திங்கள், 17 ஜனவரி, 2011

தமிழ் சினிமா - திரை அரங்குகள், டிவி மறக்கபட்ட படங்கள்

இப்ப எந்த ப்ளாக் பார்த்தாலும் ஆடுகளம், சிறுத்தை, காவலன், இளைஞன் இத பற்றியே ஓடிட்டு இருக்கு ... நாமளும் பார்த்தாச்சு ... ஆனா எழுதி  எழுதி இன்னும் போர் அடிக்கனுமான்னு தோணுது ...  தேவையான் அளவுக்கு இந்த படங்கள்ல பற்றி போற்றியும், தூற்றியும் எழுதி தள்ளிட்டாங்க ....

நாம இப்ப இருக்குற சினிமாவ கொஞ்சம் பொதுவா திரும்பி பார்த்து யோசிச்சா ... புதுசா ஒண்ணு தோணுது அது திரையரங்குகள் / திரையரங்கு உரிமையாளர்களால் மறக்க பட்ட படங்கள் மற்றும் டிவி யால் மறக்கப்பட்ட படங்கள் .

இன்னைக்கு தேதிக்கு பெரிய படம் எடுக்குறவங்களும், அத விநியோகம் பண்ணுறவங்களும் அந்த பெரிய படம் டப்பா படமா இருந்தாலும் கைய சுட்டுக்க்க மாட்டாங்க . ஆனா தியேட்டர் உரிமையாளர்கள் தான் பனால் ஆய்டுறாங்க. நடிகுறவனுக்கும், எடுகுறவனுக்கும் பெருசா ஒன்னும் பாதிப்பு வர்றது இல்ல . தொடர்ந்து மொக்க படம் குடுத்துட்டேதான் இருக்காங்க.

இதுல முக்கியமா படம் பார்க்குற நாமளும் நொந்து போயிடுறோம்.

இப்படி புதுசா ஒரு படத்த எடுத்து ஓட வச்சு கைய சுட்டுகுறதுக்கு பதிலா, நாமளும் போய் நொந்துட்டு போறதுக்கு பதிலா,  நோகாம இருக்க சில டைம்ல பழைய படங்கள் கூட நமக்கு வொர்க் அவுட் ஆகும் .

1980 - 90 ல ஒரு பழக்கம் இருந்துச்சு ... அதாவது  செகண்ட் ரிலீஸ் .. ஓரளவு ஓடின படமோ அல்லது நல்லா ஓடின படத்தையோ திரும்ப ரிலீஸ்  பண்ணுவாங்க.

அந்த மாதிரி இப்பவும் முயற்சி பண்ணி பார்க்கலாம் . அதாவது ஒரு புது படம் எடுத்து ஓடாத சமயத்துல அல்லது படம் ரிலீஸ் ஆகாத டைம்ல ... ஒரு நல்ல பழைய படத்த எடுத்து ஓட வைக்கலாம் . அந்த சமயத்துல ( அல்லது நாம வாண்டா/ குழந்தையா) அந்த படத்த தியேட்டர்ல பார்க்காத நமக்கும் இது  ஒரு புது அனுபவமா இருக்கும்.

ஆனா இந்த முயற்சி பண்ணும்போதும் கொஞ்சம் யோசிச்சு பண்ண வேண்டி இருக்கும். அதாவது நல்ல படமா மட்டும் இருந்தா போதாது , அது கண்டிப்பா ஜாலியா இருக்குற படமாவும் இருக்கணும் அப்ப தான் கல்லா கட்ட முடியும்  , அடிகடி டிவில போட்டும் இருக்க கூடாது.. அப்படியே  போட்டு இருந்தா கூட அத திரும்ப தியேட்டர்ல பார்க்க முடியற அளவுக்கு இருக்கணும். ரீமேக் செய்ய பயப்படுற  படமா இருக்கனும் .

