வியாழன், 6 ஜனவரி, 2011

ஆனந்த விகடன் vs குமுதம் ( VIGADAN VS KUMUDAM)

ஆனந்த விகடன் , குமுதம் இந்த இரண்டு வார இதழ்களின் அட்டை  படத்திலும் போடபட்டு இருக்கும் வாசகம் ... நம்பர் 1  தமிழ் வார இதழ் ( குமுதம்)  தமிழ் வார இதழ்களில் நம்பர் 1  ( ஆனந்த  விகடன் ).

இந்த இரண்டு வார இதழ்களை  பற்றி சில ... அதுல வர்ற ஆறு வித்தியாசம்  மாதிரியே  ,, முக்கியமான ரெகுலர் ஆறு மேட்டர் ..

1 .  ஆனந்த  விகடன் vs  குமுதம் என்பதை விட  திமுக  vs  அதிமுக  என்பது சரியாக  இருக்கும், அரசியல் கட்டுரைகள்.

விகடனில் திமுக  விற்கு எதிராகவே எழுத்துக்கள் இருக்கும் .. உண்மைகள்  இருக்கும் ....  அதே சமயம் எதிர் காட்சிகளுக்கு அதிக துதியும் இருக்காது.
குமுதம் - திமுக விற்கு கிட்டதட்ட ஜால்ரா அடிச்சு எழுத்துக்கள் இருக்கும், எதிர்கட்சிகளை ஏளனம் செய்து இருக்கும் .

( திமுக  விற்கு குமுதத்தில் பங்குகள் இருக்கலாம் , அதே சமயம் திமுக அனந்த   விகடனிடம் பங்குகள் கேட்டு "அணுகி " இருக்கலாம். ) .

2 .  சினிமா

விகடன் - தகவல்கள் நடிகர்களை பற்றி மற்றும் அல்லாமல் மற்ற திரை துறையினரை பற்றியும் இருக்கும்.  தகவல்கள் இணையதளத்திற்கு வரும் முன்பே விகடனில் வந்து இருக்கும்.
குமுதம் - அதிகமாக நடிகைகளை பற்றியே  இருக்கும். இணையத்தில இருக்கும் தகவல்கள் இருக்கும்.

3 .  கேள்வி - பதில்
ஹாய் மதன்  & அரசு

சாரி இத compare  பண்ணி பேசுறதே தப்பு. ( இதுல கூட... அரசு கேள்வி-பதில் ல கண்டிப்பா ஒவ்வரு வாரமும் அதிமுக வ கிண்டல் அடிச்சு  ஒரு பதில் இருக்கும். நடிகைகள இடைல , கண்ணுல , கழுத்துல யாரு அழகுனு ஒரு கேள்வி கேட்டு அதுக்கு நாலு நடிகை படம் போட்டு இருக்கும்)

4 .  இப்ப எழுத்தாளர்கள் பகுதி னு குமுதம்ல இல்ல.நல்லது. விகடன் - நல்ல வேல சாரு வின் மரங்கொத்தி பறவை நிறுத்திடாங்க.

5  விகடன் - பொக்கிஷம் - தெரியாத அந்த காலகட்ட நிகழ்வுகள் ... அல்லது மறந்த அந்தந்த கால கட்ட நினைவுகள் .... குமுதம் - அந்த நாள்  - ஹாஆஆஆ  ......

6 . சினிமா விமர்சனம் -  குமுதம் நிஜமா படம் பார்த்து தான் எழுதுறாங்களா? எத்தன தடவ பார்த்து , எத்தன பேர் பார்த்து எழுதுறாங்க?
 விகடன் - இது கண்டிப்பா குழு விமர்சனம் . கண்டிப்பா சம்பந்தப்பட்ட சினிமா டீம், விகடன்ல என்ன எழுதி இருக்காங்கன்னு எதிர் பார்த்துட்டு இருப்பாங்க.. மார்க் அதிகமாக இருந்தா அத நாளிதல்ல விளம்பரம் பண்ணி தன் பட  தரத்துக்கு ஒரு benchmark  காட்டுவாங்க.
 

12 கருத்துகள்:

Rajeevan சொன்னது…

i like kumudam.but i accept ur points

திருப்பூர் சரவணக்குமார் சொன்னது…

ஓரளவு உண்மை......

ஆகாயமனிதன்.. சொன்னது…

சரி v சரி !

guna சொன்னது…

நன்றி ராஜீவன், திருப்பூர் சரவணகுமார் மற்றும் ஆகாய மனிதன்

கார்த்தி கேயனி சொன்னது…

சரியான ஒப்பீடு

டக்கால்டி சொன்னது…

Good comparison. One more point...You forgot to mention the book price.

nandunisinaay சொன்னது…

Average comparison....You would have comared about the stories getting published in the book. Te kind of arts coming in vokatan is good (shyam, Ma se, J etc...). IF you would have obsereved that vikatan is changing according to the current trends like vaklaipayudhey, blogs, varaverparai, etc.. But in case kumudam nothing as such...The quality of pages also awesome in vikatan (though the vikatan adapted the article structure from India today). IF you read the stories getting published in kumudan..u will get irritated...nothig special...whereas in vikatan there are good articles like ninaivu naadakal etc.. Also u wud have observed that u will realize that u read vikatan in no time... Once i counted the ad pages in kumudam, it was 40 pages...ofcourse voikatan is not a great weekly but it has its own traditions and reach and the changes that they brought in made them as a marketleder...


kalki is also good weekly..

Next time u compare Namadhu MGR Vs Murasoli :)

Can we expect some blogs on human relations, todays life, sports, surprises and shiocks, interesting facts...seems u r multi talented personality..

guna சொன்னது…

Nandri TAKKALTI & NANDUNISINAY...

its just a samll comparision... took only 6... moreoover if we compare more and more points readers are not initrested to read all the points.. may be part 2 is right cohice..

Yes catch you all after pongal :)

Padmanaban சொன்னது…

Kumudam was good some time back but in recent days it has gone as shit piece. Being 12 years of regular reader planning to stop it!

கோவில்பட்டி ராஜ் சொன்னது…

இன்னொரு முக்கியமான விசயத்த நீங்க சொல்லல ...அது ரெண்டு பேருமே சினிமாவ மட்டும் முக்கியமா வச்சு புளப்பு நடத்துறவங்க !!!

Guna சொன்னது…

Correct than.. aana nammalla yethana ber puthiya thalaimurai padikirom?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒப்பீட்டுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.