ஞாயிறு, 31 அக்டோபர், 2010

நான் இங்கிலீஷ் படம் பார்த்த கதை ..

நான் FIRST  டைம் இங்கிலீஷ் படம் பார்த்தது ஞாபகம்  இருக்கு.. அப்ப நான் 5 வது படிச்சுட்டு  இருந்துருப்பேன்.. கேபிள் டிவில போலீஸ் ஸ்டோரி படம் போட்டு இருந்தான் ( அப்பலாம்  இப்ப இருக்குற சன், விஜய், ஸ்டார் , ஜெயா டிவி லாம் இல்ல .. நேஷனல் டிவி மட்டும் தான்.. அதுலயும் மாசத்துல மதியம் ஒரு தமிழ் படம்.. வார வாரம் ஞாயிற்று கிழமை ஒரு பழைய தமிழ் படம், வெள்ளி கிழமை 6  தமிழ்பாட்டு  ஒளியும் ஒலியும் .. மொழி புரியாம சனிகிழமை ஒரு ஹிந்தி படம் அவ்ளோதான் ) அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு predator  ... அதுல நடிச்சது யாருன்னு  பேர் கூட அப்ப தெரியாது...

இங்கிலீஷ்  படம்னா A  படம் , யாரும் பார்க்ககூடாது தப்புனு இருந்தா காலம் அது. அதுவும் நான் இருந்த இடம் ஒரு பட்டிக்காடு மாதிரிதான்  ( இலச்சிபாளையம் , திருசெங்கோடு பக்கத்துல ).. அதுக்கு அப்புறம்  போனா/ வந்த இடம் சங்ககிரி.

அப்ப 5  வது படிச்சுட்டு இருந்தேன் 1991 னு நெனைக்குறேன். அப்ப கூட இங்கிலீஷ் படம் கெட்டதுன்னுதான் இருந்துச்சு.. இங்கிலீஷ் படம் தப்பு .. அப்புறமா ஒரு ரெண்டு மூனு வருஷதுல ஜுராசிக் பார்க் படம் வந்துச்சு.. அப்ப இருந்துதான் நம்ம ஊர்ல இங்கிலீஷ் படம்னா கொஞ்சம் மதிக்க ஆரம்பிச்சாங்க .. எல்லா ஸ்கூல் ல இருந்து கூட, அந்த படம்  பக்கத்துல


ஓடுற தியேட்டர் கு கூட்டிட்டு போனாங்க.. ( அப்ப எல்லாம் நான் ஒன்னாவது ரெண்டாவது படிச்சப்ப காலத்துல ,வருஷத்துல ஒரு தடவ ஒரு படத்துக்கு கூட்டிட்டு போவாங்க ( அஞ்சாவது வரைக்கும்), வரிசையா ரோடு ல நடந்து  போனதா நெனச்சு பார்த்தா , இப்ப கூட சிரிப்பு வருது..  எல்லாம் சின்ன பசங்க பார்க்குற  , அதுவும் மொக்கை படமா பார்த்து கூட்டிட்டு போவாங்க .. நிஜமா எனக்கு நான் ப்படி பார்த்த 5 படம் நியாபகம் இருக்கு .. படம் பேருதான் மறந்துடுச்சு )..

சரி கதைக்கு திரும்பலாம் ..

அப்புறம்  TERMINATOR 2 படம் ரிலீஸ் ஆச்சு .. இந்த ரெண்டு படமும் ரிலீஸ் ஆனதுக்கு  அப்புறம்தான் இங்கிலீஷ் படம்னு ஒன்னு நம்ம ஊருக்குள்ள வந்துச்சு .. அப்புறமா மெல்ல மெல்ல சில படம் மட்டும் வந்துச்சு..

