சனி, 21 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு

இருபது பேர் வாங்கிய தடைக்கு இருபது லட்சம் பேர் போராட வேண்டி இருக்கிறது.

பீச்சிலும் தரையிலும் நிற்க்கிறான் மக்கள்,

மக்களின் வேலைக்காரன் அறிக்கை விட்டு காலாட்டிக் கொண்டிருந்தான்.

இப்போது முதல் முறை வியர்த்து நடுங்கி கொண்டிருக்கிறான். ஜல்லிகட்டு தடை பந்தை மாற்றி மாற்றி விளையாடியவர்கள் இனி வெற்றியில் பங்கு கேட்டு பசப்பி வருவான்.

அரசியல் அடிமைகளை இனி சேலை கட்டிய பொட்டைகள் என சொல்லி திட்டி நம் தமிழச்சிகளை அசிங்க படுத்த வேண்டாம்,இங்கே வீரதமிழச்சியாய் நிற்க்கிறாள் அவள். இத்தனை அம்மாக்கள் விதி செய்து இருக்கிறார்கள்.

கேமரா முன் நின்று கூத்தாடுபவர்களை விட்டு இன்று கேமராக்கள் தமிழ் இளைஞர்கள் முன்பு தவம் கிடக்கின்றன.

மேலதிகாரிக்கு சல்யுட் வைத்து பயந்தவர்கள், அரசியல் வண்டிக்கு காவல் காத்தவர்கள் இன்று நம்மில் ஓருவராய். இளைஞர்களை பார்த்ததும் அவர்களின் நெஞ்சுரத்தை புரிந்ததும் நேர்மையாய் காக்கிகள் மாறின.

அந்நிய பொருட்கள், வால்மார்ட் என ஆண்டுகளாய் பேசியது இன்று தன்னால் சாலையில் கோலாவாக வழிகிறது.

கட்டாய மீட்டருக்கு தவிர்த்த ஆட்டோக்ககள் இன்று இலவசமாய் மெரினாவை நோக்கி.

தெருவில் தொழுகை,கல்லூரிகளின் கரிசணம் ,இளைஞர்களை நம்பிய தமிழகம் இன்னும் எத்தணையோ ..

இனி ஒருமுறை எளிதில் சாத்தியமில்லை.விழித்தது அயராமல் இருக்க வேண்டும்.

நிரந்திர பீட்டா தடை,
நிரந்திர ஜல்லிகட்டு,
நிரந்திர பன்னாட்டு பொருட்தடை,
மணல்;மரம்;விவசாய நிலம் காப்பு,
கருவேல மர ;பார்த்தேனியும் அழிப்பு,
வட்டத்திற்க்கு ஒரு ஏரி,
மது புகை ஒழிப்பு.

இவைகள் கோரிக்கையாய் ,முழுதான வரலாறாய்.

கருத்துகள் இல்லை: