எப்பவும் நமக்கும் பேருந்து பயணத்துக்கும் அவ்வளவு பொருத்தம்.கடந்த திங்கள்கிழமை ( 02.010.2012) 6.15am கு சேலம்ல இருந்து பெங்களூர்போகலாம்னு ஒரு பஸ் ஏறினேன். சரி வழக்கம் போல நம்ம பெங்களூர் போற பஸ் கட்ட வண்டி மாதிரி ஓட்டுவார் , அதுவும் இல்லாம பத்து மணிக்கு மேல கிருஷ்ணகிரிகு போய் சாப்பிடுறதுக்குனு
அவர் மாமூல இலவசமா சாபிடுற இடத்துல போய் முப்பது நிமஷம் நிறுத்தி நம்ம பொறுமைய சோதிப்பார்னு சேலம்ல இருந்து ஓசூர் போற பஸ்ல ஏறி அங்க இருந்து பெங்களூர் போய்டலாம்னு நெனச்சு ஏறினேன். ( இவனும் முப்பது நிமிஷம் நிறுத்தினது வேற கதை ) .
பஸ் உடனே எடுக்குறோம்ன்னு வழக்கம் போல கூவி கூவி ஏத்தினார் . 6.15-6.30 குள்ள வண்டி புறப்படும்னு ஏறினா ( ஏற்கனவே இவர் லேட்டா புறப்படுறான்னு அடுத்து புறப்படுற பஸ் ல ஒரு சண்டை ) மெதுவா 6 .30கு எடுத்தார் . சரி புறப்பட்டாச்சுன்னு பார்த்தா உடனே பக்கத்துல இருந்த ஷெட்டுகு பஸ் போச்சு . காரணம் வண்டில டீசல் இல்ல !!! .
அங்க போய் இருபது நிமிஷம் நிறுத்தினார் .. காரணம் டீசல் போட ஆள் இல்ல. எரிச்சல கட்டுபடுதிக்க முடியாம , திட்ட ஆள தேடினா ஒருத்தனையும் காணும். பஸ் ல " உங்களது குறைகளை கூற தொடர்பு கொள்ளவும்ன்னு 04272312144 " நம்பர் கொடுத்து இருந்தாங்க .. அந்த நம்பர்கு போன் பண்ணினா .. யாரோ ஒருத்தர் எடுத்து .. அப்படியா சரி ன்னு சொல்லிட்டு எந்த பஸ் , பஸ் நம்பர் என்னனு கூட காதுல வாங்காம வச்சு இன்னும் சூடாக்கினார். கொஞ்ச நேரத்துல டீசல் போட ஆளோட டிரைவர், கண்டக்டர் வந்தாங்க . வந்ததும் பஸ்ல இருக்குறவங்க அவங்கள திட்ட ஆரம்பிச்ச.. அவங்க நாங்க இன்னும் சாப்ட கூட இல்ல.. அங்க இருந்து இப்பதான் வந்தோம்... வந்த உடனே மறுபடி வண்டி எடுக்குறோம்னு தங்களோட பஞ்ச பாட்ட பாடினாங்க. ஒருத்தர ஒருத்தர் குறை கூறினார்களே தவிர .. இத சரி பண்ண முடியாம ஒவ்வரு தடவையும் இது தொடர்ந்துகிட்டு தான் இருக்கு.
பஸ் தர்மபுரி வரும்போது 8.30 ஆகி இருந்துச்சு.
--------------------------------------------------------------------
இந்த வியாழகிழமை பெங்களூர் ல இருந்து சென்னை புறப்பட்ட திரும்பவும் இதே கதை. கிட்டத்தட்ட 8 - 9 மணி நேரம் வண்டிய நகர்த்தி திரும்பவும் மனம் குளிர செய்தார்கள். ( இதற்க்கு அரசு விரைவு பேருந்து , SETC சொகுசு பேருந்துன்னு சொல்லி 330 ரூபாய் கட்டணம் வேறு .. உள்ள ஒரு இருக்கை
உருப்படியா இல்ல .. ஒரு "ஸ்க்ரீன்" ஒழுங்கா இல்லை .. இதுல நாலு நாலா சுட்ட்தம் பண்ணாத குப்பை வேறு ).
எல்லாம் முடிஞ்சு இரவு பொய் வேளச்சேரி ல தங்கி எழுந்து காலைல வெளிய வந்து பார்த்த ... கண்ணுக்கு தெரிஞ்ச காட்சி இதுதான் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக