ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

சென்னையில் நான் 2 திருடன்

ஒரு வருடம் தானே  சமாளித்து விடலாம்  என்று  சென்னை வந்து சேர்த்தேன்.. இங்கு சாலையில் சில  வண்டி ஓட்டுபவர்களையும் , கடை வியாபாரிகளையும் , சக பயணிகளையும், ஆட்டோ காரர்களையும் வைத்தே ஒரு நூறு கட்டுரை எழுதி விடலாம் .. இங்க இதை சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று.. சமாதான படுத்திகொண்டு சென்னை வெயிலோடு சேர்ந்து ஓட ஆரம்பித்தது நாட்கள்..

சரி  இந்த ஒரு  வருடம் இங்கு தங்குவதற்கு வீடு பார்க்கலாம் என்று .. வீடு தேட தொடங்கிய போது கூடவே தொடங்கியது ஆத்திரம்.

வடபழனி , விருகம்பாக்கம், வளசரவாக்கம் , போரூர், கிண்டி இந்த இடங்களில் தேடலாம் என்று தொடங்கியது ..

முதல் சோதனை - புரோக்கர்  - சரி இணையத்தில தேடலாம்  என்று தேடிய போது ப்ரோகேர்களால் அலங்கோல பட்டு கிடந்தது இணையம். ஒரு இடத்தை ஒரு நாலு நபர்கள் வளைத்து பல போன் நம்பர்களை பயன்படுத்தி அலைகழிக்க தொடங்கினார்கள்.

சரி நாமாகவே போய் தேடலாம் என்று போனால் .. அங்கு வீடு ஓனர் "வீடு காலி"  என்று எழுதி ஒரு அட்டை வைத்து இருந்தால் , அதில் இருக்கும் நம்பர்களை அழித்து  இவர்கள் நம்பர் போட்டு அட்டையை மாற்றி வைத்து இருந்தனர் .. மொக்கை வீடுகளை காண்பித்து ஒரு மாத வாடகையை இவர்களது கமிஷனாக வாங்கும்  இவர்களது பொது சேவையை தொடர்ந்து.. நாமாகவே தெரு தெருவாக தேடலாம் என்று முடிவெடுத்து தேட தொடங்கினேன் . 


இரண்டாவது சோதனை - வீட்டு ஓனர் ; வழக்கம் போல கல்யாணம் ஆகி இருந்தால் மட்டுமே வீடு, மற்றும் இவர்களது பேசும் தோரணை என்று வெறுப்பேற்ற கடைசியாக ஒரு வீடு கிடைத்தது ..


மூன்றாவது சோதனை - ஒரு அயோக்யன் :

சரி எல்லாவற்றையும் சகித்து கொள்ளலாம் என்று ஒரு வீட்டு ஓனரிடம் சரண் அடைந்தேன் ..

எல்லாவற்றையும் சகித்தது என்பது...

பார்த்த 99  சதவீத ஓனர்கள் கூறியது -

அட்வான்ஸ் தொகை என்பது நாம் வீடு காலி செய்யும்போது கடைசி மாதமோ அல்லது கடைசி இரு மாதமோ வாடகை பணம் தராமல் போய் விட்டால் என்ன செய்வது என்று இவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதம் வாடகை பணத்தை வாங்குவது .. தற்போது பத்து மாதம் அல்லது 12  மாதம் என்று மாறியது . இப்படி மாறியதற்கு காரணம் .. இதில் கிடைக்கும் ஐம்பது ஆயிரம் முதல் லட்சம் வரையிலான பணத்தை இவர்கள் வட்டிக்கு விட்டு அதில இருந்து மேலும் சில ஆயிரம் ஒவ்வரு மாதமும் சம்பதிப்பதர்க்காக ...  ஐம்பது கொடுத்தாலும் வெள்ளை அடிக்கிறேன் என்று நமது பணத்தில் இவர்கள் ஒரு பத்தை பிடுங்கி ,  மேலும் இதர செலவு என்று மேலும் ஐந்து முதல் பாத்து வரை பிடித்து இறுதியில் நமக்கு கொடுப்பது ஐம்பதில் முப்பதோ அல்லது முப்பத்தி ஐந்தோ ..

இரண்டாவது .. என்னால் சகித்து கொள்ளவே முடியாத ஒன்று .. மின்சார கட்டணம் . அதாவது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 4 .50  ரூபாய் என்று கட்டணம் வசூலிப்பது . தனி மீட்டர் என்று இருந்தாலும் இவர்களது இந்த கொள்கையில் இருந்து விட்டு கொடுப்பதாக இல்லை .. இது தவிர தண்ணீர் மோட்டார்க்கு  நூறு முதல் நூற்று ஐம்பது வரை வசூலிப்பது . MAINTANANCE  என்று மேலும் ஒரு நூறு சுரண்டுவது . வீடு இருப்பதோ  ஒரு ஹால் , ரூம், கிட்சேன் , பாத் ரூம் .. இதற்க்கு 6 ஆயிரம் கொடுத்து மேலும் 3  ஆயிரம் இப்படி சுரண்டுவது .

இந்த வரைமுறையில் இல்லாத வீட்டை தேடி தேடி சிக்காமல் ஒரு மாதம் களைத்து ( ஒவ்வரு நாளும் நான்கு மணி நேரம் நடந்தே தெரு தெரு வாக சுற்றிய பின்பு ) .. சரி நாமும் இதில் விழுவோம் என்று வீட்டு ஓனர் ஒருவனிடம் சிக்கினேன் ..

வீட்டை  பல பேர் வந்து கேட்கிறார்கள் இப்போதே பணம் கொடுங்கள் , உறுதி படுத்துங்கள் என்ற  அவனது தெரிந்த பொய்க்காக சரி  போகட்டும் என்று  பணம் 25  ஆயிரம் கொடுத்து மீத பணத்தை வீட்டு சாவி வாங்கும்போது கொடுக்கிறேன் என்று ஒரு மின் விசிறியையும் மாட்டி விட்டு வந்தேன்.  அடுத்த நாள் மின்சார கட்டணம் உயர்வு .. ( இவனிடம் 4 .50  / யூனிட் என்பதற்கு ஒப்புதல் அளித்து ஆனால் இதற்க்கு மேல் உயர்த்த கூடாது என்று அவன் ஒப்புதல் வாங்கி வந்தேன் .. எனக்கு மின்சார  உயர்வு அரசிடம் உண்டு என்பது தெரியும் )..

அடுத்த நாள் - இன்னும் இரண்டு நாட்களில் வருகிறேன்.. BOND  ரெடியா என்று கேட்டேன்.. அவன் தருவதாக ஒப்புதல் அளித்த BOND  தர மாட்டேன் .. நம்பிக்கை இருந்தால் வாங்க என்று சொன்னான்.. இதற்க்கு ஒரு மணி நேரம் வாக்கு வாதம் நடந்து  முடிவு தெரியும் முன்னரே மின்சார கட்டணம் 7  ரூபாய் / யூனிட் என்று  சொன்னான்.  வெறுப்பின் உச்சத்திற்கு சென்று மீண்டும் ஒரு மணி நேரம் வாக்கு வாதம்.. கடைசியில் வீடு வேண்டாம் என்று சொல்ல.. நேரில்   போய் பணம் கேட்கும்போது .. ஒரு மாத வாடகையாக 5500  ரூபாய் பிடித்து கொண்டு மீதம்  தந்தான் அவன் ..பார்கிங் கூட இல்லாத வீடிற்கு , ஒரு பல்பு, மின் விசிறி கூட இல்லாத ஒரு நிமிடம் கூட தங்காத வீட்டிருக்கு  வீட்டிற்கு ஒரு மாத வாடகை தந்தது நானாகத்தான் இருக்கும்.

 இப்போது நல்லபடியாக ஒரு வீடு தெரிந்தவரால் கிடைத்தது.. மின் விசிறியை மீட்க நாளை போக வேண்டும் .. இவனிடம் இது வரை நடந்த தொலைபேசி உரையாடல் , நேரில் நடந்த உரையாடல் அனைத்தும் ரெகார்ட் ஆகி உள்ளது.. ஆனால் வீடு , வாடகை, அட்வான்ஸ் சம்பந்தமாக சட்ட ரீதியாக அணுக முடியாது என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.. தொலையட்டும் சனியன் என்று விட்டு விட்டேன்.  ஆனால் ?????  இவனை போன்ற ஆட்களுக்கு பாடம் புகட்ட என்ன செய்வது ? புகட்டுவேன் விரைவில் என்று தோன்றுகிறது ... ( அந்த வீடு , மற்றும்  அந்த ஆளின் புகைப்படம் இந்த வாரத்திற்குள் பதிய முயற்சி செய்கிறேன் )
 


1 கருத்து:

Guna சொன்னது…

I dont know hwat time i wrote this by today morning in radio city's prg with munna is about this issue...