தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட இயக்குனர்களாகா இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்கள் இருகிறார்கள்...
ஆனா இதுல பெரும்பான்மையான இயக்குனர்கள் ஒரு வட்டத்திற்குள் மட்டுமே படங்களை இயக்கி வருகிறார்கள் .. அதில் ஒரு ஐம்பது இயக்குனர்களை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
பிரபு தேவா, ஜவஹர், ஜீவா, கண்ணன், ராஜா இவர்கள் ரீமேக் படங்கள் மட்டுமே இயக்குவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருகிறார்கள் .. அப்படி எடுத்தாவது அணைத்து படங்களும் ஹிட் ஆகிறதா.. அதுவும் இல்லை.. ராஜா மட்டும் அதிக வெற்றி சதவீதம் காட்டி இருக்கிறார். இது வரை இவர்களது உண்மையான திறமை என்னவென்று யாருக்கும் தெரியாது.
வேலு பிரபாகரன், சாமி, சூர்யா இவங்க என்னய்யா பண்ணிட்டு இருக்காங்க? படமா? இவங்க எடுக்குற படம் எந்த மாதிரி தியேட்டர் ல போடுறாங்கே தெரியல.. சர்ச்சை அப்படீங்குற ஒரு வார்த்தைக்காக படம் எடுக்கிற ஆட்கள் இவர்கள்.
சரண், சுராஜ்.கரு பழனியப்பன்,அழகம பெருமாள், வசந்த் , சீமான் ,சிம்புதேவன்,துரை,சுசி கணேஷன் இவங்களுக்கு எந்த மாதிரி படம் எடுக்குறதுளையே ஒரு குழப்பம்.. இதுனாலேயே அதிக மொக்கை படம் இவங்க கிட்டருந்து வருது ... ஒரு படம் நல்லதா கொடுத்துட்டு.. அடுத்து வர்ற பல படங்கள மொக்கைய கொடுத்து கடுப்படிக்குற ஆளுங்க.. அதன் இப்ப படம் இல்லாம இருக்காங்க .. வசந்த் மட்டும் இதுல கொஞ்சம் பரவால ஆனா இப்ப படம் இல்ல ..
இது வரைக்கும் சொன்ன ஆட்கள் கண்டிப்பா இவங்க இனிமேலும் வேறு விதமான படங்கள் கொடுக்க மாட்டார்கள்.
அடுத்து ஷங்கர் - நல்ல பார்த்த .. ரெண்டு விதமா மட்டும் படம் எடுக்குற ஆளு.. ஒன்னு எல்லாருக்கும் தெரிஞ்ச அதே விதமான படங்கள்.. இந்தியன் , ஜென்டில்மேன் தவிர மத படங்கள் இதே பாதிப்புல வந்த படங்கள்.. அப்புறம் ஒரு காதல் படங்கள்.. நிசமா காதல் காட்சிகள் அவ்ளோ நல்ல இருக்காது ... பிரமாண்டம் அப்ப்டீன்ர்குற வலைக்குள்ள சிக்கிட்டு இருக்குற ஒரு ஆள்.
சசிக்குமார், சசி, பாண்டிராஜ், சமுத்திரகனி,பாலாஜி சக்திவேல்- ஆளுக்கு ஒரு நல்ல படம் கொடுத்து இருக்காங்க.. ஆனா இபப்டி நிறைய பேர் வந்து காணாம போய் இருக்காங்க.. இன்னும் போக போக தான் தெரியும் இவங்க எந்த மாதிரி வலைல சிக்கிபாங்கன்னு. .
கௌதம், முருகதாஸ், மிஸ்கின்,விஷ்ணுவர்தன்,வெங்கட் பிரபு - இவங்க PRESENTATION அப்படீங்குற வலைல மாட்டிட்டு இருக்குற ஆளுங்க.. இவங்களால எல்லா விதமான படங்களும் முக்கியமா கிராம படங்கள் எடுக்க முடியாதுன்னு தோணுது . இதுல காப்பி அடிக்குற கதையும் இருக்கு..
