KPN டிராவல்ஸ் ... - Kன Pசங்களுக்கு Nன்றி இப்படிதான் பயணம் செய்யுற பயணிகளை நெனச்சுட்டு இருக்கானுங்க இவனுங்க.
முன்பு ஒரு காலத்துல தனியார் பஸ்னா இது மாட்டும் தான்.. இதுல புக் பண்ணதான் எல்லாரும் விரும்புவாங்க .. அப்ப இவங்க CUSTOMER SERIVICE கூட நல்லாதான் இருந்துச்சு.. ஆனா இப்ப பல தனியார் போக்குவரத்து வந்துட்டாலும் இன்னும் இவங்கள நாடி போகதான் செய்யுறாங்க .. காரணம் முதல்ல வந்த BRAND NAME .
ஆனா இப்ப அடிக்கடி TRAVEL பண்ணுறவங்களுக்கு தெரியும் இந்த TRAVELS யோக்கியத . வண்டி 1O மணிக்குன்னு சொன்னா 12 மணி ஆனாலும் வராது... அப்படியே வந்தாலும் , அதுக்கு அப்புறமா சரக்கு ஏத்துறன்னு , அதுல மூட்டை மூட்டையா ஏத்தி வெறுபேத்துவானுங்க . அப்புறம் ரொம்ப லேட்டா மூட்டையோட நாமும் பயணத்துல இருப்போம்..
SETC பஸ் மாதிரியே இப்ப இந்த KPN வண்டியும் கட்ட வண்டி ஆனது நிஜம்.
அடிக்கடி பாதி தூரத்துல , ஒரு காட்டுல போய் வண்டி பளுதடைஞ்சு நின்னுடும். அதுக்கு அப்புறம் இவனுங்க 4 5 மணி நேரம் கழிச்சு போன் பண்ணி, மறுபடியும் எங்க புறப்பட்டமோ அங்க இருந்து மறுபடியும் இன்னொரு வண்டி வர்ற வரைக்கும் நாம அங்கேயே நம்ம பொறுமையோட அளவ பரிசோதிச்சுட்டு இருக்கணும்.
அடிக்கடி பாதி தூரத்துல , ஒரு காட்டுல போய் வண்டி பளுதடைஞ்சு நின்னுடும். அதுக்கு அப்புறம் இவனுங்க 4 5 மணி நேரம் கழிச்சு போன் பண்ணி, மறுபடியும் எங்க புறப்பட்டமோ அங்க இருந்து மறுபடியும் இன்னொரு வண்டி வர்ற வரைக்கும் நாம அங்கேயே நம்ம பொறுமையோட அளவ பரிசோதிச்சுட்டு இருக்கணும்.
ஒரு டிக்கெட் புக் பண்ண போனாலோ , அல்லது புக் பண்ணிட்டு போர்டிங் டைம் ல பஸ் காக போனாலோ .. இந்த ஆபீஸ்ல கிடைக்குற மரியாதையும் சூப்பரா இருக்கும்.. ( பெண் வர்க்கத்த விட ஆண் வர்க்கத்துக்கு நல்ல மரியாதை எப்பவுமே கிடைக்கும் : ) ) என்னமோ இவன் கிட்ட நாம கடன் வாங்கின மாதிரி முகத்த பார்க்காம அப்படியே அவனுக்கு என்னனே தெரியாத computer பார்த்து நம்ம கிட்ட பேசிட்டு இருப்பன். பஸ் பாதி வழில நின்னாலும் இதேதான் நமக்கு.
சில நாட்களுக்கு முன்பு கூட சென்னைல இருந்து சேலம் போறதுக்கு ஒரு பஸ் கூட கிடைகல , அப்ப இந்த பஸ் பணியாளர் ஒருத்தன் சொல்றான் .. சார் எங்க பெங்களூர் பஸ் FREEYA இருக்கு, அதுல ஏறி பெங்களூர் வரைக்கும் டிக்கெட் எடுத்துட்டு ,ஓசூர்ல இறங்கிக்கோங்க , இல்லனா நாங்க உங்கள கிருஷ்னகிரில இறக்கி விடுறோம். அங்க இருந்து ஒரு மணி நேரத்துல சேலம் போய்டலாம்னு.
தெரியாதவங்க , அந்த ரூட்ல போகாதவங்களா இருந்தா இவன் சொன்னதுக்கு அந்த நேரத்துக்கு வேற வழி இல்லாம உண்மை தெரியாம எரிடுவாங்க.. அந்த நல்ல மனசுகாரன் கூட ஒரு தடவ கிருஷ்ணகிரில இருந்து சேலம்கு ஒரு மணி நேரத்துல போய் பார்கணும் .. ஒரு வேலை KPN ல விமான வசதி கூட இருக்குதோ என்னவோ ? அந்த ஆள் அவனோட அண்ணன்,தம்பி சொந்தக்காரன் கேட்ட கூட இப்படி தன பஸ் ஏத்தி விட்டு ஒரு மணி நேரத்துல போக வைப்பான் போல...
பொடி நடையா நடந்து கூட போய்டலாம்.. ஆனா இந்த டிராவல்ஸ்ல போகவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்...
மோசமான TRAVELS KPN . இதுல பயணம் செஞ்சு இந்த மாதிரி ஆட்கள சம்பாதிக்க வைக்காதீங்கப்பா...
மோசமான TRAVELS KPN . இதுல பயணம் செஞ்சு இந்த மாதிரி ஆட்கள சம்பாதிக்க வைக்காதீங்கப்பா...
