சனி, 24 செப்டம்பர், 2011

பிச்சையின் காட்சி

பேருந்து நிலையம் ,சாலையோரம் , கோவில்  இப்படி  எல்லா இடங்களிலும்  நம்மால்  தவிர்க்க  முடியாதது  பிச்சைகாரர்கள்.

பல பேருக்கு பிச்சை போடுகிறோம், பல பேருக்கு போடாமல் விட்டு  விடுகிறோம். பத்து வருடங்களுக்கு முன்பு வரை .. உடல் ஊனமுற்றவர்களும், மிகவும் வயதானவர்களும் மட்டுமே கண்களுக்கு பிச்சைகாரர்களாக தெரிந்தார்கள். அனால் கடந்த  நான்கு வருடங்களாக பிச்சை எடுப்பவர்களின்  எண்ணிக்கை அதிகம் ஆகி இருக்கிறது. இதில் ஒரு மிக பெரிய மாற்றம்.... உடல் ஊனம்  இல்லாதவர்களும், குடிகாரர்களும்., சிறுவர் சிறுமிகளும் நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு  பிச்சைகாரர்களாக    இருக்கிறார்கள்.

எப்படி யோசித்தாலும் எப்படி பிச்சை காரர்கள் உருவாகிறார்கள்  என்று தெரியவில்லை . இவர்களது பெற்றோர்களும் பிச்சை எடுத்து இருப்பர்களா? அல்லது தொலைந்து போனவர்களா? பிச்சை எடுத்து பிழைப்பதை விட வேற எந்த தொழிலும் செய்ய முடியாதவர்களா?  அல்லது சோம்பேறிகளா?

நான் கடவுள் படத்தில் வருவது முற்றிலும் உண்மை . பிச்சையை தொழிலாக வைத்து நடத்துபவர்கள்  இருக்கிறார்கள். அதில் வரும் கொடுமைகள் நிறைவேறுவதும் உண்மைதான்.


அதற்க்கு , இதற்க்கு  என்று அரசாங்கம்  செலவழிக்கிறது  ? ஏழைகளுக்கு   என்று திட்டம்  போடுகிறார்கள் , சலுகைகள்  தருகிறார்கள் . உடல் ஊனமுற்றவர்களுக்கும், வயதவனவர்களுக்கும் காப்பகம்  அமைக்கிறார்கள் . ஆனால் இதில் அடைக்கலம் புகாமல் ஏன் பிச்சைக்காரர்களாக  திரிகிறார்கள்? பிச்சை எடுப்பது குற்ரம்  என்று ஏன் கடினமான சட்டங்கள் இயற்ற படவில்லை?  வெளி மாநில ஆட்கள் வந்தாலும், வெளி நாட்டவர்கள் வந்தாலும் இந்த பிச்சைகாரர்கள்தான்   முதலில் வரவேற்று காசு கேட்கிறார்கள்.

சிலரி பார்பதர்க்கு பரிதாபமாக  இருந்தாலும்.. பலரை  பார்க்கும்போது எரிச்சல் வருகிறது.. இவர்கள் பிச்சை  கேட்கும் முறையும் .. கடனை திருப்பி கேட்பது போல் கேட்பார்கள். இதில் பஸ், ரயில் இதில் கார்டு கொடுத்து பிச்சை வேறு.. யார்தான் இவர்களுக்கு அட்டை  அச்சடித்து  தருகிறார்களோ ?


இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பார்த்த காட்சி இது.. ஒரு தாய் , ஒரு சிறுமி ஒரு சிறுவன் , ஒரு கை குழந்தை.. மற்றும் இன்னொரு, இரண்டு வயது மிக்க குழந்தை ரோடு ஒரத்தில் இருந்தார்கள். ( இவர்களது உண்மையான உறவு என்ன என்பது தெரியவில்லை )சிக்னல் விழுந்தது.

கையில் வைத்திருந்த தடியால் அந்த பெண் அந்த சிறுமியை அடிக்க.. உடனே அந்த சிறுமி.. அந்த தடியை வாங்கி அருகில் இருந்த சிறுவனை  ( அவளை விட வயதில்  சிறியவன்) மிக கொடூரமாக அடிக்க ஆரம்பிக்கிறாள்.. அவன் வலியால் அலறிகொண்டு இருக்கிறான் .. அவன் அழுகையையும் பொருட்படுத்தாமல்  மிக கொடூரமாக அடித்து.. பிறகு கீழே கிடந்த அந்த குழந்தையை கிள்ளி அழ வைத்து எடுத்து, அவன கையில் கொடுத்து.. மீண்டும் அவனையும் அந்த குழந்தையும் அடித்து துரத்துகிறாள் .. அவன் இப்போது நின்று கொண்டு இருக்கும் வாகனங்களில்  வந்து அழுது  கொண்டே பிச்சை கேட்கிறான்.. அந்த குழந்தையும்  அலுத்து கொண்டு இருக்கிறது .

( கையில் கேமரா இருந்ததால் இந்த காட்சிகளை போட்டோ எடுக்க முடிந்தது .. போட்டோ கீழே ).

இது போலதான் பிச்சை எடுக்கிறார்கள் என்று பலருக்கு தெரியும் ..ஆனால் நடவடிக்கை எடுக்க ஒரு ஆளும் இல்லை. வளர்ந்ததும் அந்த சிறுமியும் , சிறுவன்,குழந்தையும்  என்ன செய்வார்கள் ?? இவர்களை எப்படி வேண்டுமானாலும் தவறாக  பயன்படுத்த ஆள் இருக்கிறார்கள்.

இதை எப்படியும் யாரும் தடுக்க போவதில்லை. முற்றிலும் தடுப்பதும் அரிது.

கருணை இருந்தாலும், எளிதாக அடையாளம் கொள்ளப்படும் இந்த மாதிரி பிச்சைகார்களுக்கு.. பிச்சை போடவே கூடாது. போடுகிற ஒரு ரூபாயில் நம் சொத்து அழியபோவதில்லை அல்லது அவன் என்னை ஏமாற்றி வீடா கட்ட போகிறான்? என்று வியாக்கானம்  பேசாமல்.. அனைவரும் பிச்சை போடுவதை நிறுத்தினால் மட்டுமே ஓரளவாது  பிச்சைகாரர்கள் ஒழிவார்கள்.
  
 புகைப்படம் :
ஒன்று : அந்த பெண்
இரண்டு : அடித்து விட்டு சிறுமி சிறுவனிடம் குழந்தையை கொடுக்கிறாள்.
மூன்று:  பிச்சை எடுக்க நகருகிறான்.
நான்கு: ஒவ்வரு வாகனமாக நகருகிறான்.
ஐந்து : தனது முறைக்காக காத்திருக்கும் குழந்தை.

   

5 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இதில் ஒரு மிக பெரிய மாற்றம்.... உடல் ஊனம் இல்லாதவர்களும், குடிகாரர்களும்., சிறுவர் சிறுமிகளும் நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு பிச்சைகாரர்களாக இருக்கிறார்கள்.


உண்மைதான் நண்பா...

இன்று பிச்சையெடுத்தலும் ஒரு தொழிலாகிவிட்டது..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று(புறநானூறு -204)

http://gunathamizh.blogspot.com/2009/04/blog-post_2788.html

Harinniy சொன்னது…

attrocity!!!!child abuse!!!i think that lady has no heart!!wanna hit her on the face...india will never develop as long as ppl like her dont change...indha polappuku....idha vida koduma, daily oru old man kita enga stop la asingamaa thitu vaangitu irukom picha podaathathuku....he even spit on us one day....enna koduma idhelaam!!i wonder wat these ppl think about themselves!!!

Guna சொன்னது…

Gtng serious comments....

Hariharan சொன்னது…

Unga bayam sari Anna....periyavargal aanal antha penum payanum ethaiyum seiya thuninthavar agi povargal....