புதன், 19 ஜனவரி, 2011

அப்பாவின் பணி ஒய்வு - மகன்

ஓடி கொண்டு இருக்கும் கடிகாரம் நிற்ப்பது போலத்தான் பணி ஒய்வு பெறுவதும். கடிகாரம் நிற்பதற்கு காரணம் கடிகாரத்தின் BATTERY  தனது சக்தியை முடிப்பதால். இங்கு பணி ஒய்வு பெறுபவர்களுக்கு காரணம் வயது முடிவதால்.

உண்மையில் பணியை உயிராக  கருதி செய்து வருபவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் பணி ஒய்வு பெறுவதற்கு  ஆறு மாதத்திற்கு முன்பே இதை பற்றிய எண்ண ஓட்டங்கள் ஓட துவங்கி விடுகின்றன. இதை அவர்களது உடம்பிலும் , முகத்திலும் காண முடியும். பணி ஒய்வு பெறுபவர்களின் அந்த கடைசி நாளுக்கு முன்பு ஆறு மாதமும் பணி ஒய்வு பெற்ற பின்பு இருக்கும் ஒரு வருட காலமும் மிகவும் அபாயகரமானது . அவர்களது மன நிலை பெரிதும் பாதிப்பு  பெற்று இருக்கும். அதுவும், தான் நேசித்து வந்த வேலை, அதிகாரம் உள்ள வேலை, கவுரவம் மிக்க அரசு வேலை , உயிராக நேசித்து வந்த வேலை என்றால்... இந்த காலகட்டத்தில் அவர்கள் தம்மையும் கஷ்ட படுத்திக்கொண்டு , தான் அருகில் இருக்கும் மற்றவர்களையும் கஷ்ட படுத்துவார்கள்.  இது யாராக இருந்தாலும், எந்த கால கட்டமாக இருந்தாலும் பொருந்தும் .

இந்த கால கட்டத்தில் இவர்களை சுற்றி நடக்கும் விஷயமும் , இவர்களுடன் பழகும் நாமும் இவர்களின் மனநிலைக்கும் , மன ஓட்டத்திற்கும்  காரணம் ஆகிறோம் .

நமது  தந்தை பணி ஒய்வு பெற்று விட்டால் , பொதுவாக நமக்கு தோன்றுவது , இனியாவது இவர் ஒய்வு எடுக்கட்டும் . நாம் இனி இவர்களை பார்த்து கொள்வோம் என்பதுதான் . ஆனால் நாம், நமது பார்வையில் இருந்தே பார்க்கிறோம். தந்தையின் மன ஓட்டத்தை மறந்து விடுகிறோம் . 30  வருடங்களாக ஓடிய கால்கள் , மூன்று நாட்கள் அமைதியாக உட்காராது என்பதே உண்மை. தன்னால் இன்னும்  முடியும் தான் யாருக்கும் பாரம் இல்லை , நான்தான் குடும்பத்தின் தலைவன் , என்னால் உட்கார முடியாது நானும் சம்பாதிப்பேன் என்கின்ற எண்ணம் மட்டுமே இருக்கும். இதை  யாராலும் தவறு சொல்லவும் முடியாது, தடுக்கவும் முடியாது . இதில்தான் அவர்களது நிம்மதி இருக்கிறது என்றால் , நாம் அதன்படிதான் போக வேண்டும்  அதை உணருகின்ற நமது மனது , தந்தைக்காக அடுத்து அவருக்காக எண்ண செய்து கொடுக்க போகிறோம் என்று எண்ண துவங்கி விடுகிறோம் .

ஆனால் இப்போதுதான் கடன் , வீடு , தொல்லையில் இருந்து மீண்டு , நிற்க ஆரம்பித்திருக்கும் நமக்கு உடனடியாக எதையும் செய்ய முடிவதில்லை. இதற்க்கு சற்று கால அவகாசம் தேவை படுகின்றது . இந்த கால கட்டத்தில் நாம் சமாளிக்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருகின்றது .

நமது வேலையையும் பார்த்து கொண்டு, அப்பாவிற்காக யோசித்து அதற்காகவும் ஓடி கொண்டு , மற்ற வீட்டு வேலைகளையும் பார்த்து ஓடிக்கொண்டு இருக்கும் போது , அப்பா வீட்டில் உட்கார்ந்து இருப்பதை பார்க்கும்போது , இத்தனை வருடம் வீட்டில் ஒரு மணி நேரம் உட்கரமால் இருப்பவரை பார்க்கும்போது  " மனசு கனமா இருக்கு " என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியும்.  அனால் நாம் இதையும் காட்டி கொள்ளாமல் ஓடி கொண்டு  இருக்க ஆரம்பிக்கிறோம்.காரணம் இது தெரிந்தால் அப்பாவிற்கு சங்கடமாக இருக்கும்.