ஆனா நமக்கு இருப்பு கொள்ளாதே... நெறய படம் பார்க்கணும் , ஸ்கூல்ல போய் பசங்க கிட்ட படம் போடணும், இங்கிலீஷ் படம் பார்த்தா பெரிய ஆளுன்னு ... மெல்ல மெல்ல டெக் ல படம் பார்க்க ஆர்மபிசோம் .. ( அப்ப CD , DVD லாம் இல்ல .. செட்டியார் கடைல இருக்குற கல்லாபெட்டி மாதிரி "டெக்"  தான் ).. அதுவும் வாடகைக்கு தான் எடுத்துட்டு  வருவோம் .. காலாண்டு  , அரையாண்டு விடுமுறைல வாடகைக்கு எடுப்போம் .. 2  தமிழ் படம் எடுக்குறப்ப, கூடவே வீட்டுக் தெரியாம  ஒரு இங்கிலீஷ் படம்.அப்ப வர்ற படம்ல adult  scens  அடிகடி வரும்.. இதுக்காகவே டெக் பக்கத்துல forward  button  ல கை வச்சுட்டே  இருக்கனும் .. நம்ம நேரம் கரெக்டா வீட்ல மத்தவங்க வர்றப்பதான்  இந்த மாதிரி காட்சி வரும்.. அதுக்கு ரெண்டு திட்டு விழும்.. ஒரு படம் பார்த்து முடிக்குறதுக்குள்ள   இம்சை ஆய்டும். அப்ப இங்கிலீஷ் படத்துல பேய் படம் பிரபலம் .. EVIL DEAD  .. இந்த படம் அப்ப பயபடுற படம்.. இப்ப பார்த்தா சத்தியமா இது ஒரு காமெடி படம்தான்.

அப்புறமா மெல்ல JAWS, ANACONDA, JURASI PARK 2,3, CODZILA, NICE GUY, POLICE STORY, BRUCE LEE MOVIES, WHO AM I , PROJECTOR  இப்படி படம் வர ஆரம்பிச்சு.. மெல்ல இங்கிலீஷ் படம் ரெகுலரா உள்ள வர ஆரம்பிச்சுடுச்சு ..

நான் பத்தாவது படிக்குறப்ப TITANIC  வந்துச்சு .. இது மறுபடியும் இன்னோர் STAGE  னு சொல்லலாம்.. இதுக்கு அப்புறம் இன்னும் கொஞ்சம் முனேற்றம் .. ACTION  படம் மட்டும் இல்லாம .. மத்த  படம் கூட வர ஆர்மபிச்சது.  ஜேம்ஸ் பான்ட்  படம் , அது இதுனு எல்லா படமும் வர்ற ஆரம்பிச்சு இன்னைக்கு அவதார் வரைக்கும் வந்தாச்சு ...

ஆனா இப்ப.... இங்கிலீஷ் படம் பார்க்க வீட்லயும் தடை இல்ல,  வெளிலயும் தடை இல்ல.. இப்ப இங்கிலீஷ் படம் பார்கலனா  பொண்ணுங்களுக்கு கூட பசங்கள ப்டிகாதுன்குற நிலைமை கூட இருக்கு .. எல்லா தமிழ் சேனல்களும் போட்டி போட்டு ஒரு மொக்க படத்த கூட விடாம .. மொழி மாற்றம் செஞ்சு, போட்டு தள்ளிட்டு இருக்குங்க .( இதுல சில தமிழ் DIRECTORS கு வருத்தம் இருக்கும் )..

ஆனா இப்ப நாம பார்க்க விருபுற/ நினைக்குற  புதிய/பழைய புதிய இங்கிலீஷ் படத்தோட தரம் நல்லா இருக்குறத நெனச்சு பார்த்தா நம்ம படம் பார்குற தரம் முனேறி இருக்குனு தான் தோணுது .

2 கருத்துகள்:

Harinniy சொன்னது…

lol...did they really take u to movies tat way during primary school days???but paravala,ungala kooptitu aachu ponaanga...these days all schools are so academic oriented that students hav to beg for a field trip!!!and ipo laam col la oruthar english padam paakaama irundhaa,avlo thaan avanga nelama..english theriyumo theriyaadho idhukaagavae most of them roam around with english ringtones...english movies paakaradhu,english artists pathi pesaradhu idhelaam image issue aayiduchu...sema comedy!!!

Guna சொன்னது…

athu venumna nijam thaan. athuvum ippa college students .. action movie laam paartha kooda ottuvaanga... romantic comedey paarthu peter vitta thaan periya aalunu othukuvaanga