சுற்றி இருக்கும் மாநில,நாட்டு பிரச்சனைகளை தீர்க்க ஆளும் கட்சிகள்
தினறிக்கொண்டு எதிர்கொண்டு இருக்கும் நிலையில் எதிர்கட்சிகள் இந்த
பிரச்சனைகளை தீர்க்க எண்ண செய்து கொண்டு இருக்கின்றன?
மத்திய அரசில் கூட நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்,ஆனால் நம் சட்டமன்றத்தில் எதிர்கட்சியில் ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, கருணாநிதியாக இருந்தாலும் சரி, தான் முதலமைச்சர் பதவியில் இல்லையெனில் அதை அவமானமாக கருதி புறகணிப்பு செய்து சட்டமன்றத்தை அவமானபடுத்துகிறார்கள். முதலில் இவ்வாறு காரணகாரியம் இன்றி புறகணிப்பு செய்பவர்களை அடுத்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதா செய்வது தவறு , சட்டதிருக்கு புறம்பானது அது,இது என்று தனது தொலைகாட்சியில் பேட்டி கொடுப்பதை விடுத்தது நேரில் சட்டமன்றதில் கேள்வியை எழுப்பப முதுகெலும்பு இல்லையா என்ன?
திமுக கண்டிப்பாக நல்ல வேலை நாம் ஆட்சியில் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கும். மின்சார பிரச்னை,கூடங்குளம் பிரச்னை, ராஜபக்சே இந்திய வரவு,விலை ஏற்றம் என்ற இந்த பிரச்சனைகளில் செய்வதறியாது மடல் வரைந்து கொண்டு , பாராட்டு விழாவில் பொழுது போக்கிக்கொண்டு இருந்திருக்கும்.
தற்போது ராஜபக்சே வர அனுமதிக்க கூடாது என்று மதிய அரசுக்கு கடிதம் எழுதுபவர், ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பார்?
கூடங்குளம் பிரச்சனையை அடக்கு முறைய கையாள்வது தவறு என்பவர் , (இவர் மட்டும் அல்ல அணைத்து எதிர்கட்சிகளும் ) நேர்மையான எதிர்கட்சி என்றால் தவறி சுட்டி காண்பிப்பது மட்டுமின்றி ஆளும்கட்சிக்கு பிரச்சனையை எப்படி கையாள்வது என்று அறிவுரை கொடுக்க வேண்டியதுதானே ? ( அப்படியே கொடுத்தாலும் ஆளும்கட்சி எதிர்கட்சி அறிவுறைய கேட்பது அவர்களுக்கு இழுக்கு என்று நினைக்கும் ஆளும்கட்சி, நூலகத்தை இடிக்க சொன்ன அறிவுகட்சிதான் இது ). காஸ் , அந்நிய முதலீடு , டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து மம்தா அமைச்சரவையில் விலகியது போல ஏன் திமுகவால் விலக முடியவில்லை?.. திமுக வின் ஒரு கொள்கை ( பெரும்பாலன கட்சிகளின் கொள்கை ) நான் தவறு செய்தால் மற்றவனையும் தவறு செய்ய தூண்டி ஒரு சிறு தவறையாவது செய்ய வைக்க வேண்டும் அப்போதுதானே அவன் என் தவறை பற்றி கேட்க மாட்டான்.இம்முறை காங்கிரஸ் அதை செவ்வனே செய்தது, திமுகவின் கடந்தகால குடுமி காங்கிரஸ் கையில் இருப்பதால் திமுகவால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியது ஆயிற்று. தற்போது வேறு கிரானைட் , நிலம் கையக படுத்துதல் என்று தோண்டி கொண்டு இருகிறார்கள். கடந்த ஆட்சி இறுதியில் சுயநலத்துக்காக மத்திய பதவியை ராஜினாமா செய்ய சென்றவர்களால் இன்று மக்கள் பிரச்சனைக்காக பதவியை ராஜினாமா செய்ய முடியவில்லை. ஆனால் வந்தவரை லாபம் என்று இப்போது கூட பெட்டி கேட்டு வாங்கி இருப்பார்கள்.
மத்தியில் பாஜக வால் தங்களது கட்சில் யார் இருகிறார்கள் என்று கணக்கு எடுப்பதற்கே அவர்குக்கு நேரம் போதவில்லை .என்றாலும் காங்கிரஸ் பதவி விலக வேண்டும் என்று சம்பிரதாய அறைகூவல் விடுவதற்கு மட்டும் தவறுவது இல்லை . அடிக்கடி அண்ணா ஹசாரே க்கு எங்களது ஆதரவு ,நாங்கள் சுத்தமானவர்கள் என்ற பிதற்றல் வேறு.
எதிர்கட்சி நியாயமாக, தனது பணியை நேர்மையுடன் செய்தாலே அடுத்த தேர்தலில் வாக்கு வாங்கியாவது உயரும். ஆளும்கட்சியும் சுதாரிப்புடன் நடக்கும். அனால் இப்படி நடந்தால் போட்டி போட்டு கொண்டு நல்லது செய்ய வேண்டி வருமே ? அது பிடிக்காமல்தான் போட்டி போட்டு கொண்டு ஆளும்கட்சிக்கு போட்டியாக தனது "கட்சியையும்" "அரசியலையும்" மட்டுமே வளர்த்துகொண்டு வருகின்றன.. அடுத்த முறை கொள்ளை அடிப்பதற்காக!!.

2 கருத்துகள்:
மூன்றாவது படம், உண்மையான வந்தால், நம் நாட்டின் மாற்றங்கள் வரும்.
Mathi Sudhanan பற்றவைப்பதுதான் யார் என்று தெரிய வில்லை
கருத்துரையிடுக