14 கருத்துகள்:
நல்லது நடக்கட்டும்
நமக்கு எப்பவுமே தந்தை பெரியாரோ இல்லை அண்ணா பஸ் தானுங்க...
எவ்வளவு கூட்டமா இருந்தாலும் டப்பா அரசு பஸ்ல கம்மி காசுல பயணம் செய்யுற சுகம் வேற எதுலையும் வராது.
ஆமா சேலத்துல எங்க இருக்கீங்க...என் ஊரும் சேலம் தான்.
I think those days of KPN are gone...Now travels like Dhanunjaya, Kesineni, Redbus, HKB are really doing well...Perfect timings, customer comfort and affordable cost.
In every business ppl are preferring for gud service and cost comes next.. We tamil people are very poor in that unfortunately...
- Nadu Nisi Naai
உண்மை - ஓசூர் பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருக்கும் ஆஃபீஸில் உள்ளவங்களுக்கு கஸ்டமர்னா கிள்ளுக்கீரை - வாய்க்கு வந்த படி பேசறதும் 2 மணி நேரம் முன்னாடியே போயி மாடில உக்காந்து இருந்தாலும் - பஸ் வரப்போ - மைக்ல சொல்லுவோம் - போயி ஏறிக்கங்கன்னு சொல்லிட்டு - பஸ் வந்ததும் சைலண்டா ஆளில்லன்னு அனுப்பறதும் சர்வ சாதாரணம். என்ன பண்றது ....
இவர்கள் fancy number எங்கிற பெயரில் 9990, 9909, 9099, 0999 என்று வருமாறு registration செய்து, ஒரே எண்ணில் பல பேரூந்துகள் ஓட்டும் புண்ணியாவான்கள்
@அனந்தன் - நன்றி.
@டக்கால்டி - எவ்ளோ வயசு வரையும்ங்க அப்படி பயணம் செய்யா முடியும்? தாவிய.. குடும்பத்தோட போகுறது ரொம்ப கஷ்டம்.. நான் சேலம் இல்லைங்க.. சேலம் ல இருந்து இன்னும் 30 - 40 நிமிஷம் travel இருக்கு.. எந்த ஒர்ருனு கணிப்பு செய்யுங்களேன் :)
@நாடு நிசி நாய் - ரொம்ப நாள் காணும்? அந்த படத்த பார்தீங்களா?
@சீனா - அங்க மட்டும் இல்லைங்க எல்லா இடத்துலயும் அப்படிதான்.. போம்மனஹல்லி, பெங்களூர்ல அத விட மோசம்.. இவனுகளுக்கு எப்படி பாடம் புகட்ட முடியும்?
@சுந்தர் - நல்லா செய்தி ஒண்ணு சொனீங்க... உண்மை தான்.. இதருக்கு என்னதான் முடிவு?
அடப்பாவிகளா, நெலம இம்புட்டு மோசமாயிடுச்சா......?
@ raamasaay - romba naala KPN LA pogala pola?
அண்ணன் கூறியதை கண்ணாபின்னாவென்று வலி மொழிகிறேன். எனக்கு ஒரு முறை மதுரையில் இருந்து ௨+௨ சீட்டு உள்ள பச்சுன்னு சொல்லி ரிசர்வ் பண்ணேன் ஆனா வந்தது ஒரு பழைய காயலான் கடை பஸ்சு. மக்களே கே.பி. என் பஸ்ஸில் செல்வதை தவிருங்கள். நான் இப்போ எ.பி.டி -யில் மட்டுமே செல்கிறேன். இல்லையெனில் அரசு பஸ்.
Dr.K.P.Natarajan அவரு தானுங்க KPN.. முன்பொருமுறை ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொன்னது நினைவுக்கு வருதுங்க.. அவரு சொன்னது..
“பேருந்து போகும் போது ஒரு டம்ளர் தண்ணீர் வைத்தால் போய்ச்சேரும்வரை சிந்த கூடாது.. அப்படி ஓட்டறவன் தான் சரியான டிரைவர்.. எங்க டிரைவர் எல்லாம் அப்படி தான்..”
ஒரு வேளை தண்ணி மேலயே கண்ணா ஓட்டுவாங்களோ?? தான் கட்டைவண்டி மாதிரி ஓட்டறாங்களோ??
KPN மட்டுமில்லைங்க.. எல்லா தனியார் பேருந்துகளுமே இப்படி தான்.. இவனுங்கள கேட்க ஆளே இல்லை போல.. அமெரிக்காவில் 911 இருப்பது போல இங்கயும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?? இவனுங்க கொட்டமெல்லாம் அடங்கிடாது?? அப்படின்னு நினைக்கும் போதே.. அப்படி ஒன்னு இருந்தா அந்த இடத்துல இருக்கறவன் இவனுங்ககிட்ட விலை போயிடுவானுங்க.. வீரப்பா சொன்னது தான் சரி.. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..
நையாண்டி நைனா -நன்றி. சரி ....KPN கு .. ABT பரவால ...
Ŝ₤Ω..™ - இவனுங்க டம்ளர் ல தண்ணி வர வைக்குறானுன்களோ இல்லையோ நம்ம கண்ணுல தண்ணிய வர வச்சுடுவானுங்க.. ரசிக்க கூடிய கமெண்ட் :)
Was busy with work and also I didnt find any interesting item in your blog :) But the last 2 items are nice ones.
Movie: Nadu nisi naai - Theru naai
- NNN
@ NNN - Athu venumna nijam thaaan.. romba naala mokka pottathula nerya ber kaaanama poitaanga :)
கருத்துரையிடுக