புதன், 20 ஏப்ரல், 2011

மூன்று முட்டாள்கள் (3 IDIOTS)

இந்த மூன்று  ஆட்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும்.. ஆனால் இந்த ஆட்களை நான் இன்னும் நேரில் பார்த்தது இல்லை..
1 . இருக்கும் எல்லா வார பத்திரிகைகளிலும் கேள்வி பதில் என்று ஒரு பகுதி இருக்கும்.. அதற்க்கு கேள்வி கேட்டு அனுப்புவர்களை  நினைத்தால் நிஜமாகவே எதற்க்காக இவர்கள் அனுப்புகிறார்கள்  என்று தோணும்.. இவர்களது கேள்விகளை தனக்கு தெரிந்த நண்பர்களிடமோ அல்லது நேரில இருக்கும் ஒருவரிடமோ  கேட்டு தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பா  விடை தெரிந்த  ஒரு ஆளாவது இருப்பார்கள். ஒரு இதழுக்கு கேள்வி அனுப்புபவர் கண்டிப்பாக தெரிந்து  கொள்வதில் ஆர்வமாக இருப்பார். இந்த ஆட்கள் கண்டிப்பாக இணையதளத்தை பயன் படுத்தும் ஆட்களாக  இருப்பார்கள்.எளிதாக தெரிந்து  கொள்ளலாம். ஆனால் எதற்காக ஒரு வார இதழுக்கு எழுதி அனுப்பி தெரிந்து கொள்ள ஆசை படுகிறார்கள் என்று புரியவில்லை. ஒரே நன்மை இதை படிக்கும் இதர வாசகர்களுக்கு இது பயன்படும். ஆனாலும் பத்திரிகைகளில் வரும் அணைத்து கேள்விகளும் உண்மையில் வாசகர்கள் தான் எழுதிகிறார்களா என்பது நிச்சயம் கேள்வி குறி தான் .. ( இதுல எந்த நடிகை கண்ணு அழகு, கடல் ல இந்த மூணு நடிகைகள் விழுந்த எந்த நடிகையா  FIRST நீங்க காப்பாத்துவீங்க? இந்த மாதிரி கேள்விகள் வேறு.. விளங்கிடும்டா  சாமி) 
2 . டிவில பாட்டு கேட்பவர்கள் - இத எதுக்கு யாருக்கு கேட்குறீங்க? கேள்வி பதிலாவது பரவால  ..ஆனா இப்ப யாரு என்ன நெனச்சாலும் எந்த பட்ட  வேணும்னாலும் கேட்க முடியும்.. ஆனா இன்னும் எதுக்கு டிவி க்கு போன் பண்ணி பாட்டு கேட்கனும்?  ஒரு பண்ணன்ண்டு பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்து பத்து வருஷமா  சன் டிவி ல இந்த நிகழ்ச்சி வந்தப்ப அப்போ அவ்ளோ ஆர்வமா  கேட்டாங்க.. ஓகே புதுசு.. அப்புறமா சலிச்சு துவைச்சு பத்து வருஷமா தொங்க போட்டாங்க.  ஆனா இப்பவும் யாருய்யா போன் பண்ணி கேட்குறாங்க.. இதுக்கு மணிக்கணுக்குல லைன்ல இருந்து அதுக்கு காசு செலவழிச்சு எப்படித்தான் போன் பண்ணுறாங்களோ ?3.ரசிகர் மன்றம் - இதை எல்லாம் எப்படித்தான் யோசிச்சு கண்டுபிடிச்சாங்களோ? அந்த காலத்துல நல்லது செய்ய  ஒண்ணா சேருறதுக்கு, அல்லது ஒரு காரியத்த ஒண்ணா சேர்ந்து செய்யுறதுக்கு ஒரு அமைப்பு தேவை பட்டுச்சு..அப்படி ஒரு வழில யோசிச்சு இந்த மாதிரி வந்துடுச்சு.. ஆனா ஒரு நடிகர வச்சு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கணும்னு எப்படித்தான் கண்டு பிடிச்சாங்களோ ? இதுவரைக்கும் காந்தி, போஸ், பகத் சிங்  இவங்க பேர்ல  ஒரு ரசிகர் மன்றத்த  கூட பார்த்தது இல்ல...ஆனா நல்லது செய்யறதுக்கு நடிகர்கள் பேர்ல ஒரு அமைப்பு ஏற்படுத்தி நல்லது  செய்யனும்னு எந்த அறிவாளிக்கு தோனுச்சுன்னு தெரியல. இதுல இருக்குற ஆட்களுக்கு  அப்படி என்னதான் இந்த மன்றத்துல இவங்க வேலை , என்னதான் இவங்க செய்வாங்கன்னு  தெரியல. இதுல இருக்குறவங்க என்ன வேலை பார்ப்பாங்க.,எந்த மாதிரி வேலைல இருப்பாங்க? ஆனா அந்த குறிப்பிட்ட நடிகர் படம் வர்றப்ப பேனர் மட்டும் கணக்கில்லாம இருக்கும். இதுல அந்த படத்துல அந்த நடிகர் வர்ற அதே கெட்- அப்  ல வேற இவங்க படம் எடுத்து போட்டு வச்சு இருப்பாங்க.. இவங்க வீட்ல இருக்குறவங்க இத பார்க்குறப்ப  பெருமையாவா இத பார்த்துட போறாங்க?நல்லது செய்யனும்னு நெனச்சா  அத இந்த மாதிரி ஒரு நடிகர் பேரை  வச்சு தான் செய்யனுமா? அப்படியே சில பேர் செஞ்சாலும்.. அத என்னமோ நடிகரே  செஞ்ச மாதிரி  அவரு நான் மக்கள் தலைவன்னு  சொல்ல ஆரம்பிசுடுராறு ... இது எல்லாம் தேவையா?  செய்யுறத.. உண்மையிலேயே நல்லது செஞ்ச ஒருத்தர் பேர்ல செஞ்சா ..
இந்த மாதிரி ரசிகர் மன்ற , நடிகர் பேனர் பார்த்து  நம்ம கண்ணு கெட்டு போகாம இருக்கும்.. இல்லனா இந்த மாதிரி போஸ்டர் பார்த்து கண்ணு அவிஞ்சு போய்டும்
 
(முதல் ஆள் மட்டும் முட்டாள் என்று சொல்ல முடியாது... 
நல்ல கேள்விகளை கேட்பவரை பார்த்து ஒரு விதமான ஆச்சர்யம் அவ்ளோதான்.. - கேட்கப்படும் கேள்விகளை பொருத்தும் இருக்கிறது )

9 கருத்துகள்:

Nadu Nisi Naai சொன்னது…

There is one more idiot who post the answers in post card for the questions being asked in TV programs...

Guna சொன்னது…

oh yes... thats true..

Romba naala Kaanum?

Nadu Nisi Naai சொன்னது…

Went to bangalore (shivaji nagar) for some work ...

Guna சொன்னது…

Ada neenga blr vaasi thaana... Naanum blr la than iruken

இராஜராஜேஸ்வரி சொன்னது…

படமும் கருத்தும் அருமை.

நாவலந்தீவு சொன்னது…

அருமை நண்பா...

Guna சொன்னது…

NANDRI RAJESHWARI, MUTHURAASU

Harinniy சொன்னது…

superrrrrrbbbbbb!!!!!really indha moonu categories combine panni,the way u brought it together and synced it....kudos!!!!

Guna சொன்னது…

@ harini- nandri