பாலா,சேரன்,, ராதா மோகன்,வசந்தபாலன் - மனித உணர்வுகளை அட்டகாசமா கொடுக்குற ஆளுங்க.. தேவை இல்லாத காட்சி அமைப்புகள்.. குத்து பாடு, ஆபாசம் இல்லாத ஆட்கள் .. சில டைம் ரொம்ப யோசிச்சு சேரன் மொக்க போடா வாய்ப்பு இருக்கு.. ஒரே மாதிரி ஆனால தரமான படங்களை கொடுத்து கொண்டு இருப்பவர்கள்.. இப்போது வேறு மாதிரியான படங்களும் கொடுக்க முயற்சி எடுத்து கொண்டு இருப்பவர்கள் .. பாலா விடம் இருந்து ஒரு சிட்டி படம், ராதா மோகனிடம் இருந்து ஒரு கிராம படம் , வசந்த பாலனிடம் இருந்து ஒரு ஆக்ஷன் படம் வந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இப்போதைக்கு கொடுத்த சில படங்கள்ல இருந்து விதிசயசம் காட்டி இருக்குற இயக்குனர்கள் இவர்கள்..
s p ஜனநாதன், அமீர், வெற்றி மாறன், விக்ரம் குமார்,சுசீந்திரன், , செல்வராகவன், , விஜய்,
இவர்களது கதைக்களமும் ஒவ்வரு பட்டஹிர்க்கும் வித்தியாசபடுகிறது.. ஜனநாதன் கடல், காற்று, காடு என்று வேறு வேறு கதைகளமும், அமீர் நகரம்,மலை,கிராமம் என்று வெவ்வேறு கதையுடனும் சுசீந்திரன் கிராமம், நகரம், நகைச்சுவை என்றும் , விஜய் எல்லா தரப்பு கதைய்டனும், வெற்றி மாறன் நகரத்தின் பின்னணி , கிராமத்தின் பின்னணி என்றும் கொடுத்து இருகிறார்கள். விக்ரம்குமார் horror என்ற மிகவும் தொடாத இடத்தையும் அடுத்த படத்தையும் முற்றிலுமாக வேறு கதைகளத்துடனும், செல்வராகவன் முதலில் காத படங்களையும் பிறகு பாண்டசி படத்தயும் , அடுத்து திர்லர் படாத இயக்க முடிவு செய்ததும் .. இது வரை எந்த ஒரு வட்டதிர்க்குள்ளும் சிக்காமல் எந்த விதாமான கதையையும், கதைகளத்தயும் எடுக்க முடியும் என்று தோன்றுகிறது.. அனால் இது வரை ஐந்து படங்களை தாண்டவில்லை.. தாண்டினால் தெரியும்..
5 கருத்துகள்:
My top 10 list of variety director stands as below: (as of now)
1.Suseendiran
2.Selva raghavan
3.Jana naadhan
4.Ameer
5.Vetri maaran
6.Paandi raj
7.Vasantha baalan
8.Vijay
9.Lingu saamy
10.Sasi kumar
- NNN
@ NNN- BALA!?!?!?!
எல்லாம் சரிதான்.. நம்மூர்ல கே. எஸ். ரவிக்குமார் அப்படின்னு ஒருத்தர் இருக்காரே.. அவர மறந்துட்டீங்கள?
மினிமம் கேரன்ட்டி உள்ள இயக்குனர்களில் ரொம்பவும் முக்கியமானவராசே அவரு..
@ கண்ணன் போட்டசுங்க .. அவர பத்தி இதுக்கு முந்தின போஸ்ட் ல போட்டசுங்க
எல்லாம் ஒகே. சிம்பு தேவனை விட்டு விட்டீர்கள். எடுத்த மூன்று படங்களும் மூன்று வீதம். மூன்று களம்
கருத்துரையிடுக