சனி, 23 ஜூலை, 2011

நேர்மையான நியூஸ் சேனலின் சேவை

கடந்த ஐந்து ஆண்டுகளில் சேனல்களில் நிறைய மாற்றம். அதில் முக்கயமான ஒன்று நியூஸ் சேனல்கள்.  இதை பார்த்து பார்த்து தற்போதைய சூழ்நிலையில் எது நியூஸ் எது பொழுதுபோக்கு என்று குழப்பமே வந்து விடுகிறது.

நியூஸ் சேனல்கள் நியூஸ் தருவதை விட தற்போது வக்கிரத்தை நியூஸ் ஆக்கி அதை  காண்பிப்பதையே தொழிலாக வைத்து நடத்தி கொண்டிருகின்றன.

NDTV 24/7, NDTV INDIA,AAJ TAK,ZEE NEWS,CNBC ,INDIA TV,NEWS 24,IBN7,TIMES NOW,HEADLINES TODAY,CNN,CNN-IBN,NEWS X, என்று வடக்கிந்தியாவில் பதினைந்திற்கும் மேலான சேனல்கள்.. இது தவிர வர்த்தகம் என்று இன்னும் பல நியூஸ் சேனல்கள்.

 இதில் பெரும்பாலான சேனல்கள்.. முக்கயமாக HEADLINES TODAY, CNN,CNN-IBN, AAJ TAK, TIMES NOW போன்றவை சொல்லும் செய்திகள் மிகவும் அற்புதமானவை.

நாட்டில் நடக்கும் மிக முக்கியமான வரலாற்று சம்பவங்கள் அதாவது தீபிக படுகோனே கு சித்தார்த் கொடுத்த முத்தம், யுவராஜ் தீபிகா ஒன்றாக சாப்பிடுகிறார்கள், சைப் அலி கான் கரீனா பிரிகிறார்கள், சல்மான் காதிரீனா ஓட்டலில் சாபிடுகிறார்கள் என்று எங்கு இருந்து வீடியோ எடுப்பார்கள் என்றே தெரியாத  அளவிற்கு எடுத்து மிக அற்புதமாக இந்த நாடு நடப்பை எடுத்து சொல்லுவார்கள்.

சரி இதுதான் பார்வையாளர்களை இழுக்கிறது என்றால்.. தற்போது அதற்க்கு அடுத்த படியாக.. யாரவது செத்தால் , கொலை செய்தால், ஆற்றில் அடித்து சென்றால் அதை வீடியோ எடுத்து மிக அழக்கான வக்கிரமாக காண்பித்து தனது சேவையை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறார்கள்.

உங்களால் மட்டும்தான் பொழுது போக்க முடியுமா என்று SONY,STAR,ZEE,SET போன்ற சானல்களுக்கு சவால் விட்டு செய்தி தரும் அலைவரிசை என்ற கண்ணோட்டத்தை மாற்றி எந்த மாதிரி செய்திகள்  பணம் ஆக்கும் என்று கண்டுபிடித்து புரட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.


சினிமா, கிரிக்கெட் இது இரண்டு மட்டுமே இப்போது நியூஸ். இதை தவிர வேற எதாவது கொலை வீடியோ, அடிதடி வீடியோ , சாவு வீடியோ என்று எதாவது ஒன்றை பிடித்தி அதை நூறு முறை காண்பிப்பது.  இந்த தாரக மந்திரத்தை வைத்து நியூஸ் சேனல்கள் , பொழுது போக்கு சேனல்களாக மாற்றி சேவை செய்து வருகின்றன.

தமிழ் செய்து சேனல்களை சொல்வே வேண்டாம்..  தமிழகத்தில் குற்றம்\ மட்டுமே நடக்கிறது என்று திமுக ஆட்சியின் போது ஜெயா செய்திகளில் அது மட்டுமே வந்து கொண்டிருக்கும் , சன் மற்றும் கலைஞர் டிவியில் ஒன்றுமே அப்போது இருக்காது  , அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருகின்றபோது குற்றமும்,பஞ்சமும் இருக்கிறது என்று கலைஞர் ,சன் டிவியில் வரும் ஜெயாவில் அது வரவே வராது.  

தனது விளம்பரத்திற்கு நித்தியானந்த ரஞ்சிதா வீடியோ வை நூறு முறை காண்பித்து தனது திறமையை நிருபீத்தது.

DD , பொதிகை   நியூஸ்  பார்த்து வெகு நாள் ஆகிவிட்டது .. அவைகள் என்ன செய்து கொண்டிருகின்றன என்று தெரியவில்லை..

சமீபத்தில்  பார்த்த சில சாவு, கதறல் காட்சிகளும் , கட்டிபிடி காட்சிகளும் பார்த்தால் எழுதப்பட்டது இது.

கிரிக்கெட் ,கொலை, சினிமா எது வேண்டுமானாலும் காமிக்கட்டும் .. ஆனால் எதற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .. எந்த செய்தியை அதிக நேரம் காமிக்கவேண்டும் , எதை பட்டும் படாமலும் சொல்ல வேண்டும் என்று இந்த செய்தி மேதாவிகளுக்கு தெரிந்தால் தேவலை.

இதை பார்த்து கொண்டு இருபதற்கு discovery,National Geography
  , animal planet  என்று விலங்குகளின் நியூஸ் பார்த்து கொண்டிருக்கலாம் . அதிலாவது நடுநிலையான நேர்மையான தகவல்கள் கிடைக்கும்.

7 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்று எல்லாமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கிலே வந்துவிட்டார்கள்...

Antony A Selvan சொன்னது…

இதை விட கொடுமை என்னவென்றால் “emotional atyachar” bindass tv இரு ஒரினச்சேர்க்கயாளர் காதலர்கள் ஒருவருக்கு மற்றொருவர் மீது சந்தேகம். சந்தேகப்பட்டவர் தொலைக்காட்சியின் உதவியை நாடி மற்றவரை சோதித்து பார்ப்பார் - யாரை வேண்டுமானலும் சோதிக்கலாம் கணவன் மனைவியை காதலன் காதலியை Etc… எல்லாம் பணம், பணம், பணம்...........

Unknown சொன்னது…

தகவல் தந்தமைக்கு நன்றி நண்பா

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இதை பார்த்து கொண்டு இருபதற்கு discovery,National Geography
, animal planet என்று விலங்குகளின் நியூஸ் பார்த்து கொண்டிருக்கலாம் . அதிலாவது நடுநிலையான நேர்மையான தகவல்கள் கிடைக்கும்//

சரியான கருத்துப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

சமுத்ரா சொன்னது…

இன்று எல்லாமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கிலே வந்துவிட்டார்கள்...

Karthikeyan Rajendran சொன்னது…

சபாஷ், சாட்டையடி பதிவு சார்! இந்த மாதிரி கேட்க ஆளில்லாமத்தன் ஆட்டம் போடுறாங்க

Harinniy சொன்னது…

you are hundred percent r8t!!!the news channels have forgotten their morals..they do anything and everything to boost their ratings...last week i tuned onto a news channel to find them telecasting iifa awards...the scenario has totally changed in this decade!!!responsible journalists like barkha dutt misuse their positions...sorrow state of affairs!!!shabba!!!