புதன், 18 மே, 2011

அதிமுக - 7 கையெழுத்து ... இனி? ..




ஜெயலலிதா  7  திட்டங்களுக்கு கையெழுத்து இட்டார். வாக்குறுதிகளை   18  மாதத்தில்  நிறைவேற்ற  தனி அமைப்பு ஏற்படுத்தினார்.






1 . தனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு என்பதை புரிந்து கொண்டு இருக்கிறாரா? மக்கள் விழிப்புணர்வு அதிகமாக என்பதை புரிந்து இனி ஏதாவது செய்யா விட்டால் .. இனி ஒரு முறை கண்டிப்பாக  முதல்வர் ஆக முடியாது என்பதை  உணர்ந்து விட்டாரா?. உண்மையில் நல்லது செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டாரா ?

2 .  அல்லது தேர்தலுக்கு முன்பு எழுதியதை போல (திமுக அதிமுக தேர்தலில் வெற்றி பெற நினைப்பது எதற்கு? - அதிமுக - திமுக ஆட்களை ஜெயிலில் போட
திமுக - அதிமுக விடம் இருந்து தப்பித்து ஜெயிலில் போகாமல் இருக்க)  அதிமுக .. திமுக வை உடனே பழி வாங்கும் நடவடிகையை ஆரம்பித்தால் .. மக்களும், பத்திரிகைகளும் விமர்சனம் செய்யவார்கள் என்று .. முதலில் சில நல திட்டங்களை செயல்படுத்தி , பிறகு காரியத்தை முடிக்கலாம் என்று நினைக்கிறதோ? ( தேர்தலுக்கு பிறகு திமுக வ அவங்க சொந்த தொலைக்காட்சி, செய்தித்தாள் ல கூட பர்ர்க்க கூட முடியல .. கருணாநிதி புகைபடத்த போட்டு தினமும் வர்ற அறிக்கைய கூட பார்த்த நியாபகம் இல்ல.. பயமா? சோகமா? ... இல்ல கணிமொழிய காப்பாத்த காங்கிரஸ் கூட மர்ம பேச்சுவார்த்தையா? )


இதில் இரண்டில் இதுவாக இருந்தாலும்.. வழக்கம் போல் ஆட்சிக்கு வந்தும் சில திட்டங்களை நிறைவேற்றி விட்டு பிறகு ஐந்தாவது ஆண்டில் அவசர அவசரமாக சில திட்டங்களை நிறைவேற்றுவது போல் இல்லாமல் .. உண்மையாகவே திட்டங்கள் நிறைவேற்றபட்டால் தமிழ்நாட்டுக்கு நல்லது.

புது கட்டிடத்திற்கு போனாலும்  , பழைய கோட்டைக்கு போனாலும் பழி வாங்கினாலும் , வாங்காம இருந்தாலும் சரி .. நம்ம மக்களை காவு வாங்காம இருந்த சரி. ஆனா இந்த தடவ தப்பு கணக்கு போட்டு ஏமாத்தினா இனி  திராவிட கழகங்கள் அடுத்த தேர்தல்ல இருந்து இருக்காது



5 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

Nice Post...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

"பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."

http://blogintamil.blogspot.com/2011/05/vs.html

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

"பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."

http://blogintamil.blogspot.com/2011/05/vs.html

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நம்ம மக்களை காவு வாங்காம இருந்த சரி//
அருமையான வேண்டுகோள்.

Guna சொன்னது…

SOUNDAR & இராஜராஜேஸ்வரி - நன்றி