இப்ப டக்குனு எங்கு தோனுற அந்த மாதிரி சில படங்கள் ... தில்லு முள்ளு ,நெற்றிகண், தளபதி , மன்மதலீலை , அரங்கேற்றம், குருதிபுனல் , குணா ,கரகாட்டகாரன் , அரங்கேற்றவேளை , தூறல் நின்னு போச்சு , சின்ன வீடு, முந்தானை முடிச்சு , இன்று போய் நாளை வா , இதயத்தை திருடாதே , வருஷம் 16 , இது நம்ம ஆளு , பவுனு பவுனுதான் , ஆண் பாவம் , கன்னி ராசி  இந்த மாதிரி படங்கள்.. இன்னும் அப்போதைய mgr சிவாஜி ஹிஸ்டாரிகல் படம் .. இது எல்லாமே எடுபடும்.

கண்டிப்பா நல்ல தியேட்டர்ல நல்ல சவுண்ட் சிஸ்டம் வச்சு தினமும்  ஒரு ஷோ போட்டா கூட கண்டிப்பா கல்லா கட்டிடும் .

இதே மாதிரி நம்ம டிவி லகூட சில அப்போதைய commercial  படங்கள் நெறய போடுறது இல்ல... அரைச்ச மாவையே  அரைச்சுட்டு இருக்காங்க.
சில மறக்க பட்ட படங்கள் ...  காலயுயம் நீயே  மாலையும் நீயே, வண்டிசக்கரம் , வேலை கிடைச்சுடுச்சு , மாவீரன் , அரங்கேற்ற  வேலை , விடியும் வரை காத்திரு , பாலம்  இப்படி பல ஹிட் அடிச்சா படங்கள் போடுறது  இல்ல . விஜய் டிவி கூட தன்னோட "பேசும் படம் " மறந்துடுச்சு .
 ( பொதிகை, பாலிமர் , தமிழன் இப்படி வளராத சேனல்ல சில மறக்க பட்ட படங்கள பார்க்க முடியுது )

அதே மாதிரி எனக்கு தெரிஞ்சு அணைத்து சேனலையும் சேர்த்து ( பொதிகை , சன் , விஜய், கலைஞர், தமிழன் , கே , வசந்த் , ராஜ் , ஜெயா ) அதிக தடவ போட்ட படம் " சிங்கார வேலன்" . இந்த படம் 100  நாள் அப்ப ஒடுசோ இல்லையோ கண்டிப்பா இது வரைக்கும் டிவி ல 100  தடவ தாண்டி இருக்கும் .

3 கருத்துகள்:

Nadu Nisi Naai சொன்னது…

Innum sila:

- Guna
- Raajapaarvai
- Udhiri pookal
- Nandu
- Aarilirundhu arubadhu varai
- Mandhira punnagai
- Idhayam
- Johny
- Aval appadithaan
- Neer kumili
- Sarvar sundaram
- Soapu seepu kannadi
- Edhir neechal
- Adhey kangal
- Bhuvana oru kelvikuri
- Vaathiyar veetu pillai
- Enga veetu pillai
- Urimai kural
- Ulagam sutrum vaaliban
- Paasamalar
- Paaga pirivinai
- Nammavar
- Paarthal pasi theerum
- Neeya
- Avargal
- Aanpavam
- Vaai koluppu
- Mudhal Mariyadhai
- Pudhiya paadhai
- Poovey poochodava
- Idhaya thamarai
- Mouna raagam
- Sathya
- Mahanadhi
- Virumaandi
- Hey raam
- Captain prabhakaran
- Enga ooru paattukaran
- Pudhu vasandham
- Vaanamey ellai
- Azhagan
- Roja
- Gokulam
- Sathriyan
- Amaidhi padai
- Nadigan
- Chinna thambi
-
innum...innum ...innum....pala pala...solli maalaadhu....

Unknown சொன்னது…

தீ- ஐ அணைத்ததற்க்கு நன்றி. கொஞ்சம் word verification ஐயும் எடுத்துவிட்டால் உங்களுக்கு பின்னூட்டமிடுபவரின் எண்ணிக்கை கூடும்.

Guna சொன்னது…

Nandri.. Iniyan... Nadu nisi naai