திங்கள், 6 டிசம்பர், 2010

பேருந்து பயணம் -2 (இம்சையின் முடிவு)

நம்ம பஸ் பயணத்துல கண்டக்டர், டிரைவர் தொல்லை இப்படினா நம்ம அழகான பஸ் தொல்லை இன்னும் சூப்பரா இருக்கும்... அது என்னன்னா ..

BOOM TV  அப்படீன்னு ஒண்ணு ஓடிட்டு இருக்கும் நம்ம அரசு பேருந்துல் ஓடிட்டு இருக்கும்... அதுல போடுற படம் CD கடைலயும் கிடைக்காது .. திருட்டு DVD யாவும் கிடைக்காது .. அப்படி ஒரு அருமையான திரைபடம் மட்டும்தான் போடுவாங்க. NIGHT TRAVEL ல யாருமே பார்க்காத டிவி ய யாருக்காக அவ்ளோ சத்தமா ஓட விடுவாங்கனே தெரியாது.

நல்ல வேல இன்னும் கண்ணம்மா, உளியின் ஓசை , பெண் சிங்கம்னு படம் போடாம இருக்காங்க.. கூடிய சீக்கிரம் அதையும் எதிர் பார்க்கலாம்.

ஆனா நல்ல படம் போட்ட நம்ம சக பயணி தொல்ல தாங்காது ... நிக்குறதுக்கே வழி இல்லாம பஸ்ல வந்தா.. கை ய  எடு கால எடு , படம் மறைக்குதுன்னு சொல்லுவாரு.

சேலம் TO பெங்களூர்   போறவங்களுக்கு, அவங்க வழக்கமான பயணியா இருந்த கூட  அன்னைக்கு டிக்கெட் கட்டணம் எவ்ளோ னு தெரியவே தெரியாது. ஒவ்வரு நாளும், ஒவ்வரு பஸ்ல,ஒவ்வ்வரு கட்டணம் இருக்கும்.  இங்க என்ன நடக்குதுனே தெரியாது.  அதுவும் பண்டிகை காலங்கள்ல அது அரசு பேருந்தா இருந்தா கூட டிக்கெட் விலை , தியேட்டர் ல ப்ளாக் டிக்கெட் வாங்குற மாதிரி இருக்கும். ஆனா..  பஸ்ல கண்ணடி மூட மூடியாது,கால் வைக்க இடம் இருக்காது. மழை வந்தா, வீட்டுக்கு போய் நாம குளிக்க தேவை இல்ல.

ஆனா நம்ம ஆளுங்களையும் சும்மா சொல்ல கூடாது.. எப்படி பட்ட பஸ்ஸா இருந்தாலும் அதுல வெத்தல  போட்டு துப்பாம, பாப் கார்ன் சாப்பிட்டு  பாக்கெட் போடாம, கடலை  உரிச்சு அத அப்படியிய போடாம, சமோசா வாங்கி அதோட பேப்பர் போடாம இருக்காவே முடியாது .  ( படிக்காதவன் / 45  வயசுக்கு மேல  இருக்குறவங்க இத அதிகம் செயுறாங்க அப்படீங்குறது நிஜம் ) . இத பார்க்குறப்ப  டிக்கெட் விலை ஜாஸ்தி பண்ணிட்டா  இந்த மாதிர் ஆளுங்க வர மாட்டாங்களேனு கூட தோணும்.

டீலக்ஸ் பஸ் அப்படீன்னு ஒன்னு இருக்கும். இதுல செல்போன் சார்ஜ்  பண்ணுறதுக்கு எதுக்கு பவர் பாயிண்ட் வச்சு இருக்காங்கன்னு தெரியவே தெரியாது . யாரவது ஒருத்தர் அதுல சார்ஜ் பண்ணி இருந்தா அவங்க பெரிய அதிர்ஷ்டசாலிதான்.
BUS TIMINGனு ஒண்ணு வச்சு இருப்பாங்க.. அதுக்கு தகுந்த மாதிரிதான் வண்டிய ஒட்டுவான்கலம். RULES FOLLOW பண்ணுறாங்களாம். மாட்டு வண்டி மாதிரிதான் ஓட்டுவாங்க LONG  JOURNEYல.

நாமளும் மாடு மாதிரி சொரணை இல்லாம போனா தான் , பஸ்ல போக  முடியும்.

கருத்துகள் இல்லை: