செவ்வாய், 5 ஏப்ரல், 2011

இந்த உலககோப்பைய வாங்கி/கிடைச்சு இருக்கவே கூடாது

இந்த மாசம் ரெண்டாம் தேதி வரைக்கும் இந்தியா உலககோப்பை வாங்கனும்னு வேண்டிகிட்டே  இருந்தேன்.. அடுத்த நாள் கூட ரொம்ப சந்தோசாமாதான் இருந்துச்சு ... ஆனா போக போக அந்த சந்தோசம் எரிச்சலா மாறி .. நேத்து எல்லாம் உச்ச கட்டத்த தொட்டுடுச்சு..

இந்திய அணியினர் வின் பண்ணினது ரொம்ப சந்தோசம்.. அதுக்கு பரிசா அவங்களுக்கு கிடைச்ச 13 கோடி பணமும் அவர்களுக்கான வெகுமதி ..

ஆனா நேரம் போக போக அவனுக்கு ஒரு கோடி இவனுக்கு ரெண்டு கோடி.. கார் , வீடு, வீடு மனை, இலவசம்னு கடுப்பேத்தி   அரசு. இவங்களுக்குன்னு சம்பளம் தர்றாங்க.. அது போக பிசிசிஐ எல்லாருக்கும் ஒரு கோடி தறாங்க.. இது வரைக்கும் கூட பொறுத்துக்கலாம்.

இவங்க வின் பண்ணினது நமக்கு பெருமை சேர்க்க .. இது ஓகே, ஆனா இது அவங்களோட கடமை அது தான் ..  அதுக்குதான் அவங்களுக்கு சம்பளம்.. அதுவும் நம்ம வரி பணத்துல இருந்து போகுது .. இதுக்கு மேலயும்  எதுக்கு  இவங்களுக்கு பணம்?  இது வரைக்கும் ஐம்பது  கோடி மொத்தமா போய் இருக்கு..

இந்த உலககோப்பைய நாட்டுக்கு சமர்பிக்கிறோம்னு சொன்ன ஆட்கள் ,  இந்த அதிகபடியான பணத்த முழுசா இல்ல குறைந்த  சதவீதம் கூட இல்லாதவங்களுக்கு கொடுக்க மனசு வராது . விளம்பரம்  மூலியமா கோடி  கோடியா சம்ம்பாதிக்குறாங்க.. IPL  னு கோடி ல புரளுறாங்க .. இதுக்கு மேலயும்  எதுக்காக இவ்ளோ பணம்..

 அது சரி ... வாங்குறவன விட கொடுத்த அரசு ஒரு பைத்தியகார முட்டாள் அரசு.
இதுல வாழ் நாள்  முழுசும் ரயிலில் போக இலவசம்.. இவங்க என்னமோ ரயில்ல போற்ற மாதிரி ... இதுல தமிழகத்துல  இருந்து வேற 3 கோடி தர்றாங்க.. இந்த 50 கோடிக்கு இல்லாத மனுஷனுங்களுக்கு எவ்ளோவோ பண்ணி இருக்கலாம்.. இருக்குற இந்த ஆட்கள்ளுக்கு  கொடுத்த பைத்தியகார அரச  .. எவ்ளோ கொடுத்தாலும் பணத்துக்கு அலையுற இந்த ஆட்கள பாத்தா பத்திகிட்டு வருது...

இப்பவும் அந்த விளையாட்ட பிடிக்காம  போகல .. ஆனா அதுக்கான முக்கியத்துவமும்.. கொடுக்குற பணமும் வயிற எரிய வைக்குது ... டாக்டர் பட்டம் , பேருல மைதானம் வேற

இந்த உலகத்துள்ள இருக்குற சுமார் 250 நாடுகளல்ல கிரிக்கெட் விளையாடுற நாடுகள் அதிகபட்சம் 20 -25  தான் இருக்கும் .. இதுக்கு பேர் உலக கோப்பை வேற..

போதும் இதுக்கு மேல பேசின ரொம்ப பொங்கிடும்..  என்ன பேசினாலும் நாளைக்கு நானும் .. ஒரே டீம் ல நாட்டுக்காக அடுறேன்னு சொன்ன ஆட்கள்.. இப்ப ஒருத்தர ஒருத்தர் திட்டிகிட்டு காசுக்காக ஆடுற அந்த IPL  பார்க்க டிவி முன்னாடி  எல்லாரும் உட்க்கர்ந்துட்டு தான் இருக்க போறோம்.

2 கருத்துகள்:

Guna சொன்னது…

ஆங் .. அப்புறம் டாக்டர் பட்டம் வேற கொடுக்குறாங்களாம் ... அப்படியே ஒரு கலெக்டர் , வக்கீல் , பட்டமும் கொடுத்துடுங்க

டக்கால்டி சொன்னது…

நல்லா சொன்னீங்க கேடிக்களை அடச்சே கோடிக்களை பத்தி...