இத்தனையும் தாண்டி ஓடிக்கொண்டு இருக்கும்போது , சூழ்நிலை வந்து தொந்தரவு செய்ய ஆரம்பிக்கும் அப்பாவிற்கு.  முதலில் அப்பா வேலை செய்த இடத்தில இருந்து போன் அடிக்கடி வரும் , அதாவது அலுவல் சந்தேகங்களுக்காக, அனுபவம் இருக்கும் அப்பாவிடம் கேட்க வரும் . அடுத்து சொந்தகாரர்கள் ..  பணி ஒய்வு பெற்று விட்டீர்களா? என்று தெரிந்தே கேட்பார்கள் . பார்பவர்கள் அனைவரும் அடுத்து எண்ண செய்ய போகிறீர்கள்? என்று கேட்பார்கள் . பேப்பர், டிவி யில், தான் இருந்த வேலை சம்பந்தமான செய்திகளை பார்க்க நேரிடும். அப்பா வேலை பார்க்கும்போது நாம் கூட படித்த , விளையாடிய சிறுவர்கள் ( நண்பர்களைத்தான் சொல்கிறேன் ) நமக்கோ அல்லாத வீட்டிற்கோ போன் செய்யும் போது அல்லது நேரில வரும்போது , எப்படி பொழுது போகிறது? கேட்க ஆரம்பிகிறார்கள் . நெருங்கிய நண்பர்கள் தூரத்தில் இருந்து போன் பண்ணி பேசும்போது , மிகவும் அன்யோன்யமாக பழகியதால் உரிமையில் வெட்டி வேலையாக இருகிறதா? என்று கேட்க சந்தர்ப்பம் உள்ளது . (உண்மையில் மனதில் எதுவும் இல்லாமல் பேசினாலும் , அவர்களுக்கு நாம் அப்பாவின் மனநிலை புரியாது . இதை தயவு செஞ்சு புரிஞ்சே ஆகணும்). இந்த உரிமையை யாரும் எடுத்துக்கு கொள்ளவே கூடாது.

இது எல்லாம் நடக்கும்போது அப்பாவின் மனநிலை பாதிக்க படுகிறது. இது நடக்காமல் நாம் போராட வேண்டி இருக்கிறது . இன்னும் சொல்ல போனால் இரண்டு மாததிருக்கு பின்பு அப்பா வை விட நாம்தான் இதற்காக மிகவும் வருத்தம் அடைகிறோம்.

நாம சின்ன பையன இருக்கும்போது அப்ப அப்பாவோட  ஆபீஸ் க்கு போகும்போது, அப்பா மத்தவங்க முன்னாடி கை கட்டி நின்னா, சல்யூட் அடிச்சா நமக்கு அவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும். அதே கஷ்டம்தான் பணி ஓய்வின் போதும் நமக்கு தோணுது.

ஒரு கட்டத்திற்கு மேல் பெற்றோர், மகன்/ ள் உறவு அப்படியே தலைகீழாக மாறும் என்ற வாசகம் உண்மைதான். இரண்டுமே சரிவிகிதத்தில் மாற வேண்டும் புரிதல் நடைபெற.

இந்த காலகட்டத்தை தாண்டி , அப்பாவிடம் மற்றவர்கள் சல்யூட் அடிக்கும் காலம் வரும் போதுதான் நமக்கு நிம்மதி பிறக்கிறது .
இந்த காலகட்டம் முடியும்வரை அப்பாவிற்கு தொந்தரவு கொடுக்காத சூழ்நிலைக்கும் , கொடுக்காமல் இருக்கும் மனிதர்களுக்கும் நன்றி.

4 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை.........

Nadu Nisi Naai சொன்னது…

Good one. You have a deep view and analysis in a different dimension. I think you are one of the sone of a retred dad as the entire article focussed on a son and dad. Why cant it be a daughter? Just think of the same dad in case of having only one daughter. I believe it wil be worse than in the son's case.

After all, All the living things are just looking for attentio and recognition and loved to be loved more than loving others. IF they get it, then every other thing is of feather weight for them.

Thanks for another detailed good blog..Looking forward more..

Ival,
- NNN

Guna சொன்னது…

Nadu nisi naay :Thanks. Yes ur rit.. wn i am writng i thought in dautr s point of view also.. obusly it is worse than a son's case. but i dont want to touch that now... infact i am going to see that also in live. in last lines only i have used Magan/L like that.. Futur readers will read your comment and they will analysis n think ur words too :)

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html