திங்கள், 1 ஆகஸ்ட், 2011

கடிகார கடவுள்?!?!?

கடவுள் இருக்கிறார் , கடவுள் இல்லை, கடவுள் உனக்குள்தான் இருக்கிறார் என்ற கதைகளை விட்டு ... ஆன்மிகம் நாத்திகம் இது எல்லாத்தையும் மறந்துட்டு.....
சாதாரண ஆட்களின் பக்தியை யோசித்தால் ...


கடவுள்தான் சக்தி  வாய்ந்தவர் என்று ஆன்மீகவாதிகளும் .. கடவுள் நம்பிக்கை கொண்ட பொது மக்களும் சொல்லுகிறார்கள்.

ஆனால்...! நீண்ட நாள் கஷ்டத்தில் இருந்து பிறகு நல்லது நடக்க ஆரம்பித்தால், அது அதுக்கு நேரம் வரணும்.. நேரம் வந்த எல்லாம்.. தானா  நடக்கும் என்று சொல்கிறார்கள். .. வீடு கட்டும்போதும் சரி கல்யாணம் நடக்குபோதும் சரி நேரம் கூடி வந்தால் எல்லாம் தன்னால் நடக்கும் என்றுதான் சொல்கிறார்கள். யாரும் புராணபடத்தில் வருவது போல எல்லாம் அவன் செயல் , கடவுள் கிருபை என்று சொல்லுவதில்லை.

இத்தனைக்கும் கடவுளுக்கு பூஜையை செய்யும் நேரத்தையே காலத்தை வைத்து தான் நிர்ணயிகிறார்கள்.

அப்போது காலத்துக்குத்தான் கடவுளை விட சக்தி அதிகமோ?

ஆனால் அப்படி வந்தாலும்.....
 காலத்துக்கு ஜோசியம் என்று மற்றொரு நம்பிகையை வைத்து.. ஜோசியம் தான் விதியை நிர்ணயிக்கும்!!!! விதியை ஜோசிய பரிகாரங்களால் மாற்ற முடியும் என்றும் ஒரு இலக்கணம்   வைத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த ஜோசிய பரிகாரத்துக்கு  திரும்பவும் கடவுளுக்குதான் பரிகாரம் செய்ய சொல்கிறார்கள்!!!

இப்போது யோசித்தால் கடவுள் காலத்தை நிர்ணயம் செய்கிறாரா? அல்லது கடவுளும்  காலத்தை நிர்ணயம் செய்ய முடியாதா?

இதுல ஒரு சந்தேகமே வந்துடுது .. பெற மாத்தி வை , வீட்ட மாத்தி கட்டு, கற்களை போட்டுக்கோ , ஜாதகம் பாரு, கைய பாரு, கிளி சொல்றத கேளு , கோல் சொல்ற வாக்க கேளு அப்படீன்னு சொல்றவன் எல்லாம் கடவுள் நம்பிக்கை வச்சு இருக்கனுங்களா? கண்டிப்பா இருக்கும். இந்த லாஜிக் புரியவே மாட்டேங்குது :(

நம்பிக்கை இல்லாதவங்களுக்கு இது புரியாதுன்னு நினைக்குறேன்.
3 கருத்துகள்:

! ஸ்பார்க் கார்த்தி @ சொன்னது…

இதற்க்கு பதில் சொல்ல எனக்கும் ஒரு காலம் வரும்.

Guna சொன்னது…

:)

கூழாங் கற்கள் சொன்னது…

உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.