வெள்ளி, 22 ஜூலை, 2011

ராகுல் டிராவிட் - இவர் பெற்ற சாபம்.

டிராவிட் இவரது சாதனைகள் கிரிக்கெட் உலகம் அறிந்தது. இவரை பற்றி புகழ்ந்து எழுத நிறைய இருக்கிறது. ஆனால் இவரை எத்தனை  பேர் புகழ்ந்து எழுதி இருகிறார்கள்? கிரிக்கெட் உலகத்தில் இவருக்கும், இவரது சாதனைகளுக்கும் சரியான அங்கிகாரம் கிடைத்ததா? இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்கும்.
இவரது சாதனைகளை பற்றி அனைவருக்கும் தெரியும்.

கிரிக்கெட் வரலாற்றில் உண்மையான  நுணுக்கமான நேர்த்தியான வீரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அதில்  நிச்சயம் இவரது பெயர் இருக்கும்.

அனால் இவருக்கும் இவரது ஆட்டதிறனுக்கும் உலக அளவிலோ அல்லது இந்தியாவிலோ சரியான அங்கிகாரம் யாருமே சரியாக கொடுத்ததில்லை. தொடர்ந்து இவர் எமாற்றபட்டுகொண்டேதான் இருக்கிறார்.

தற்போது கூட 2000  வது டெஸ்ட் போட்டி நடப்பதால் , அதற்காக 11  பேர்  கொண்ட டெஸ்ட் வரலாற்று அணி ஒன்று தேர்வு செய்ய ஐசிசி  வீரர்கள் சிலர் பெயர்களை அறிவித்தது. அதில் இவரது பெயர் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3 வது வீரராக  களம் இறங்குவது என்பது மிக முக்கியமான ஒன்று.  அதில் தற்போது மட்டும் அல்ல எப்போதுமே இவர்தான் தலைசிறந்தவர். அனால் இவரது பெயர் இடம் பெறவில்லை. பாண்டிங் பெயர் கூட இடம் பெற்று இருந்தது. பாண்டிங் சாதனைகளை படைத்தது இருந்தாலும் அவரது பெயர் இடம்பெறும்போது இவரது பெயர் இடம் பெறாதது முட்டாள் தனமே. டிராவிட் என்றால் கிளாசிக் . இவரது தரமும் , நுணுக்கமும் சச்சினை விட எந்த அளவிலும் குறைந்தது அல்ல. பாண்டிங்கை விட கடினமான சூழ்நிலைகளில் எப்போதும் ஆட்டத்தில் குதிப்பவர் டிராவிட். எப்போதும் இவரது நங்கூர ஆட்டத்தை எதிர்பார்த்து  களம் இறங்கும் இந்திய அணி. இன்னும் இவர்கள் இருவரது ரெகார்ட்களை ஒப்பிட்டு பார்த்தால் கூட இருவரும் சமமாகவே இருப்பார்கள். அனால் நுணுக்கத்திலும் , இக்கட்டான நேரங்களிலும் பாண்டிங்கை விட பலபடிகள் டிராவிட் முதன்மையானவர்.

இது உலக அரங்கில் மட்டும் அல்ல.. எப்போதும் டிராவிட்கு தொடர்ந்து இந்தியாவில்  கூட இவருக்கு நடந்து வரும் கதைதான்.

இந்தியா கிரிக்கெட்  ஆட தொடங்கியதில் இருந்து இன்றுவரை ஆடிகொண்டிருக்கும்  "ஜென்டில்மேன்" களை ஒரு கை விரல்களில் எண்ணி விடலாம். ஒரு மேட்ச் ஆடிக்கொண்டு திமிராக இருக்கும் வீரர்களை போல் இல்லாம எப்போதும் ஒழுக்கத்தை
கடைபிடித்து வருபவர்.  

முக்கியமாக சுயநிலம் இல்லாத  வீரர்.
 சொந்த சாதனைகளுக்காக  இல்லாமல் அணிக்காக ஆடுபவர்.

"இவர் இறங்கும்போது ஒரு கையில் பேட் மறுகையில் இந்தியகொடியோடு இறங்குவார்" 
என்று கபிதேவ் ஒருமுறை குறிப்பிட்டார். 
இதுபோல் ஒரு வீரரை இந்தியாவில் மட்டும்அல்ல உலக அரங்கிலும் இந்த வீரரையும் பார்த்து சொல்லவே முடியாது. 

