திங்கள், 11 ஏப்ரல், 2011

ப்ளாக் எழுதாதீங்க, அரசியல் பேசாதீங்க

எல்லா ப்ளாக்லயும் தேர்தல் , பரபரப்பு, அது இதுன்னு எழுதி தள்ளியாச்சு.. ஆனா இத எழுதியவங்க எல்லாரும் ஓட்டு போட்டா உத்தமம்.

எதுனாவது ஊழல் , வன்முறைன்னு டிவில பார்த்து அடுத்த அஞ்சு நிமிஷத்துக்கு  கோப படுறதும், அடுத்த நாள் ஆபீஸ்ல  போய் ஒரு அரை மணி நேரம் அத பத்தி பேசுறதோட நம்ம கோபம் முடிஞ்சுடும்.

படிச்சவன், வேலைக்கு போறவனோட கோபம் , அரசியல் இவ்ளோதான்.. அடுத்தவன குறை மட்டும் சொல்லிட்டு நம்ம அரசியல் பணிய அப்படியே முடிச்சுடுவோம்.


படிச்ச மக்கள் ஓட்டு சதவீதம் மிக மிக குறைவு. அவ்ளோவா தெரியாத  மக்களும், காசுக்கு ஓட்டு  போடும் ஆடகளோட ஓட்டும்தான்   இப்ப அரசியல நிர்ணயிக்கும். 


பசங்க கூட பரவால , பொண்ணுகளோட ஓட்டு அதுவும்  படிச்ச பொண்ணுங்களோட ஓட்டு எத்தன விழுகுதுன்னு யாருக்கும் தெரியாது.  கடைசில  இது கள்ள ஓட்டா மட்டும் கண்டிப்பா மாறிடும் .


கரண்ட் போறப்ப ups , பஸ் ல போகாம கார் ல போற ஆளுங்க, அரிசிக்கு பதில PIZZA  சாபிடுற  ஆளுங்க , இவங்க யாருக்கும் எந்த கட்சி அரசியலுக்கு வந்தாலும் பிரச்னை இல்ல.

கரண்ட் போறப்ப, பஸ் ல டிக்கெட் , பெட்ரோல் விலை  ஏறுரப்ப , ஊழல் பண்ணி, ரௌடிதனம் பண்ணுறத டிவில பார்த்து திட்டுற கோபத்த நாளைக்கு ஒரு நாள் செலவழிச்சு காமிக்க முயற்சி பண்ணுவோம் .

படம் பார்க்க, கேர்ள் FRIEND  கூட ,மேட்ச் பார்க்க நேரம் செலவிக்குற நாம, வேற ஸ்டேட் ல இருந்தாலும் லீவ் போட்டு பார்குற நாம.  இதுக்காக லீவ் ஒரு நாள் லீவ் ( லீவ் இல்லாதவங்க) போட்டா தப்பு இல்ல.


அத விட்டுட்டு ஓட்டு போடாம , அதுக்கு அப்புறம் அரசியல் சாக்கடை , அதுல அநியாயம் இதுல அநியாயம் , அப்படி இப்படி ன்னு பேசுறதோ,  ப்ளாக் போடுறதோ , அரட்டை அடிகுறதோ, திட்டுறதோ வச்சுக்கிட்டா...

நாம யார திட்டுறமோ அத விட கேவலமான ஆட்கள் நாம். அப்படி பாட்ட ஆட்கள் தயவு செஞ்சு ப்ளாக் எழுதாதீங்க, அரசியல் பேசாதீங்க.

நான் இப்ப ஓட்டு போட ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன் ...

4 கருத்துகள்:

Nadu Nisi Naai சொன்னது…

Nalladhu...Nandru

- NNN

truth சொன்னது…

தயவு செய்து இந்த இடுகையை நன்றாகப் படிக்கவும்
http://socratesjr2007.blogspot.com/2011/04/4.html

வலிபோக்கன் சொன்னது…

அப்படியா சாமி மொதல்ல ஊருக்கு போயிட்டு வாங்க அப்புறம் பேசிக்கலாம்

Guna சொன்னது…

@ nadu nisi naai - nandri
@ Truth - Padikien kandippaga
@ valipokkan - Poyachu... vote pottachu vanthaachu .. neenga?


BUTTHIS TIME I REALLY SAW MANY PEOPLES INTRST IN THIS ELECTION,,, AND SAW MANY GIRLS IN THE ELECTION BOOTH.. GOOD TO SEE