வெள்ளி, 18 மார்ச், 2011

ஏன் வேலை கிடைக்காது - காரணம் கல்வியின் ஆசிரியர் முரண்பாடு

இன்று படித்து முடித்து வேலையில் இருக்கும் ஆட்களை .. உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார் என்று கேட்டால்.. அவர்களிடம் இருந்து  சில பெயர்கள் வரலாம்.. ஆனால் அதை கவனித்தால் தொண்ணூறு சதவீதம் அவர்கள் பள்ளி ஆசிரியர்களாக இருப்பார்கள்.  இந்த சதவீதத்தில் கல்லூரி ஆசிரியர்கள் மிக குறைவதற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் என்று எடுத்துக்கொண்டால் அவர்கள் மாணவர்களுக்கு  கற்று தருவது  பொதுபபாடமாகத்தான் இருக்கும். இதில் அந்த அந்த பாடத்திற்கு  தனி தனி ஆசிரியர்கள் இருப்பார்கள்.. அந்த அடிப்படை கல்வியை கொடுத்தால் மட்டும் போதுமானது.  இதை எத்தனை பேர் சரியாக செய்து வருகிறார்கள் என்பது மறுபுறம். ஆனால் இவர்களை காட்டிலும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அதிக தகுதி தேவைபடுகிறது .

கல்லூரி ஆசிரியர்கள் எத்தன அடிபடையில் தற்போது கல்லூரிகளில் பணியில் அமர்த்தபடுகிறார்கள்?

தற்போது ஊருக்கு நாலு கல்லூரிகள் வந்து விட்டன .. இதற்க்கு ஆசிரியர்களும் அதிகமாக தேவை படுகிறார்கள்.

இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் பெரும்பாலும் படித்து முடித்து ஒரு Phd முடித்து நேராக வந்து விடுகிறார்கள்

அதிக கல்லூரிகள்  வந்து விட்டதால் ஒவ்வரு ஆண்டும் பல மாணவர்கள் வெளி வருகிறார்கள். இதில் ஒரு குறிப்பிட்ட சதவீத மாணவர்கள் .. தான் பயின்ற கல்லூரியிலோ  அல்லது வேறு ஒரு புதிதாக  ஆரம்பிக்கபட்ட கல்லூரியிலோ  லேப் அல்லது ஆசிரியர் பொறுப்பில்  நேராக சென்று விடுகின்றனர்.

இவர்களிடம் பயிலும் மாணவர்களுக்கு இவர்கள் என்ன சொல்லி கொடுக்க
முடியும்?  இவரகளிடம் பயின்ற குறிப்பிட்ட மாணவர்களுக்கு  என்ன தகுதி உண்டாகும்? இப்படி பத்து  ஆசரியர்கள் செல்லும் இடத்தில்ஆயிரம் மாணவர்கள் வெளி வருகின்றனர் ..

கல்லூரிகளில்  பணிபுரிய விண்ணப்பிக்கும் ஆசிர்யர்களின் வயது,
 பணத்தையும் , அவர்களின் கல்வி தகுதியையும், மதிப்பெண்களையும் பார்க்கும் கல்லூரி நிர்வாகம்.. அவர்கள்  எந்த கல்லூரியில் படித்தார்கள் என்பதையும் ..
முக்கியாமான தகுதியான industrial  exp  என்ன  எவ்வளவு என்பதை அவ்வளவாக 
பார்ப்பதில்லை..குறைந்த  சம்பளத்துக்கு பணியில் ஆட்கள் கிடைகிறார்கள் என்று வேலையில் அமர்த்தி கொள்கிறார்கள்.  
கல்லூரிகளில் பணிபுரிய குறந்த பட்சமாக PG  ENGG  தேவை என்று சொன்னாலும்
 இதை எத்தனை கல்லூரிகள் நடைமுறை படுத்துகிறார்கள்?
 இந்த தகுதியை விட எவ்வளவு காலம் இவர்களுக்கு குறிப்பிட்ட தொழில் துறையில் 
 அனுபவம்  இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்..

குறிப்பிட்ட துறையில் படித்து அதில் குறைந்த  பட்சம் ஐந்து வருடம் பணி புரிந்த ஆட்கள் மட்டுமே 
சிறந்த ஆசிரியராக செயல் பட முடியும்..

 தற்போது படித்து விட்டு இரண்டு முதல் ஐந்து வருடம் வேலை புரியும் அனைவருக்கும் இது தெரிந்து இருக்கும்...

தற்போது தொழில் துறையில் அனுபவம் இல்லாமல் பணி புரியும் ஆசிர்யர்களுக்கு சத்தியமாக அவர்கள் கற்று கொடுக்கும் பாடமும் எந்த அளவுக்கு மாணவர்களுக்கும் முக்கியம் என்றும் தெரியாது, அந்த பாடத்தில் நடைமுறை பொறியலில் இருக்கும் நவீனமும் , உண்மையாக தொழில்துறையில் என்ன நடந்து கொண்டது இருக்கிறது என்றே தேராது. இருபது முப்பது வருஆக்கு காகிதங்களில் எழுதப்பட்டு இருக்கும் எழுத்துகளை முதல் நாள் இரவு படித்து அடுத்த நாள் பகலில்  மாணவர்களுக்கு படித்து காட்டுவார்கள். இரண்டு மூன்று வருடம் களைத்து படிக்கமால் அதை அப்படியே ஒப்புவித்து விட்டு போவார்கள்.இதுதான் இவர்களது ஆசிரியர் அனுபவம்.

இவர்களிடம் பயிலும் மாணவர்களுக்கு பணிதேர்விற்கு என்ன செய்ய வேண்டும்.. எங்கு செல்ல வேண்டும், எப்படி தன்னை தயார் படுத்தி கொள்ள வேண்டும்  என்று கூட தெரியாது. இவைகளும் படித்து விட்டு வேலைக்காக கடைசி வரை அலைந்து கொண்டு இருக்க வேண்டியதுதான். அப்படியே கிடைத்தாலும் தொடக்க வருடங்களில்
பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும். 

அனால் இங்கு எத்தனை பேர் ஐந்து வருடமா வேலை பார்த்து.. பிறகு அதை விட குறந்த சம்பளத்துக்கு ஆசிரியாக செல்ல விருப்பபடுவார்கள்?

இதற்க்கு என்ன வழி?


2 கருத்துகள்:

Nadu Nisi Naai சொன்னது…

Rightly Said. Its like a powerful punch ! I hate the college lecturers whoever I have seen so far. I could see now a days, students knows more in technology than the professors. The college professors needs to update them every now and then to sync up with the happenings in any technology. Only the students who are studying in cities are getting good exposures. I personally know many college guys comes to know about the latest trends and technology only through their friends. They are ready and hungry to learn more but there is no one to guide and support them. I could see lot of enthusiastic people working currently are interested to come back to college as a professor but there are 2 hurdles for them

1.They need a ME/Mtech degree to be a professor (To me its a very idiotic one. The ME/Mtech student might have a singl eounce of knowledge about industry comparing to a guy who worked in industry for 5 years)

2.The way they get treated by college management (You need to respect those guys who came back as a professor after a 5-6 years stint in industry, they worth it with the knowledge and experience they gained.)

One funny incident to share, one of the college student told the professor to type wwww instead. The professor asked why? the student told , the internet speed will be fast based on number of "w"s you type and the poor professor type as many "W" s for an url... He was a professor for object oriented analysis and design subject for computer..

See how pathetic....
Damn bull shit useless professors..(not all)

- NNN

Guna சொன்னது…

இதுல இவங்களுக்கு தான் பெரிய ஆளுன்னு நெனப்பு.. இன்டெர்னல் மார்க்ல இவனுங்க திறமைய காட்டுவாங்க