செவ்வாய், 19 அக்டோபர், 2010

AAYUTHA POOJAI

சென்ற வாரம் ஆயுத பூஜை .. நான் வேலை செய்யுற ஆபீஸ் ல கூட பூஜை போட்டோம்.. எங்க கம்பெனி 5 joint கம்பெனி.. எல்லா இடத்துலயும் ஒரே பூஜை தான்.. ஒரே பூசாரி தான்  பூஜை போட்டாரு.. ஒரு வாரத்துக்கு முன்னாடியே அவருக்கு தனி தனியா  ஒவ்வரு BRANCH ல இருந்தும் பூஜைக்கு சொல்லிட்டாங்க..

பூஜைக்கு ரெண்டு நாள் முன்னாடி சாயுங்காலம் நான் அந்த POOSARI கொடுத்து இருந்த பூஜை லிஸ்ட் பார்த்தேன்..  அதாவது அது ஒரு PRINTED லிஸ்ட் அதுல அவரு, எது எல்லாம் தேவையோ அது எல்லாத்தையும் டிக் பண்ணி இருந்தாரு..

பார்த்ததும் புரிஞ்சது  எல்லாமே ப்ரோடீன் ITEM.. இதுல இன்னொரு மேட்டர் அதுல அவருக்கு தேவையான கரெக்டா அவர் சைஸ் ல ஒரு வேஷ்டி டிக் பண்ணி இருந்தாரு .. இதுல இன்னொரு மேட்டர் அதுல எந்த  கடைல  வாங்கனும்னு கூட டிக் குறிப்பு எழுதி  வச்சு இருந்தாரு.

வாழ்க பூசாரியின்  புத்திசாலிதனம்..

அடுத்த நாள் இன்னொரு BRANCH ஆபீஸ்கு போய் இருந்தேன்,,, அங்க பூஜை லிஸ்ட் பார்த்தேன்,  இதுக்கும் அதே பூசாரிதான் .. அங்கயும் அதே பூஜைதான்  ஆனா விஷயம் என்னன்னா, அங்க அவர் வாங்க சொல்லி குடுத்து இருந்த பூஜை சாமான் லிஸ்ட் வேற !!!!!!!!! ஒரு மூணு ITEM மட்டும் தான் அதே item மத்தது எல்லாம் வேற item ..

மறுபடியும் பூசாரியின்  புத்திசாலிதனம் வாழ்க ..

அதுக்கு அடுத்த நாள் பூஜை.. வந்தாரு ரொம்ப லேட்டா .. கேட்டதுக்கு  இன்னும் பல இடத்துல இருந்துச்சு பூஜை, அதான் லேட்னு சொன்னாரு .. இன்னும் பல இடத்துக்கு போகணும்னு சொன்னாரு.. அப்புறம் பூஜை பண்ண ஆரம்பிச்சப்ப அவர் கேட்ட இன்னொரு கேள்வி.. பூஜை எவ்ளோ நேரம்  பண்ணனும்?  பதினஞ்சு நிமிஷம? ஒரு மணி நேரமா ? அரை மணி நேரமா? இங்க அரை மணி நேரம்னு சொன்னாங்க.

 டைம் பார்த்து .. ஓகே சொன்னாரு.. ஆரம்பிச்சாரு.. இடைல  நெறைய  போன் கால் .. பேசிடே பூஜை பண்ணினாரு..  ( அநேகமா அடுத்த தடவ இவரு வேற  இடத்துல பூஜை பண்ணும்  போது , அதே சமயத்துல இங்க போன் பண்ணி, LOUD SPEAKER ல போடா சொல்லி, ஒரே கல்லுல நம்ம ஆளு ரெண்டு மாங்காய் அடிப்பாரு)


ரஜினி, படத்துல சொன்ன மாதிரி  எங்க ஒருத்தன் கிட்ட இவ்ளோ அடிச்சா அன்னைக்கு பூரா எத்தன பேர் கிட்ட எவ்ளோ அடிப்பாரு!!!!!!

வருஷத்துக்கும் இது போதும்..

கண்டிப்பா அடுத்த அடுத்த இடத்துல புடவை, துண்டு, சால்வைனு  துணி கேடு இருப்பாரு .. ( ஆனா கோயிலுக்கு  வெளிய இருக்குற பிச்சைகாரனுக்கு ஒரு ருபாய் பிச்சை போட்டு இருக்க  மாட்டாரு).

பூசாரிங்க  சந்தோஷபடுற ரெண்டு நாள் குடியரசு தினம், சுதந்திர தினமா  இருக்காது.. கண்டிப்பா ஏப்ரல் 1  & ஆயுத பூஜையா தான் இருக்கனும்..

கோயில்ல போனா கூட அங்க வர்ற முக்கியாமான ஆளுங்க அதாவது தட்டுல அதிகமாக காசு போடுறவங்க ( இவங்க கூட அடுத்தவங்க பார்க்குறாங்கனுதான்  காசு அதிகமா போடுவாங்க)   அவங்களுக்கு மட்டும் பூசாரிங்க வரிசை ரூல்ஸ் கிடையாது ..  தட்டுல காசு போட்ட, புன்முறுவலோட கைல விபூதி வச்சு, பூ கொடுப்பாங்க  ,,, காசு போடலனா அதே  விபூதி பறந்து வந்துதான் நம்ம கைல  விழும்..

இதே சமயத்துல இன்னொரு செய்தி... எப்பவும் நாத்திகம் பேசுற நம்ம ஆள் கூட இப்ப பூசாரி, கோயில் அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள்னு அறிவிப்பு பண்ணி இருக்காறு... எப்பவும்  இவங்களுக்கு எஅதிரான  ஆளு... இப்படி ஒரு சூப்பர்  அறிவுப்பு கொடுத்து இருக்காரு ..

தேர்தல் நெருங்குதோ?:?

கருத்துகள் இல்லை: