புதன், 17 ஆகஸ்ட், 2011

ஒரு பயணத்தின எரிச்சல் காட்சிகள்


    அவசர  அவசரமா வேற ஊருக்கு போகணும்னு ஒரு லாங் டிராவல் ஒரு கவர்மென்ட் அல்லது பாசங்க்சர்  ட்ரெயின் ல போனா..நம்ம மனச குளிர வைக்குற முக்கியமான இந்த அஞ்சு ஆட்களை கண்டிப்பா பார்க்கலாம்.

 1. இருக்குற எல்லா டிக்கெட்  எடுக்கும் இடம் இடத்துலயும் ,  வரிசை ல நிக்காம நேரா முன்னாடி பொய் , நின்னுட்டு இருக்குற ஆட்களை முட்டாள் ஆட்குற புத்திசாலி.

2. நம்ம நாட்டுல  கண்டுபிடிச்ச ஒரு அதிசயம் . பஸ்ச யாரு கண்டுபிடிச்சான்னு தெரியாது ... ஆனா அதுல  உட்கார இடம் பிடிக்கணும்னு கண்டுபிடிச்சவன் நம்ம ஆளு தான். கைல  இருக்குறது எந்த பொருளா வேணுனாலும் இருக்காட்டும்.. அத ஜன்னல்ல குறிபார்த்து போட்டு இடம் பிடிக்குறதுல நம்ம .ஆளுங்க கில்லாடிங்க. (இது கீழ் மட்ட மக்கள்  கிட்ட இருந்து  இப்ப நடுத்தர மக்கள் வரைக்கும் வந்தாச்சு.  மாணவர்கள்  கூட இத follow  பண்ண  ஆரம்பிச்சு இப்ப எல்லாரும் பண்ணுற காரியம் இது)

3.பஸ்ல/  ட்ரெயின் ல உட்கார்ந்துட்டு  ஒரு சைனா  மொபைல் வாங்கிட்டு .. இருக்குற கேவலமான டப்பாங்குத்து பாட்டு எல்லாத்தையும்  லவுட்  ஸ்பீக்கர் ல கதற  விட்டு.. பக்கத்துல யாரு உட்கார்ந்துட்டு இருக்காங்க ? உடம்பு சரி இல்லாம இருக்காங்களா?  குழந்தை எதாவது அழுதுட்டு இருக்குதான்னு பார்க்காம ,   அந்த மொக்கை பாட்ட திரும்ப திரும்ப போட்டு  காத கிழிய வச்ச/தலைய வலிக்க வச்ச புண்ணியவான் .  ( ஒரு பெண் கூட இந்த காரியத்த செஞ்சாத பார்த்தது இல்ல .. எல்லாமே  15  - 30  வயது ஆண்கள் )


4. பஸ் ல இருந்து இறங்கி பஸ்  ஸ்டாண்ட்ல நின்னா.. அல்லது ரயில்வே  ஸ்டேஷன்ல இறங்கினா  அங்க இருக்குற காம்பவுண்ட் சுவர் , இருக்குற எல்ல சுவர்லையும் வெற்றிலை துப்பும் பெண் அழகிகள் ( இத அதிகமா செய்யுறது ஆண்களை   விட பெண்கள்  தான்) .


 5. எதாவது சாப்பிட , குடிக்க வாங்கலாம்னு இறங்கினா அங்க இருக்குற ஒரு ஆடியோ கடை இருக்குற அஞ்சு நிமிஷத்துல 15  பாட்டு போட்டு அலற விட்டுற்றுப்பன் .. அங்க போய் நின்னு  ஒரு பொருள வாங்கிட முடியாது..  ஒரு ருப்பை பொருள் பத்து ருபாய்னு வித்துட்டு இருப்பன். அதுவாது ஒழுங்கா இருக்குமா..  அதுவும் இல்ல பாதி பொருள் கவர் ஓபன்  பண்ணி வித்துட்டு இருப்பான்.

  இது தவிர இன்னும் தொந்தரவு குடுக்குற  ரெண்டு ஆட்கள் இருக்காங்க .. அவங்க ???? (ரெண்டு பேருமே காசு கேட்குறவங்க). 

4 கருத்துகள்:

Harinniy சொன்னது…

lol!!!!we do this too in our college buses to reserve seats for frnds!!!

! ஸ்பார்க் கார்த்தி @ சொன்னது…

எல்லோர் பயணத்திலும் நடக்கிற இதை சரியா சொல்லி இருக்கீங்க!!!!!

Guna சொன்னது…

@ karthick - thanks. unga blog la seriousa articl paarthu romba naal aachu.. waiting for that

Guna சொன்னது…

@ Harinniy - kashta kaalam. athu college bus la mattum pannunga :)..( i think govt bus la ungalukkaaga itha pasanga pannuvaanga!! :) )