புதன், 7 செப்டம்பர், 2011

நிஜமான அரசு கேபிள் எது? ( மக்களின் தற்போதைய அரசு கேபிள் நிலவரம்)

அதிமுக தனது தேர்தல்  வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறது. சென்ற வாரம் நிறைவேற்றி இருக்கும் தேர்தல் வாக்குறுதி "அரசு கேபிள்".

 தேர்தல் வாக்குறுதிகளில் உண்மையில் ஒரு நல்ல வாக்குறுதி, இந்த அரசு கேபிள் திட்டம் . தற்போது அது நிறைவேற்றி இருக்கிறது அதிமுக அரசு. வரவேற்க்கதக்கது. 

   ஆனால் உண்மையில் பல இடங்களில் இதற்க்கு அதிருப்தி. காரணம் இதன் தரம் மற்றும் சானல்களின் எண்ணிக்கை. உண்மையில் இதன் ஒளி தரம் குறைவாக உள்ளது. என்னதான் சன் டிவியின் விளம்பரங்கள் , அதன் DTH ,திரைப்படங்களின் விளம்பரங்கள், காப்பி அடித்து வழங்கும் நிகழ்சிகள் இருந்தாலும் இன்னும் கிராமபுரங்களில் சன் டிவி யை நம்பியே  பொழுது போக்குகிறார்கள். மற்ற நகர் புற ,படித்த ஆட்கள் விரும்பும் சானல் விஜய் டிவி. இந்த இரு நெட்வொர்க்களும் கட்டண சானல்களாக அறிவிக்க பட்டு இருக்கிறது. தமிழ் சானல்களுக்கு இந்த நிலைமை என்றால் ஸ்போர்ட்ஸ் சானல்கள் பற்றி சொல்ல தேவை இல்லை.

    ஒரு புதிய சானல் வரும்போது முன்னோட்டம் என்று மூன்று நான்கு மாதம் சோதனை செய்வார்கள். ஆனால் அணைத்து சானல்களையும் அரசு ஒளிபரப்ப எந்த அளவிற்கு இதை ஆய்வு செய்து பார்த்தார்கள் என்பது தெரியவில்லை.

 உண்மையில் பேருந்து, பேருந்து நிலையம், கடைவீதிகளில் தங்களது விருப்ப சானல்கள் வருவதில்லை என்று எரிச்சலாக மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது. இடைதேர்தல் வருவதால் அவசர அவசரமாக வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள் ..  ஆளும்கட்சி சானல்கள் மட்டும் வருகிறது என்ற வருத்தத்தையும் கேட்க முடிகிறது.
     உண்மையில் இந்த திட்டம் நல்ல திட்டமே.. அதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டண சானல்களை அரசு அறிவித்து இதன் தரம் உயர்ந்தால், தற்போது அறிவித்து இருக்கும் எழுபது ரூபாய் கட்டணம் மற்றும் கட்டனசானல்களையும் சேர்ந்து எடுக்கும்போது இது நூற்று ஐம்பது ரூபாயாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. என்றாலும் இதுவரை செலுத்தி கொண்டிருந்த கேபிள் கட்டணம் தனிப்பட்ட சிலருக்கு போவதும் , தனியாருக்கு போவதும் தடுக்கப்பட்டு அரசு கஜானாவுக்கு போவது நல்ல விஷயமே.

 இந்த திட்டத்திலும் சில கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் சில அரசு ஊழியர்கள் முறைகேடு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

 இதை அரசு யோசித்து நிதானமாக நிறைவேற்றி இருந்தால் .. தற்போது தனியார் DTH  SETUP  BOX  கொடுத்து RECHARGE  செய்யும் முறையை போலவே இதையும் நேரடியாக  ஒருஅரசு கட்டுபாடு அமைப்பிருக்கு RECHARGE  செய்யும் பணம் சென்று அடையுமாறு செய்து இருக்கலாம். அதாவது எப்படி மின்சார கட்டணம் செலுத்துகிறோமோ அப்படி. ( இலவச டிவி,கிரைண்டர் ,மிக்சி கொடுபவர்களுக்கு இதை (DTH) கொடுப்பதில் சிக்கல் இருக்காது).


 இப்படி திட்டத்தை  நிறைவேற்றுவதில் அரசுக்கு இருக்கும் சிக்கல்.. கேபிள் டிவி ஆபரேட்டர்கள். இவர்கள் ,இந்த தொழிலை நம்பி இருக்கும் ஆயிரகணக்கான குடும்பங்கள் பாதிக்கும் என்று போராட்டம் மற்றும் போர்க்கொடி தூக்குவார்கள். இதற்க்கு சில கட்சிகள் கூட துணை கொடுக்கலாம். (ஆனால் கோடிகணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என்று நினைத்தால் இவர்கள் போராட்டம் செய்ய மாட்டார்கள் மற்றும் இவர்களும் இதை மட்டுமே தொழிலாக செய்துவருபவர்கள் அல்ல...இவர்கள் அனைவருக்கும் மற்ற தொழில்களும் இருக்கின்றன என்பது உண்மை )

                  இப்படி போராடினால் , அரசு இவர்களுக்கு எப்பொழுதும்போல இயங்க அனுமதி அளிக்கலாம் . அவர்களது லோக்கல் சானல்களையும் ஒளிபரப்பலாம் . அவர்கள் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம். ஆனால் அரசு கேபிள் (dth ) தனது சொந்த கட்டணமான எழுபது ரூபாயையும் .மற்றும் கட்டண சானல்களுக்கு கட்டணத்தையும் வசூலிக்கலாம். இப்போது எந்த ஒரு கேபிள் டிவி ஆப்ரடர்களும் எதிர்குரல் இட முடியாது,ஏனன்றால் பல தனியார் dth வந்த பொழுது  இவர்கள் போராட்டம் எதுவும் நடத்த வில்லை. இவர்களும் எதுவும் பண்ண முடியாது மற்றும் எங்களது சானல்களுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று தனியார் dth சொல்லுவதாக இருந்தால்,அவர்களும் தங்களது dth களை ஒளிபரப்புவதால்.. மக்கள் அவர்களே எதை தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்துகொள்வார்கள் .

இதை முறையாக யோசித்து அரசு தெளிவாக நடைமுறைபடுத்தி இருக்கலாம். அல்லது தற்போதாவது முயற்சி செய்து பார்க்கலாம்.


      























கருத்துகள் இல்லை: