வியாழன், 18 ஆகஸ்ட், 2011

திருப்பூர் சாய பட்டறை பிரச்னை

பல நியூஸ் என்னனு ஆராய்ச்சி பண்ணலனாலும்,காது கொடுத்தாவது தெரிஞ்சுகுறோம் . குறைஞ்சபட்சம் என்ன நடக்குதுனாவது தெரிஞ்சுக்குறோம்.
இந்த நியூஸ் கூட சமீபத்தில் அடிக்கடி  மீடியால அடிபட்ட நியூஸ்தான்  ஆனால் பெரும்பான்மையான தமிழ்நாட்டு ஊர் மக்களுக்கு இது பத்தி அதிகமா தெரியாது .

திருப்பூர் சாய பட்டறை பிரச்னை பற்றி செய்தித்தாள்,தொலைகாட்சிகளில் கடந்த ஓராண்டு காலமாக அடிக்கடி பார்த்து கொண்டிருக்கிறோம்.

 கடந்த மாதம் தமிழக அரசு இதற்கென்று  200  கோடி ரூபாயும் , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சுமார் 20  கோடி ரூபாயும் வழங்குவதாக அறிவித்தது. இது இந்த சாயப்பட்டறை முதலாளிகளுக்கும் , சாயம் மற்றும் அதற்க்கு தேவையான ரசாயனங்கள் விற்பவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது . இன்னும் ஆறு மாத காலத்தில் மீண்டும் திருப்பூர் வழக்கம் போல் இயங்கும் என்று எதிர் பார்த்து காத்து கிடக்கிறார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தங்களது நிலத்தை மேம்படுத்த தமிழக விவசாய துறை ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கும் மற்றும் சொன்னபடி நஷ்ட ஈடு கொடுக்கபடும் என்பதும் எதிர்பார்ப்பு உள்ளது.

 ஆனால் பொதுமக்கள் பலருக்கும்,திருப்பூர்,கரூர்,ஈரோடு,சேலம்,கோயம்புத்தூர்,குமாரபாளையம்,பாவனி மக்கள் தவிர பெரும்பான்மையான தமிழக மக்களுக்கும் இந்த துறையை சேராதவர்களுக்கும் இந்த பிரச்னை என்ன? எதற்கு என்பது தெரியாது.

    திருப்பூரில் ரசாயனம் மூலம் துணிகளை பதனிடும் ( process ) செய்யும் ஆலைகள் சுமார் 800  - 1000 இருக்கின்றன. கரூர்,ஈரோடு,சேலம்,கோயம்புத்தூர்,குமாரபாளையம்,பாவனி இவைகளில் சேர்த்து சுமார்   300  ஆலைகள் உள்ளன. இதில் பயன்படுத்தப்படும் முக்கியமான  ரசயானங்கள் - DYES,H2O2,NACL,NAOH,RESIN,NAOCL,ACITIC ACID,ETHOXYLATES மற்றும் இதனை உள்ளடக்கிய மற்ற COMMERICAL பொருள்கள். இதனை பயன்படுத்துவதால் வெளியேறும் கழிவு நீர் ஒரு நாளைக்கு குறைந்த  பட்சம் ஒன்பது லட்சம் டன் நீர் வெளியேற வாய்ப்பு உள்ளது. இந்த நீர்  மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கலந்தாலோ அல்லது மறைமுகமாக மக்களை சென்றடைந்தாலோ  தோல், கண்,நுரையீரல்,சிறுநீரகம் உறுப்புகள் பாதிக்கப்படும். நிலத்தில்  கலந்தால் அந்த நிலத்தில் விவசாயம் என்பதை அடுத்த மூன்று ஆண்டுகளை மறந்து விட வேண்டும்.

   இந்த சாய,சலவை முதாளிகள் பண்ணுவது என்ன? வழக்கம் போல தமிழ்நாடு முதலாளிகளுக்கு லாபம் சம்பாத்திக்க வேண்டும். அடுத்தவர்களை கஷ்ட்டபடுத்தியாவது சம்பாதிக்க வேண்டும். ஒரு முதலாளி பத்து ரூபாய்க்கு ஒரு வேலையை செய்து கொடுக்கிறேன் என்றால் அடுத்த முதலாளி அதை ஏழு ரூபாய்க்கு செய்து கொடுக்கிறேன் என்று மார்க்கெட்டிங் செய்து தனது பிழைப்பை நடத்துவான். அந்த மூன்று ருபாய் அவனுக்கு நஷ்டமா ? இல்லை. தனது லாப சதவீதம் எந்த வீதத்திலும் குர்யாத விதத்தில் ஏழு ரூபாய்க்கு முடிப்பது எப்படி? 
1.தனது லாபத்தை குறைத்து கொள்வது .
2.தொழிலார்களை குறைப்பது 
3.மூலப் பொருட்களின் செலவை  குறைப்பது
4.வேலை செலவை குறைப்பது

 ஆனால் இதில் எதை குறைத்தாலும் அவன் நஷ்டப்பட வேண்டி இருக்கும் அல்லது தரம் குறையும் . அதனால் அவன் கை வைப்பது இந்த கழிவு நீரில்!!.

ஒவ்வொரு ஆலையும் அதிலிருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் இதற்க்கு  அவர்களுக்கு , ஒரு வேலையை முடிக்க ஏழு ருபாய் என்றால் அதில் ருபாய் இதற்க்கு செலவிட வேண்டும்,ஆனால் தனது லாப கணக்கிற்காக நூறில் 98  முதலாளிகள் அதை செய்வது இல்லை. தவிர சுத்திகரிப்பு செய்ய ஆகும் ETP PLANT ( EFFLUENT TREATMENT PLANT) தொடங்க/செயல்படுத்த ஆகும் செலவை செய்ய இவர்கள் விரும்புவதில்லை. 

  ஜீரணிக்கவே முடியாத விஷயம் இதை இவர்கள் ஆற்றிலும்,குளத்திலும் ,குட்டையிலும் ,வாய்காலிலும் கலந்து விடுவது. இதை வயிறு எரியும் விஷயம் கடைசியாக இவர்களின் லேட்டஸ்ட் தந்திரம் தண்ணீருக்காக "போர்" போட்டு இதுக்கும் குழாய்களில் இதை விட்டு நிலத்தில் சேர்ப்பது!!!. தண்ணீர் வராத "போர்" அல்லது இதற்காகவே போட பட்ட "போர்" என்று நிலத்தில் கலக்கும் கழிவு நீர் ஏராளம்.

இப்போது இங்க வீடு கட்ட, விவசாயம் செய்ய போர் போடும்போது அதில் இருந்து நல்ல நீருக்கு பதிலாக ,துர்நாற்றம் வீசும்  பழுப்பு,மஞ்சள் வண்ண நீர் வருவதை கண்கூடாக காண முடிகிறது. 

இந்த ஆறு,வாய்கால், குளம்,மற்றும் விவசாய நிலம் பயன்படுத்தும் மக்களின் சுகாதாரம் மெது மெதுவாக சீரழிந்து கொண்டிருக்கிறது/கொண்டிருந்தது.

  இதனை கவனித்த POLLUTION CONTROL BOARD இந்த ஆலைகளை கோர்ட் உதவியுடன் பூட்டிசீல் வைத்தது. பணம் சம்பாதிக்கும் முதலாளிகள் கடைசி வரை இதற்க்கு நான் செலவு பண்ண மாட்டேன் .. எங்களது பொழப்பில் மண்ணை போட்டு விட்டார்கள் , திருப்பூர் என்ற தொழில் நகரமே மூட பட்டு விட்டது , தொழிலை சார்ந்த ஆயிரகணக்கான குடும்பங்கள் வறுமையில் இருக்கிறது என்ற  தோணியில், அரசை நிர்பந்திக்க ஆரம்பித்தார்கள். தேர்தல் காலம் இவர்களுக்கு நன்கு கை கொடுத்தது. ஓட்டிற்காக போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் இந்த பிரச்சனயை ஆட்சிக்கு வந்ததும் நிவர்த்தி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தன .

இப்போது  புதிய ஆட்சி வந்ததும்  இவர்கள் கை அரித்து வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று தொடர்ந்து பந்த் செய்து , நான் செய்யும் கழிவை நீ அகற்று என்று சொல்லி , இருநூறு கோடிரூபாயை பிடுங்கியே விட்டார்கள்.

அப்பாடா நாம் இனி செலவு செய்ய தேவை இல்லை என்று பல்லைகாடிகொண்டு நிம்மதியாக இருக்கலாம் என்று உட்கார்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் ரசயானம் ,சாயம் விற்கும் கம்பனிகளும் அதன் சங்கங்களும் ஏனென்றால் அப்போதுதான் இவர்களது விஷத்தை இந்த ஆளை முதலாளிகளிடம் விட்டரு அவன் வயிரை கழுவ வேண்டும்.

      இப்போது அரசு இவர்களுக்கு கொடுக்கபோகும் இருநூறு கோடி ரூபாயும் பொது மக்களது வரி பணம. இருநூறு கோடிக்கு அமைத்து அது சரியாக வரமால் வீணாக போகவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அனைத்து ஆலைகளுக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி ஒரு இடத்திற்கு கழிவை கொண்டு வருவது மிகவும் கடினம், தவிர ஜீரோ  டிஸ்சார்ஜ் நடைமுறையில் சாத்தியம் அல்லாத ஒன்று , இதை நூறு சதவீதம் ஒரு ஆலை கூட செய்து காட்டியது இல்லை எனில் , அனைத்து ஆலைகளுக்கும் ஒரே இடத்தில் மொத்தமாக சுத்திகரிப்பு அரசு செய்வது என்பது இயலாத காரியம். அப்படி ஜீரோ டிஸ்சார்ஜ் செய்துவிட்டோம் என்று சொன்னால் அது கண்துடைப்பு செய்தி மட்டுமே. ஒரு முறை அமைத்து விட்டாலும் அதை சுத்திகரிப்பு செய்ய ஆகும் மாத செலவும் மக்களது வரி  பணத்தில்   இருந்து இயற்கையை கெடுக்கும் இந்த முதலாளிகள் லாபத்திற்காக செல்லும்.

ஒரு முக்கயமான விஷயம் அமெரிக்கா,ஜப்பான் ,இங்கிலாந்து,ஜெர்மனி,ரஷ்ய  போன்ற சுத்தமான நாடுகளில் இந்த மாதிரியான ஆலைகள் இல்லை. ஆனால் இந்த ஆலைகளுக்கு தரப்படும் அந்த ரசாயனங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு, இங்கு அனுப்பப்பட்டு உன் நாட்டை நீ அசுத்தபடுத்தி துணியை உற்பத்தி செய் என்று அனுப்பி வைத்து விடுகிறான்.

 அங்கு எவனும் இந்த மாதிரி நாட்டை அசுத்தபடுத்தும்  ஆலைகளுக்கு தொடங்க கூட அனுமதி தருவதில்லை. அதனால் இங்கு நம் நாட்டை அசுத்தபடுத்தபட்டு தயாரிக்கபடும் தரமான துணிகளை எக்ஸ்போர்ட் செய்து கொள்கிறார்கள்.

4 கருத்துகள்:

mohan சொன்னது…

super

mohan சொன்னது…

nothing

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தற்போதைய காலத்திற்க்கு தேவையான விஷயம்...


நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்...

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html