ஒரே மாதிரி லைன்ல படம் கொடுத்த என்ன ஆவோம்னு  அப்படீங்குரதுக்கு இவர் ஒரு எடுத்த்துகாட்டு .  இருந்தும்  காதல் கோட்டை , கோகுலத்தில் சீதை, விடுகதை  வித்தியாசாம தான்.
 
,ரவிக்குமார் - எந்த தயாரிப்பாளர்கு , எந்த கதாநாயகனுக்கு , எந்த மக்களுக்கும், எவ்ளோ காசுக்கு, எவ்ளோ நாளுக்கு எப்படி படம் எடுக்கனும்னு நாடி புடிச்ச இயக்குனர் ..  படம் வெவ்வேற மாதிர இருக்குறதுனால இன்னும் சரக்கு இருக்கு..  மொக்க படமும் விரல் விட்டு எண்ணுற அளவுக்கு இருக்கு.
 
 உதயகுமார் - ரெண்டு படம் உதவி இயக்குனர் கிட்ட இருந்து கதை  வங்கி எடுத்து முடிச்சு டைட்டில் போட்டாச்சி   .. ஆனா கமல், ரஜினி, விஜயகாந்த் இவங்கள் வச்சு ஒரு படம் கொடுத்தாலும்.. சாரி உங்கள ஏத்துக்க முடில.. .


ராஜேந்தர் - தலைவா எப்ப தலிவா ஒரு தலை காதல் படம் வரும்?  முதல் முதல் காட்சில  நான் இருப்பேன்.. வீரசாமிய ரெண்டு தடவ தொடார்ந்து பார்த்தேன் தலைவா.. இரவு ஒன்பது மணிக்கு போட்டு 2  மணி வரைக்கும் ரெண்டு தடவ பார்த்தேன் பா. என் கவளிக்கு  ஒரே மருந்து  நீங்கதான் ...

 பார்த்திபன், மணிவண்ணன், சுந்தர ராஜன்,பாண்டியராஜன்  - எல்லாரும் நல்ல படம் சில கொடுத்தாங்க.. சில மொக்க .. இப்ப காணும்..


விக்ரமன்  - லா லா லா .. முதல் பத்து படங்களும் கிட்ட தட்ட 175  நாட்கள்.. ஆனா எத்தன நாள்தான்  சிலேட்டுல  எழுதுவாங்க.. நோட் புக், லப் டாப்  வந்துடுச்சு... மரியாதைய படம் எடுங்க பாஸ்.. மரியாதை மாதிரி  படம் எடுக்காதீங்க.

 பாசில் - இன்று ராதா மோகன்.. என்றும் பாசில் ... வருஷம் பதினாறு  .. இன்னும் வருஷம் பதினாறு மாதிரி இளசா  இருக்கு.. ஆனா இப்ப ஒரு நாள் ஒரு கனவுன்னு எல்லாம் கனவாகி போய்டுச்சு


சுரேஷ் கிருஷ்ணா  - ரஜினி,கமல், விஜயகாந்த் கிடைச்சு இவங்க மூணு பேருக்கும் மொக்க படம் கொடுத்த ஒரே  ஆல். ( உபயம் - பாபா,ஆளவந்தான்,கஜேந்திரா)

உண்மைய சொல்லுங்க சத்யா எப்படி எடுத்தீங்க?

அப்புறம் ஒரே  உபயம் பாட்ஷா அதுவும் ரீமேக்..  ஆனா அத இன்னமும் ரீமேக் பண்ணிட்டு இருந்த எப்படி.. ஆங் சொல்ல மறந்துடன்பா  .. இளைஞன்  சூப்பர் ... நானும் சொல்லிட்டேன்.. டிவில  மட்டும் எல்லாரும் வந்து வந்து சொல்லுறாங்க) இந்த வச்சுக்கோ . படம் சூப்பர் சூப்பர் சூப்பர்..

ஓகே முடிஞ்ச கதை போகட்டும்.. இப்ப நம்பிகையான இயக்குனர்கள்.. அடுத்து...

3 கருத்துகள்:

Nadu Nisi Naai சொன்னது…

Why you missed Balaji? vasanth? robert rajasekar? Sridhar? kathir? etc ?

U missed enga chinna rasa in baghya list

Good analysis.

- NNN

மனசாலி சொன்னது…

நன்பரே நெஞ்சத்தை கிள்ளாதே பற்றி நான் எழுதியதை படிக்கவும் http://manasaali.blogspot.com/2011/02/blog-post_8869.html

மனசாலி சொன்னது…

ஒரு சின்ன செய்தி. இது நம்ம ஆளூ இயக்கியது பாக்யராஜ் அல்ல . பாலகுமாரன்.
ஞானப்பழம் - ஆர். பி. விஸ்வம்.