சனி, 21 அக்டோபர், 2017

மெர்சல்

மெர்சல் பட அரைகுறை GST காட்சிகளை நீக்க  வேண்டுமென தமிழகத்தில்டெப்பாசிட் இல்லாத தேச பக்தி கட்சி கூவல் விடுவது மீண்டுமாெரு பிரியாணி குண்டா காமெடி சமாச்சாரமே. எனக்கு தெரிந்து சிங்கப்பூர் மருத்துவ சமாச்சாரம் தவிர மற்ற அணைத்தும் உண்மை மற்றும் நியாயமே.  அவர்களின் எல்லா சப்பை கட்டிற்க்கும் சமூக வலைத்தளங்களில் பதிலடி காெடுத்து சாணி அடித்து வருகிறார்கள்  (சில ரசிக சிகாமனிகளை தவிர) பெரும்பாண்மை நியாயமாகவே .  தேவையில்லாமல் இன்னாெரு தகுதியற்ற ஆளை பெரிய ஆளாக்குவதே இதன் சாதனை.

இதில் அதிமுக மட்டும் வாய திறக்கவில்லை. அந்த பக்கம் திறந்தால் எங்க அப்பன் குதிர்ல இல்ல மற்றும் எல்லா பக்கமும் சாணியடி இந்த பக்கம் திறந்தால் ஆட்சிக்கு ஆப்பு.
 

மெர்சல்படத்திற்க்கு  திரைத்துரையினர்,கட்சிகள் ஏன் வட இந்திய ஊடகங்கள் மற்றும் அனைத்து செய்தி ஊடகங்களும் விவாதமாக்கி  காெண்டிருக்க 
மெர்சல் பட குழுவிணர் மட்டும் ஏன் வாயை திறக்க வில்லை?  டிவிட்டரில்  கூட ஒருவரும் வாயை திறக்க வில்லை. சமூகத்திற்க்காக குரல் குடுப்பவர்கள் எனில் .. மற்ற திரைத்துரையினர் அல்லது மற்ற கட்சிகள்  பே ால நாங்கள் நடப்பதைத்தான் என்று கூறவேண்டியதுதாணே? வெற்றிப்படமாக்கியதிற்க்கு நன்றி என்று மட்டும் கூறுவது ஏன்?

வெளியீடு முன்பும் பின்பும் இ.ப.சா காலில் விழுவதும் , தலைவாவிற்க்கு மலை ஏறி நடந்து அவமாணப்பட்டது மட்டுமே இவர்களின் நடுநிலை மற்றும்  சமூக பாெறுப்பு.

அவர்களின் தேவை பணம் ,வியாபாரம், அரசியலுக்கு ஒரு  நுழைவுச் சீட்டு அவ்வளவே.
 நான் மக்களுக்காக பேசுகிறேன் , மக்களில் ஒருவனாக பேசுகிறேன்
என்பதெல்லாம் வடிகட்டின மாெள்ளமாறித்தணம். இப்பாேது படம் கல்லா கட்டி விட்டது இனி மக்களாவது கருத்தாவது நான்கு காட்சிகளை வெட்டி தமக்கு ரெய்டு வராமல் காப்பாற்றினால் பாேதும்.

மடியில் கணம் இல்லையெனில் முன்பு இன்னாெரு நடிகர் அரசாங்கம் மற்றும் மற்ற அமைப்புளை எதிர்த்து நீதி மன்றத்தை நாட வேண்டியதுதானே?

இதில் வழக்கம் பாேல் முட்டாளவது மக்களும் விசிலடிச்சாம் குஞ்சுகளுமே.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இது பற்றி நடிகரும் டைரக்டரும் வாய் திறக்கவில்லை.ஆமாம் நான் சொன்னேன் என்று தைரியமாக நிற்க வேண்டியதுதானே.படம் ரிலீஸ் ஆக வேண்டி யார் காலில் வேண்டுமானாலும் விழ தயாராக இருக்கும் இவர்களுக்குள் எல்லாம் முதல்வர் ஆகும் ஆசை.நடிப்பதும் வீர வசனம் பேசுவது மட்டுமே முதல்வர் ஆக போதுமான தகுதியா .இவர்களுக்கெல்லாம் ஒரு எக்ஸாம் வைத்து பாஸ் செய்தால்தான் தேர்தலில் நிற்க முடியும் என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.IIM ல் ஒரு பிரசினை கொடுத்து அதை தீர்க்கும் வழிகளை கேட்பார்களாம்.அது போல் கேள்வி கேட்டால் தெரியும்.ஒரு கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பின்பக்க காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்து ஓடியவருக்கெல்லாம் முதல்வராகும் ஆசை.