 உலககோப்பை முதல் சுற்றில் வெளியேறியபோது எல்லாரும் சொதப்பியபோதும் இவர் மட்டும் தனியாக  ஆடிக்கொண்டு இருந்தார். ஆனாலும் தோல்விக்கு பொறுப்பேற்று தானாக பதவி விலகினார். அப்போது தற்போது காப்டனாக இருக்கும் ஆள் கூட ரண்கள் ஏதும் எடுக்காமல் குதிரை போல பெவில்யன் வீரமாக நடந்தது நியாபகம் இருக்கிறது.  அதருக்கு ஆறு மாததிருக்கு பிறகு ஆஸ்திரேலியா இந்திய சுற்றுபயணம் வந்த போது இவர் 6 ,7  வீரார்க களம் இறக்கப்பட்டார் .. 45  ஓவர்கு பிறகுதான் களம் கண்டார் அதில் 3  போட்டிகளில் சோபிக்க முடியவில்லை என்று காரணம்  காட்டி விலக்கபட்டார்.. கங்குலியும் காணமல் போன  சமயம் அது. அன்று முதல் ஒருநாள் அணியில் இவரது வயது காரணம் காட்டி இடம் பெறவே இல்லை.

பௌன்சர்களை எதிர்கொள்ள முடியாமல் அணைத்து வீரர்களும் மன்னைகவ்வியபோது .. திடீரெண்டு தேர்வாளர்களுக்கும்,கேப்டனுக்கும் இவர் கண்ணுக்கு தெரிந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு மினி உலககோப்பையில் சவுத் ஆப்ரிக்கா செல்லும் அணியில் இடம்பிடித்து மீண்டும் திறமையை நிரூபித்தார். அனால் வழக்கம் போல மற்றவர்கள் சொதப்பி அணி தோல்வி  கண்டது. அதருக்கு பிறகு இன்றுவரை அணியில் இவர் இடம் பெற வில்லை இனியும் இடம்பெற மாட்டார் வயது காரணம் காட்டி. அனால் சச்சினின் அனுபவத்திற்கு சமமாக இவரது அனுபவமும் கை கொடுக்கும். இந்த 3  ஆண்டுகளில் சச்சின் ஒய்வு பெற்ற தொடர்களிலாவது அவருக்கு பதிலாக இவரை இடம்பெற செய்து இருக்கலாம்.


யுவராஜ் , டோனி, ரைனா ,சேவாக் ,கம்பீர் ஒரு சதம் அடித்து பாத்து போட்டிகளில் சொதப்பினாலும் தூக்கிவைத்து கொண்டாடும் இந்தியா, இவர் தொடர்ந்து சிறப்பாக 50  ரன்களி அடித்தாலும்  கண்டுகொள்ளது. ரசிகர்களுக்கும் சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் அவுட் ஆகும் வீரர்களின்  படங்களைத்தான்  பர்சில் வைத்து கொண்டு இருப்பார்கள்.

இதோ... நாளையே இவர் டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரர் என்ற பெயரை எடுப்பார் .. ஆனாலும் அப்போதும் இவருகேன்று ஒரு அங்கிகாரம் இந்தியாவில் கிடைக்காது.அது இவருகேன்று எழுதி வைக்கப்பட்ட சாபம்.

அனால் சச்சின், டிராவிட்  இவர்கள் இருவர்தான் உண்மையான  நுணுக்கமுள்ள ,நேர்த்தியான சிறந்த  கிரிக்கெட் விளயாட்டு வீர்கள் என்பது உண்மை. பெரும்பான்மையான மற்ற இந்திய வீரர்கள் மழை நேரத்தில்  வரும் ஈசல்கள் போன்றவர்கள்.. காலபோக்கில்  மறகடிக்கபோககிறவர்கள் என்பது உண்மை.  


முடிஞ்சா இவர பத்தி கொஞ்சம் எழுதுங்க ....16 கருத்துகள்:

அசோக் குமார் சொன்னது…

உண்மைதான் கங்குலி கப்டனாக இருந்தபோது கூடுதலாக இன்னொரு பாட்ஸ்மேனை சேர்க்க வேண்டி இவர் விக்கெட் கீபெராக 3 -4 வருடம் ஆடினார். சுயநலமற்ற ஆட்டக்காரர். நல்ல பதிவு அருமை நண்பா !!!

Guna சொன்னது…

Nandri.. Yes. atha solla maranthuen.

அதிலை சொன்னது…

//ஒரு மேட்ச் ஆடிக்கொண்டு திமிராக இருக்கும் வீரர்களை போல் இல்லாம எப்போதும் ஒழுங்கீனத்தை
கடைபிடித்து வருபவர். //

அது ஒழுங்கீனம் இல்லை... ஒழுக்கம்.

Guna சொன்னது…

nandri thirutthapaattathu

pozhuthupoku சொன்னது…

enna panrathu boss..sila perukku kidaikka vendiya perumaiyum pugalum dhoni mathiri aatkalukkuthan kedaikkuthu...

Guna சொன்னது…

unmaiyo uunmai @ pozuthupokku

பெயரில்லா சொன்னது…

Test cricket is dying because players like Dravid.
He is not an aggressive player and he won’t take risk to take runs when we needed. Because of him only Dhoni agreed to draw the final test again West Indies. He try to defence even shoulder hight bouncers when someone like Sachin and Sewag are trying to do upper cut. Even though he got good techniques He is always looking for safer side. Last England tour, he was the captain of The indian team, there was a greate chance to win Oval test (Last test) to win the series to 2-0, but he make it draw. The answer he say is he want to win the series instead of taking Risk.
People are still coming to watch test cricket because of batsmen like Sewag not like Dravid.

Jeyakumar

Guna சொன்னது…

@ jayakumar -OH.. IS IT SO.. ?I THINK U DIDNT SEE THE MATCHS IN ADILIDE WHERE DRAVID SCORED DOUBLE TON WITH WINNING NOTE, FORGOT CALCUTA AUS TEST MATCH? AT PAKISTAN 270 KNOCK???? And still ints cont...

Guna சொன்னது…

AND JAYAKUMAR U SAID THAT TEST CRICKET WILL DIE BECAUSE OF PLAYE RLIKE DRAVID.. BUT THE FACT IS IF DRAVID LEAVES TEST CRIECKT OF TEAM INDIA WILL DIE.. AND U R GOING TO SEE THAT

பெயரில்லா சொன்னது…

Test Cricket is already dying in India. Very few people only coming and watching test matches. People are coming to watch Sewag's and Sachin's batting not Dravid batting. That is why he is not getting big fan following.
Once Vijay mallaiah kicked him out from his Bangalore team, he was picked by Rajasthan for very low price.
He can't bring excitement into this game.

Jeyakumar

Guna சொன்னது…

dont tell about this IPL.. this is not at all a cricket. its a show thats it. The home of cricket is tests. and dravid is one of the kings of test

பெயரில்லா சொன்னது…

Win or Loss, the fans are looking for a result in every test match. Yes, Dravid is a good batsman and good human being. But that is not going to help to win games. If he took 2 days to get 100, the result of the test match will be draw. If you don’t take risk you can’t find a good result. And also whenever dravid score 100 to win the game, some other batsman score more than him in the same match take full credit (Ex Kolkatta match vs Aussi, 1999 world cup match against Sri Lanka).

Guna சொன்னது…

y shud we take risk of loosing d mathc. other 10 batsmen are ther eto win.. he is a anchor player. if others fails he wil stay single handedly to save the match..

If you see his 33 ton in tests .. in those only one match india lost the match ..

others shud go forward for the win.. and this man will save your country's lost.

you cant find a batsman like dravid in this cricket era..

he will never put your team to loose the match. so its depends others to go forward to win the match.. others can bat without fear as long as dravid stays at crease. even if they get out this wall never put the team in trouble.

பெயரில்லா சொன்னது…

Pataudi Trophy (India in England), 2007
Batting Average is 25.20

India in Sri Lanka Test Series, 2008
Batting Average is 24.66

Border-Gavaskar Trophy (Australia in India), 2008/09
Batting Average is 17.14

India in Sri Lanka Test Series, 2010
Batting Average is 19

India in South Africa Test Series, 2010/11
Batting Average is 20

Guna சொன்னது…

yes. thats good. in his 154 tests only these are the low scores by him.. all others are great job by him. great work by you

davis சொன்னது…

your words 100% true