செவ்வாய், 11 அக்டோபர், 2011

இது - தமிழகத்தின் தேர்தல் பிரச்சார கேவலம்

மறுபடியும் தேர்தல் களம் காணுகிறது தமிழ்நாடு.
ஆனால் நாலு மாதம் முன்புபோல் அல்லாமல், உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பரபரப்பான காட்சிகள் அரங்கேறவில்லை.. மாநில தேர்தல் ஆணையம் அதன் செயல்பாடு மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு அது கொடுக்கபடுகின்ற முக்கியத்துவம் அவ்வளவே ...

எந்த தேர்தலாக இருந்தாலும் தேர்தல் ஆணையம்  வேட்பாளர்,கட்சி , பிரச்சார கட்டுப்பாடு என்று பல நிபந்தனைகள் வைக்கும். இதே போல் வேட்பாளார் இவ்வளவு வயது இருக்க வேண்டும், வாக்காளர் இவ்வளவு  வயது இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வரைமுறை வைத்து உள்ளது.

ஆனால் தமிழகத்தின் எந்த தேர்தலாக இருந்தாலும் பிரச்சாரம் செய்பவர்கள் , தேர்தல் பேரணி செல்பவர்களுக்கு எந்த வரைமுறையும் எனக்கு தெரிந்து ....இல்லை.  வீதி வீதியாக ஓட்டு கேட்டு செல்லும் கட்சிகாரர்களுக்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
விளைவு ... ?

சாலையில் நின்று கொண்டிருந்தபோது நான் எடுத்த இந்த படங்கள் ...




இது நேரடியாக கண்ட  காட்சிகள் ..  தேர்தல் என்றல் என்ன, வேட்பாளார் யார், எப்படி பட்டவர் அவர் எந்த கட்சி, என்ன செய்வார் , இது என்ன தேர்தல் என்று தெரியாத .. அரசியல், நடப்பு என்று எதுவமே தெரியாத இதைவிட ஓட்டு வயது இல்லாதவர்களாக இருந்தாலும் பரவயில்லை.. ஒட்டு பெட்டியை விட இன்னும் ஒரு/இரண்டு அடி இருக்கும் சிறுவர்கள் எல்லாம் ஒரு கொடியை தூக்கி கொண்டு வீதி வீதியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.. இவர்களை .. விளையாட பந்து வாங்கி கொடுக்கிறேன் .. இருபது ருபாய், ஐம்பது ருபாய் தருகிறேன் என்றும்.. இந்த கட்சி உனது விருப்பமாங்க நடிகரின் கட்சி என்றும் அழைத்து இதை செய்கின்றன கட்சிகள் . ( ஓட்டிற்கு ஆயிரம், ஐநூறு,இருநூறு என்று என் கண்முன்னே அனைத்து கட்சிகளும் ( ஒரு கட்சி அல்ல எல்லா கட்ட்சிகளுமே ) தந்தன .. ஓட்டிற்காக இவளவு செலவு செய்பவர்களுக்கு , ஐம்பது ருபாய் கொடுத்து சிறுவர்களை அழைப்பது சிரமமான காரியம் அல்ல) 

வேறு நாட்டில் இந்த மாதிரி சிறுவர்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்தபடுகிறார்களா? இந்தியாவின் வேறு மாநிலத்தில் கூட பார்த்ததாக நியாபகம் இல்லை..

இப்படி படிக்கும் சிறுவர்களை அழைத்து வீணடித்து , படிப்பை கெடுத்து பிரச்சாரம் செய்யும் கட்சிகளின் தேர்தல்  வாக்குறுதிகளில் ஒன்று  " இலவச கல்வி , தரமான கல்வி ".

இதை நாம் பார்ப்பதற்கு நமக்கே கேவலமாக இருக்கிறது .. இன்னும் மற்ற நாடுகளில் இதை பார்த்தால்? இதில் இன்றைய இளைஞர்கள்  நாளைய தலைவர்கள் .. வல்லரசாக மாற்றுவார்கள் என்று வாக்கியம் வேறு ...





2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

வேதனையாக இருக்கிறது.

Unknown சொன்னது…

கண்டிப்பாக வேதனை தரக்கூடிய விசயம்தான்................!!!! என்ன செய்வது நம் தமிழகம் அவ்வாறு பழக்கப்பட்டு விட்டது............