வெள்ளி, 21 ஜனவரி, 2011

மறதியின் சக்தி

மறதி..


இதுவும் மனிதனுக்கு முக்கியமான ஒன்று.


சில நேரங்களில் இது நமக்கு கண்டிப்பா தேவை பட வேண்டும். சில நேரங்களில் தேவை பட கூடாது . இது எல்லா வயதினருக்கும் , அணைத்து வகை ஆட்களுக்கும் ,எந்த ஒரு நிகழ்வுக்கும் , எந்த ஒரு வயதிலும் தேவை. முடிந்த வரை இதை எழுத முயற்சி பண்ணுறேன்.

சும்மா படிக்குறப்ப  மறக்க கூடாது , போறப்ப வழிய மறந்துட கூடாதுனு  ஒவ்வண்ணா சொல்லாம , சில விஷயத்த மட்டும் தொட்டுட்டு போறேன் ..


  நாம மறக்கணும்னு நினைக்குறது கண்டிப்பா மோசமான சம்பவங்கள தான் இருக்கும். சந்தோசமான சம்பவங்கள யார்தான் மறக்க நெனைப்பாங்க? உதாரணதுக்கு நிறைவேறிய  காதல் சொன்னா நாள் , குழந்தை பிறந்த அந்த நாள்  இப்படி.
 நாம் மறக்க நினைக்க  கூடியது கண்டிப்பா சோகமான நிகழ்ச்சியாதான் இருக்கும் அல்லது அவமானப்பட்ட நிகழ்ச்சிய இருக்கும். சாதரணமா ரோடுல விழுந்தது , டிரஸ் கிளிஞ்சது இந்த மாதிர விஷயமே ஒரு வாரத்துக்கு மறக்காது .. இன்னும் பெரும் அவமானம் , இறப்பு இந்த மாதிரி  விஷயங்கள சொல்லவே வேண்டாம்.

உண்மைய்லையே சந்தோசமான சம்பவங்கள விட துக்கமான , பிடிக்காத சம்பவங்கள் தான் நம்ம மனசுல அழியாம ஞாபகத்துல இருக்கும் . அதாவது மறக்க கூடாதத  மறந்தா கூட , மறக்க வேண்டிய நிகழ்ச்சிகள் மறக்குறது ரொம்ப கஷ்டம் .

அம்மா அப்பா க்கு நடுவுல கண்டிப்பா சண்டை வந்து இருக்கும், அத நாம பார்த்து இருப்போம் .. இது எல்லா வீட்லயும் கண்டிப்பா நடந்து இருக்கும்.. பின்னாடி அடுத்த  நாள்ல  அவங்க இத மறந்து ஒண்ணா இருந்தா கூட, நமக்கு இது ஞாபகத்துல இருக்கும்.. இது மறைஞ்சுட்டா நமக்கு பிரச்னை இல்ல . மறக்கலனா  வேற என்ன பண்ண முடியும் ? கஷ்டமாதான் இருக்கும்.. நாளைக்கு நம்ம குழந்தைங்களுக்கு இதுக்கு சந்தர்ப்பம் குடுக்காம பார்த்துக்க வேண்டியதுதான். இந்த மாதிரி  சின்ன சின்ன குடும்ப விஷயங்கள நிறைய அடுகிட்டே போகலாம்.


மறதி நம்ம குணத்தையும் மாற்றும்/மறக்கடிக்கும் !!!!!!!

பொது பிரச்னைல  கூட மக்கள் எல்லாத்துக்கும் சேர்த்து மறதில ஒரு ஒற்றுமை இருக்கும். எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையா ஆனா மறதில இருக்கும்.
சில உதாரணமா.. IPL ஏலம் போகும்போது இவ்ளோ காசா!!!!!! அய்யோ அம்மா நம்மள முட்டாள் ஆக்குறாங்க, GROUND கு போய் மேட்ச் பார்க்க கூடாது, டிவி ல பார்க்க கூடாதுன்னு சொல்லுவோம் , ஆனா ஏலம் முடிஞ்சு ஆறு மாசம் கழிச்சு ஆடுறப்ப பல்ல காட்டிட்டு பார்ப்போம். அரசியல் , தேர்தல் ஓட்டும் இப்படித்தான். இங்க நாம மறக்குறது நம்மளோட கோபம். நடகுறப்ப இருக்குற கோபம் சில நாட்களில் வீரியம் குறைஞ்சு மறதியா வந்து நம்மள மாத்திடுது.
 இதே மாதிரி செஞ்ச உதவியை மறக்குறப்பவும், கூட இருந்த ஆள மறகுறப்பவும்
கூட குணம் கெட்டு போகுது.

மறதி எங்க வேணுமோ அங்க இல்லனாலும் பிரச்னை, இல்லாத இடத்துல இருந்தாலும் பிரச்னை.

தோல்வில கூட மறக்க கூடிய இடமும் இருக்கு, மறக்க கூடாத இடமும் இருக்கு.  எப்படி தோத்தோம்னு மறக்காம அடுத்த தடவ அந்த தப்ப பண்ணாம இருந்து  ஜெயுச்சுடலாம். ஆனா தோல்விய மட்டுமே நெனைச்சுட்டு மறக்காம இருந்தா அடுத்தும் தோல்வி தான் . attempt  அடிகுறதுக்கே பதட்டம் இருக்கும். அட ஏன்.... படத்துல கூட வசனம் வருது  " காதல் தோல்வில காதலியை/ காதலனை  மறக்கலாம், ஆனால் காதலை  மறக்க கூடாது" னு .

உண்மைலேயே "இரண்டு மனம் வேண்டும்..." பாட்ட அனுபவிச்சுதான் எழுதி இருக்காங்க.

இப்ப இதை எழுதும்போது மறக்க கூடாத எதை மறந்து , மறந்து விட கூடிய எதை எழுதினேன்னு தெரியல :) ஆனா திருப்பி  படிச்சா நல்லா இல்லையோ ? ..

கருத்துகள் இல்லை: