திங்கள், 28 மார்ச், 2011

தொலைந்து/த்து விட்டவை



இன்றைய கால கட்டத்தில் பல விஷயங்கள் காணமல் போய் விட்டது.. சின்ன சின்ன விஷயங்களில் கூட  முன்னேற்றமும் , மாறுதல்களும்    வந்து விட்டது..
சில சின்ன விஷயங்களில் கூட வசதிக்காகவும் ,மாறுதல்காகவும் நிறைய மாறுதல்கள் .

அதில் சில சின்னசின்ன விஷயங்கள் மாறாமல் இருந்து இருக்கலாம் என்று தோன்றும் .. அந்த சின்ன சின்ன விஷயங்கள் சில ... 

காமிக்ஸ்் - தமிழ் காமிக்ஸ் கதைகளை அப்போது பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் அனைவரும் படித்தார்கள் ... மாயாவி, டெக்ஸ் வில்லர் , டைகர், லக்கி லுக், ரிப் கெர்பி, மாடஸ்டி , இரும்பு கை மாயாவி , ஆர்ச்சி என்று காமிக்ஸ் கதாநாயகர்களை  தூக்கி வந்த லயன் , ராணி காமிக்ஸ் இப்போது எந்த அளவிற்கு விலை போகிறது என்று தெரியவில்லை..  மீண்டும் இதை  மறு வெளியீடு செய்தால் .. நல்ல மார்க்கெட்டிங் செய்தால் இதருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்.. - இது கண்டிப்பாக மீண்டும் வர வேண்டும்.

பொங்கல் வாழ்த்து அட்டைகள் - sms , e -card  போன்றவற்றால் அழிந்து  போன ஒன்று ... புது வருடம், பொங்கல் வந்தால் யாருக்கு என்ன , எவ்வளவு காசில் எதை அனுப்ப வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு  முன்பே யோசிக்க ஆரம்பித்து விடுவோம்... எவ்வளவு காலம் ஆனாலும்  அதை திரும்பி பார்த்தால் மகிழ்ச்சியாக  இருக்கும்.. தற்போது ஒரு நிமிடத்தில் வரும் e  கிரீடிங் அந்த ஒரு நிம்டம் கடமைக்காக ஒரு reply  மட்டுமே கொடுக்க செய்யும் .. அல்லது பல சமயங்களில் பார்க்காமலே அழித்து விட தோணிடும்.

பிக் பன் பபுள் கம் - தற்போது நிறைய  சிவிங்கம் வந்து விட்டாலும்,, பல இலவசம் கொடுத்தாலும் .. பதினைந்து இருபது வருடங்களுக்கு  முன்பு இருந்த  ஒரே brand . இதில் கிரிக்கெட் வீரர்கள் படம் போட்டு அதில் 1 ,2 ,3 ,4 ,6  என்று ரன்கள் மட்டும் போட்டு இருக்கும்..இதுல 100  அடித்து அணைத்து பேப்பர்களையும்  அனுப்பினால் ஒரு புக் இலவசாமாக கிடைக்கும்.. அனால் தற்போது அது இது என்று எது ஏதோ வந்து விட்டது .

டென்ட் திரையரங்கு - நாளுக்கு இரண்டு ஷோ மட்டுமே போடுவார்கள்.. மரபலகைகளையும் , மணலையும் மட்டும் கொண்ண்டு இருக்கும்.. இதுவே தற்போது வேறு வடிவத்தில் வந்து விட்டது . இது மீண்டும் தேவை இல்லை என்றாலும் .. இது போன்றவைகள் எங்கேயாவது இருந்தால் பர்ர்க்க ஆசை

கதை - அம்புலி மாமா பொங்கர புத்தங்கங்கள் இன்னும் இருகிறதா என்று தெரியவில்லை .. சாப்பிடும்போது  கதை சொல்லி ஊட்டுவது இன்னும் எதனை  வீடுகளில் தொடர்கிறது அல்லது இருக்கிறது என்று தெரியவில்லை..

கடிதம் - இந்த போக்குவரத்து தற்போது தொண்ணூறு  சதவீதம் நின்றே விட்டது.. கைபேசி,தொலைபேசி, மெயில் போன்றவற்றால்  நின்று போய் விட்டது ...

லவ் லெட்டர் கூட அதே மாதிரி தான்.. இன்று எத்தனை பேர் இதை கொடுக்கிறார்கள் ? :)



சொல்ல போனால் தற்போது எழுதுவது என்பது குறைந்து  விட்டது.. எத்தனை  பேரால் தற்போது வேகமாகவும் , அழகாகவும் எழுத முடியும் என்று தெரியவில்லை ..


சில விளையாட்டுக்கள் கூட குறைந்து விட்டது , .. கில்லி , பம்பரம் , பட்டம் போன்றவை .இப்போது இருக்கும் சிறுவர்கள் கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆடுவதிருக்கு காட்டும் விருப்பத்தை இதருக்கு காட்டுவதில்லை..








இதே போல் இன்னும் சில எல்லோருக்கும் தான் MISS  பண்ணுவதாக கண்டிப்பாக தோணி கொண்டே இருக்கும்...

7 கருத்துகள்:

டக்கால்டி சொன்னது…

Nyabaga padutthiyathukku nandri...

டக்கால்டி சொன்னது…

ninaikkum pothe oru suvarasyam...antha kaala ninaivugal azhikka mudiyaathavai...
big fun bubble gum run sekkurathu...aasai chocolate cover neelamaa izhukkurathu...ipadi niraiya...

Guna சொன்னது…

@ takkalti yes yes.. innum mukkiyamaana silar enkitta 'aasai" chocalate ketkuraanga boss :)

Nadu Nisi Naai சொன்னது…

Oh man......Reading comics..lion, muthu and rani comics....Never ever i forgot...its used to give me as if i m the hero of that story.. and that big fun bubble gum, getting 6 in tht is like a gettng world cup for us...and those nice pics...

- NNN

King Viswa சொன்னது…

நண்பரே,

இன்னமும் கூட தமிழில் காமிக்ஸ் கதைகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்று நமக்கு பல புத்தகங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இதோ சமீபத்தில் வந்த கதைகளின் விவரம் குறித்த சுட்டி: லேட்டஸ்ட் தமிழ் காமிக்ஸ் - சிக் பில் + இரும்புக்கை மாயாவி

கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

Guna சொன்னது…

@ king wishwa- :) THANKS.. ur blog is cute one.

Appadieye Ella comics booksum kidakura idam engannu sollunga.. i want to buy all the ood & new books for villar @ Tiger ( Rid gerbi too)

Harinniy சொன்னது…

i nevr knew that most of the things u've mentioned here even existed!!!!from ur post and the comments that follow i feel that i've missed all these wonderful things in my life!!!kandipa indha comics padikanum and ofcourse bambaram vida kathukanum!!!