செவ்வாய், 18 ஜனவரி, 2011

உணர்வு - சராசரி மனிதனின் உதவி

உதவி .. இது எப்போ எப்படி கிடைக்கும்/கொடுக்கணும்னு தெரியாது.

ஒரு சராசரி மனிதனின் உதவி உணர்வு இப்ப எப்படி இருக்கு? ( நானும் சராசரி மனிதன்தான்) .

பஸ்ல போயிட்டு  இருக்கும்போது வயசானவங்க நின்னுட்டு இருக்குறத பார்த்தா கஷ்டமாதான் இருக்கும். ஆனா  எழுந்து  இடம் தர தோணாது. பண்டிகை சமயத்துல அடிச்சு பிடிச்சு பஸ்ல நின்னுட்டு போறப்ப , படிகட்டுல தொங்கிட்டு வர்றவங்க நாலு மணி நேரம் போகணும்.. உள்ள தள்ளுங்கன்னு சொன்னா , அடுத்தவங்களுக்காக தள்ளி உள்ள போக தோணாது. ஆனா அதே ஆள் கீழ விழுந்துட்ட அப்புறம் அய்யோ அம்மா விழுந்துடாங்கலேனு பரிதவிக்கும்.

ஒரு பொண்ணு உதவி கேட்குறப்ப உதவி செய்யனும்னு தோனுற அளவுக்கு , ஒரு பையன் கேட்டா  உதவி செய்ய தோனாது .லிப்ட், அட்ரஸ், க்யு ல நிக்குறப்ப பொண்ணுங்க மேல  வர்ற கரிசனை பசங்க மேல வர்றது இல்ல .. பசங்க மேல வரலானாலும் , வயசானவங்க மேல  கூட வர்றது இல்ல .

என்னதான் நண்பனா இருந்தாலும் பணம் கேட்ட உடனே கொடுக்க மனசு வராது. கொஞ்சம் சாக்கு சொல்லி அப்புறம் நாமலே தந்து உதவி செய்வோம். எதுக்காக தாமதமா கொடுத்தோம், யோசிச்சோம்னு நமக்கே  புரியாது .

யாரவது எதாவது உதவி கேட்ட உடனே செய்ய தோணாது. கொஞ்ச  நேரம் இழுத்தடிச்சு தான் அத செய்ய தோணுது .

இங்க இன்னொரு விஷயமும் இருக்கு , நமக்கு பல தடவ உதவி செஞ்சவங்க  அல்லது நாம பல தடவ உதவி செஞ்சு .. ஒரே ஒரு தடவ உதவி கிடைகளான அல்லது செய்யலான .. ஏற்கனவே பல தடவ கிடைச்ச உதவி மறைஞ்சு .. ஒரு தடவ கிடைக்காத இந்த உதவி தான் பெருசா மனசுக்குள்ள பதியுது.


உதவினு நெனைக்காம உதவி பண்ணுறதுதான் உதவி . யோசிச்சு பண்ணுறதுக்கு பேரு கிடைக்குறவங்களுக்கு அது உதவியா இருந்தாலும், செய்யுறவங்களுக்கு  அது உதவி இல்ல.( என்னமோ சொல்லிட்டேன்னு  நினைக்குறேன் )

விட்டுகொடுத்தலும் ஒரு விதமான உதவி தான்...  விட்டு கொடுத்தல் எப்போது நடக்குது சராசரி மனசுக்கு ? நாம ஜெயிக்குறப்ப தோணும். நாம விட்டு கொடுக்க வேண்டிய ஆள் சின்னவனா ( அதாவது தோக்குறவனா, தாழ்ந்தவனா, இல்லதனவனா ) இருந்தா மட்டும் அதிகமாக விட்டு கொடுப்போம். நமக்கு சரி சமமான ஆள் அல்லது நம்மள விட பெரிய ஆளா இருந்தா விட்டு கொடுத்தல் நம்ம கிட்ட இருக்குறது இல்ல .

ஆனா எந்த ஒரு சராசரி மனசுக்கும் மூளைக்கு போகாம கன நேரத்தில் உதவினு போறது முக்கியமா  இரண்டு விஷயத்துக்கு. ஒன்று -  உணவு .. சாப்பிடுறப்ப யார் வந்து கேட்டாலும் கொடுக்குற மனசு ..  இரண்டு - உடல் ஊனமுற்றவர்கள் ... பஸ்ல போறப்ப இவங்க ஏறினா டக்குனு எழுந்து  இடம் தரும் மனசு .. அடுத்து விபத்துல இருக்குறவங்களுக்கு உதவி செய்யுற ,மனசு .

ஆனா இதுக்கு பேரு உதவி இல்லன்னு நினைக்குறேன். மனிதாபிமானம் .

2 கருத்துகள்:

Nadu Nisi Naai சொன்னது…

"விட்டுகொடுத்தலும் ஒரு விதமான உதவி தான்... விட்டு கொடுத்தல் எப்போது நடக்குது சராசரி மனசுக்கு ? நாம ஜெயிக்குறப்ப தோணும். நாம விட்டு கொடுக்க வேண்டிய ஆள் சின்னவனா ( அதாவது தோக்குறவனா, தாழ்ந்தவனா, இல்லதனவனா ) இருந்தா மட்டும் அதிகமாக விட்டு கொடுப்போம். நமக்கு சரி சமமான ஆள் அல்லது நம்மள விட பெரிய ஆளா இருந்தா விட்டு கொடுத்தல் நம்ம கிட்ட இருக்குறது இல்ல"

Arumayaana anubavitha karuthagalaga enakku padugiradhu...

Short but sweet truthful facts...

Below are some facts?

1) We used to help people in their work when we go to ther home. But we never bothered abt helping our mom once?

2) Helping to people take snegligence to the people who are very close to comparitively for the others who newly introduced to us?


3) Helping others with some expectation in future


4) Helps comes by analysing their background and status

5) Greatest feeling is to see the happiness in a person face because of our help to them

6) Our comfort takes priority when it comes to helping others


7) Thinking biggest worst help is to console a person with fake words without knowing the pain what they are going through their trouble

8) People values the help of ppl who has contributed more than person who helped to an extent whatever they can

9) It hurts most when people dont recognize or ignore us for whome we helped in past


10) It irritates when people taking advantage on us for help


To me in corporate world,people who comes and say that they will help you BEWARE....a hole is being digged under you :)

Help doest mean in terms of money, asset, object etc etc...eban a small smile, soothing words, a hug, a tight handshake offered also a great help.

Hope u agree.
Good and new dimensional view....

Just want to know whats the big help u had and u offered in ur life?


Ival
- NNN

Guna சொன்னது…

கருத்துரைக்கு நன்றி . உண்மைதான். சில சமயங்களில் நெடு நாள் நண்பர்களுக்கு உதவி செய்யா தோணுவதை விட.. புதிய நண்பர்களுக்குத்தான் அதிகம் உதவிட தோணும். 2,4,5,7,10 மிகவும் நன்று.. உங்களது கருத்தை பாகம் 2 என்று எழுதலாம் போல :)

நிஜமாகவே கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. யோசித்தும் பார்த்தாச்சு .. செஞ்சது, கொடுத்தது - எது பெருசு , சிறியதுனு நிஜமா சொல்ல தெரியல..