வெள்ளி, 8 அக்டோபர், 2010

MARRIAGE INVITATION) திருமண அன்பளிப்புதிருமணத்திற்கு அன்பளிப்பு கொடுபதுல எவ்ளோ சிக்கல் ....

இந்த சம்பிரதயாம்ல நாம யாருக்கு GIFT வைக்குறமோ அவங்க நமக்கு இதுக்கு முன்னாடி எவ்ளோ வச்சு இருக்காங்க னு தேடி பிடிச்சு பழைய கணக்கு நோட்டு எடுத்து பார்த்து .. அதுக்கு இப்ப INFLATION எவ்ளோ னு பார்த்து கரெக்டா வைக்க வேண்டி இருக்கு ..

அப்புறம் நண்பனுக்கு GIFT வைகுறப்ப அத விட சிக்கல்.. தனிய வைக்கலாமா இல்ல சேர்ந்து வைக்கலாமா னு.. சேர்ந்து வச்சா அதுல சில பேர் காசு கம்மிய கொடுபனுங்கலேன்னு கவலை.. இன்னும் சில பேர் காசு கொடுக்குறேன்னுசொல்லிட்டு மங்கலம் பாடிடுறனுங்கனு எரிச்சல் .. சொல்லவும் முடியாது ...

அப்புறம் நாம வைக்குற கிபிட் எப்படி திரும்ப வரும்னு ஒரு கவலை ... இவனுங்க நம்ம வீடு FUNCTION கு வருவனுன்களா .. GIFT வைப்பனுன்களானு ஒன்னு ஓடிட்டே இருக்கும்.. இவனுங்க தனி தனியா வச்சா நமக்கு நல்லாருக்குமேனு ஒரு நப்பாசை வேற வரும்..

பொண்ணுங்க கல்யாணத்துக்கு போறதே வேஸ்ட்னு தோணும்.. எப்படியும் இவங்க நம்ம FUNCTION கு வர மாட்டாங்க நாம எதுக்கு போகணும் அப்படியே போனாலும் GIFT எதுக்கு வைக்கணும்னு தோணும்...

இந்த பிரச்சன வேணாம்னு சில பேர் பத்திரிகைல அன்பளிப்பு வேண்டாம் னு போடுறாங்க .. இது அன்பளிப்பு வேணாம்னா ? இல்ல நீ வச்சாலும் திரும்ப பண்ண மாட்டேனு சொல்றதானு நமக்கு தோணுது...

மொத்ததுல எதுக்கு இப்படி கணக்கு பார்த்து வைக்கணும் ?.. நான் பண்ணுறேன் அதுனால  நீ பண்ணு னு சொல்றத விட்டுட்டு .. வச்சா கணக்கு  பார்க்காம  வைக்கலாம், இல்லனா பல்ல காட்டிடுபோய் இலைல உக்கார்ந்துட்டு வந்துடலாம் ...


கருத்துகள் இல்லை: