சனி, 10 மார்ச், 2012

சில பிற்போக்கு பெண்கள்

என்னதான் பெண்கள் தினம்ன்னு கொண்டாடினாலும் ..
 இன்னும்  சில பெண்கள் .. அதே அந்த  சில பழைய குணங்களோடதான்  இருக்காங்க.
 இதுல இந்த தலைமுறை  சார்ந்த  இளம் பெண்களும் அடக்கம்.

என்னதான் வெளி நாட்டுல போய் படிச்சாலும்.. வெளி மாநிலத்துல போய் படிச்சாலும் ..
பெரிய பல்கலைகழகத்துல போய் படிச்சாலும்... படிச்சு முடிச்சு பெரிய corporate  கம்பனிகள்ல வேலை செஞ்சாலும் ..
 சில பெண்களுக்கே உண்டான அந்த சில சில்லறை குணங்கள் சில பெண்களுக்கு போவதே இல்லை.

இது அவங்க பிறப்புல வந்ததா.. இல்லை வளர்ப்புல வந்ததான்னு தெரியமாட்டேங்குது... ஆனா இத இந்த குறிப்பிட்ட பெண்கள் கிட்ட இருந்து மாத்தவே முடியாது. மாற்ற நினைப்பவன் முட்டாள் ஆகிறான்.

அப்படி எந்த மாதிரி குணம் இந்த சில்லறை குணங்கள் ?
சின்ன வயசுல ஒருத்தர் கிட்ட சண்டை போட்டுட்டா.. கூட இருக்குற இன்னோர்த்தர்கிட்ட போய் அவன்/அவள் கிட்ட பேசாத .. எனக்கு அவன பிடிக்கல... அவள்./அவன் நல்லவன் இல்லை.. அவன் கூட பேசின நான் உன் கூட பேச மாட்டேன் இப்படி சொல்லுவாங்கா பொதுவா  இது அஞ்சாம் வகுப்பு வரைக்கும் படிக்குற பையன் , பொண்ணுக்கு இருக்குற குணம்.ஆனா கொஞ்ச நாள்ல பசங்களுக்கு இந்த குணம் மறந்துடுது.. ஆனா சில பெண்களுக்கு எத்தன வயசு ஆனாலும் , படிச்சாலும், என்ன சம்பாதிச்சாலும்,, வீட்ல உட்கார்ந்து இருந்தாலும்  சாகுற வரைக்கும் போறதே இல்ல.


அப்புறம் ஒரு சின்ன விஷயத்த பெருசாக்குறது எப்படின்னு இந்த மாதிரி  பெண்கள் கிட்டதான் கத்துக்கணும்.. ஒரு விஷயத்த எப்படி வேணும்னாலும் திரிச்சுட முடியும் அப்ப்டீங்குறதுக்கு   இவர்கள் சிறந்த உதாரணங்கள்.
  இந்த காலத்துக்கே உரிய பெண் ஆண் கிண்டல்களை கூட இவர்கள் விட்டு விடுவதில்லை... அதை என்ன என்ன செய்ய முடியுமோ..அந்தளவுக்கு... புல்லாங்குழல் இல்லை.. ஊதாமனை இல்லை... VACCUM  PIPE  வைத்து  இழுத்து ஊதி பெரிதாக்கி விடுவது இவர்களின் கை வந்த கலை. இவர்கள் முடிவு செய்து விட்டால ஒரு வாக்கியத்தை எடுத்து திரித்து .. அல்லது ஒரு வார்த்தையை இவர்களாக ஒரு கோணத்தில் எடுத்து.. அதை எப்படி தவறாக சித்தரிக்க முடியுமோ அதை அப்படி சித்தரித்து .. தனக்கு ஒரு விஷயத்தில் மிகவும் அக்கறை உள்ளது என்று காட்டி கூவத்து போல் பொய்யாக  மற்றவர்கள் கூறிய அந்த வார்த்தைகளை மோனலிசா ஓவியத்தை விட அழகாக சித்தரித்து அதை கெட்டது ஆக்கி இவர்கள் தன்னை நல்லவர்கள் அல்லது எல்லோருக்கும் பிடித்தவர்கள் , தனக்கு எல்லோரிடத்திலும் அக்கறை உள்ளது என்று காட்டிகொண்டு அதில் ஜெயுத்தும் விடுவார்கள் . அடுத்தவர்களை கூப்பிட்டு தனக்கு பிடிக்காத பொருளை, விஷயத்தை மற்றவர்கள் மேல் திணித்து அவர்களையும் நம்ப செய்ய முயல்வது. ஆனால் இந்த அஷ்ட லட்சமிகள் தன்னை மிகவும் பக்குவப்பட்ட ஆளாக நினைத்து கொள்ளும்போது .. குரங்குகளை பார்ப்பது போல் இருக்கிறது.


 இந்த பெண்களை இப்படி கோபமாக சொல்வதற்கு காரணம்.. இவர்கள் போன்ற சில பெண்களால மொத்த பெண்களையே மற்றவர்கள் " இந்த பெண்களே இப்படிதான் என்று கூற வைத்து விடுவதால்தான்"  இவர்களால் தேவையற்று மற்ற  சில பெண்களை பர்ர்கும்போது தேவையற்ற எண்ணங்களை தோற்றுவிக்கிறது.

இதில் இன்னொரு வருத்தப்பட வேண்டிய விஷயம் இந்த பெண்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பும்  மற்றவர்கள்.  சில பெண்கள் இவர்கள் கூறுவது சரியா என்று கூட தெரியாமல் .. நான் இவருக்கு நெருக்கமானவர் .. இவர் என்ன செய்தாலும் நம்புவேன் என்று தேவை இல்லாமல் மட்டர்வர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்கிறார்கள்.. இவர்களுக்கு தெரியவில்லை .. இதே நிலைமை ஒரு நாள் தனக்கும் வரும் என்பது.

சிலர்.. இவர் எனக்கு வேண்டியவர் இவருக்காக  பிடிக்காமல் இந்த காரியத்தை செய்கிறேன் என்று சொல்லும் இவர்களால்.. "உனக்கு பிடிக்காத விஷயத்தை என் மேல் திணிக்காதே" என்று சொல்ல நாக்கின் நரம்பு வளைந்து கொடுப்பதில்லை. இதை விட சில ஆண் வீரர்கள் இருக்கிறார்கள்.. பெண்கள் சொன்னால் பொங்கி  விடும் இவர்களுக்கு... கண்,காது மட்டும் மூடிகொல்லாமல் இருக்கும் மூளையையும் களிமண்ணால் பூசிக்கொண்டு.. வீர வசனம் பேசுவார்கள் .. முன்னால் சொன்ன ஆட்களை கூட  மன்னித்து விடலாம்.. இந்த வீர திருமகங்களை ... என்ன செய்வது?  இந்த மாதிரி பெண்களின் மஞ்சளை எடுத்து பூசி விடலாமா என்று தோன்றுகிறது..

 இந்த வீர தீர திருமகன்களுக்கு இப்படி குரங்கு குணம் பிடித்த பெண்களின் பேச்சை கேள்வி இன்றி கேட்பார்கள்.. சாக கிடக்கும் ஆண்களை காணாதது போல் விட்டு செல்வார்கள்..

- இது - தவறி செய்ய வில்லை என்றாலும் .. இன்னொருவர் இது தவறு என்று நினைத்து அமைதியாக "இது வேண்டாம்" என்று சொல்பவர்களுக்காக  ... தவறை தன மேல் போட்டு கொள்ளும். மற்றும் தவறு செய்யாமல் தவறு செய்தது போல் மற்றவர்கள் சொல்லும்போது... திருப்பி அறையும்  ஆட்களுக்காக..

"குறிப்பிட்ட  குணம்  அந்த  பெண்கள்  மட்டும்" 

( என் தனிப்பட்ட நடைமுறை வாழ்கையில் கண்கூடாக பார்த்தது சம்பவம்  இது...  மேலும் ஆரம்ப காலங்களில் மோதலிலும் , முட்டிகொண்டே இருந்த பெண்களிடம் .. கடைசி வரை நல்ல நட்பாக இருக்கின்ற பெண் நண்பர்கள்  உண்டு.. ஆனாலும் இந்த பெண் நண்பர்கள் பிடிக்காத காலத்திலே முதுகில் குத்தியது இல்லை.. தனக்கு பிடிக்காதவரை பற்றிய அவர்களது சொந்த கருத்துகளை மற்றவகள் மேல் திணித்து இல்லை.... கருத்து வேறுபாடுகளால் வந்த சண்டைகள்.. பின் தீர்ந்து நண்பர்களாக மாறும்போது... அது குடும்ப நண்பர்களாகவே மாறி போகிறது )

 

கருத்துகள் இல்லை: