செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஊத்திக்குற காதல்.

 என்னதான் படித்தவர்களாக இருந்தாலும் ,  தாங்களாகவே  அறுத்து கொள்ளும் காதல்கள் இன்றைய டவுன் இளைஞர்/ஞி கள்  இவர்கள் ...


 1.தோழி என்று அவளிடம் பழகி , அவள் இல்லாத  சமயத்தில்   தன்  ஆண்  நண்பர்களிடம் அதே பெண்ணை பற்றி வக்கிரமாக  பேசும் ஆண்களும்  அதிகம் இருக்கிறார்கள் .
# ( இவர்களை நம்பும்  பெண்கள் இந்த மாதிரி ஆண்களை விட அதிகம் , இதே பெண்கள் தன்னிடம் பழகாமல் அமைதியாக  ஓரமாக உட்கார்ந்து இருக்கும் ஆண்களுக்கு வைக்கும் பெயர் "சொம்பு" )

2.இன்னும் எனது ஜாதி என்று பெருமையாக சொல்லும் படித்த இளைஞர்கள்
இருக்கிறார்கள், ஜாதியை பார்த்து காதலிக்கும் ஆண்களும் இருகிறார்கள்.
# (ஆனால் இதில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம்)

நிறத்தில் எனக்கு உடன்பாடு இல்லை... கருப்பான பெண்கள்தான் நன்றாக இருப்பார்கள் என்ற ஆண்கள் கூறுவது பொய். எந்த ஒரு நிகழ்ச்சி கணக்கெடுப்பிலும்  மாநிறமாக இருக்கும் பெண்கள்தான் நன்றாக இருப்பார்கள், அவர்களைத்தான்  திருமணம் செய்ய ஆசைபடுவேன் என்று இவர்கள் சொல்வது சத்தியமான பொய். இது பேச்சிற்காக கூறுவது. பெண் பார்க்கும்போது ஒரு பெண் மாநிறமாகவும் ஒரு பெண் வெள்ளை நிறமாகவும் இருக்கும் பட்சத்தில் இவர்கள்  வெள்ளையான  பெண்களையே இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்  என்பது உண்மை . 
# பெண்களும் அப்படியே.

3.இந்த பெண் தன்னிடம் பேச மாட்டாளா, பழக மாட்டாளா, காதலிக்க மாட்டாளா என்று பின்னாடி சுத்துபவர்கள், அவள் அருகில் வந்து இவன் நினைத்தது போல் பேசி,பழகி காதல் என்று வரும்போது பயந்து " இல்லை" என்று சொல்லும் கோழைகளும் உண்டு. 
#( இதுல பெண்கள்.. கடைசி சமயத்துல அப்பா,அம்மா,குடும்பம், விட்டு கொடுக்கணும்னு தமிழ் சினிமா வசனம் பேசி கலண்டுக்குற ஆட்கள் ) 

4.இது எல்லாத்தையும் விட ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கூட இருக்கும் நண்பர்கள் ஏத்தி விட்டு காதல் வர்ற ஆட்கள் ஜாஸ்தி. சுத்தி இருக்குறவன் எல்லாருமே பண்ணறான் .. நாமளும் பண்ணினாதான் நமக்கு  "கெத்து" னு ஆரம்பிக்குற ஆட்கள்.. இது நிறைவேறவே நிறைவேறாது  அப்படியே கல்யாணம் பண்ணிகிட்டாலும் ஒரு வருஷத்துல அத்துக்கும். 

5. இந்த வகை ல பொதுவாகவே பொண்ணுங்க காலேஜ் ல படிச்சாலும் .. டீ போடுற ஆள், கண்டக்டர், பட்டறைல இருக்குற ஆள், ஹோட்டல் ல வேலை செய்யற ஆள், லாரி டிரைவர் , இப்படி படிக்காத  ஆட்கள் மேல காதல் வந்து விழுந்துடுவாங்க. கடைசியல வீட்ல பார்க்குற பையன பார்த்துட்டு  போய்டுவாங்க , ஆனா  கல்யாணத்துல முடிஞ்சா அதுவும் ரெண்டு வருஷத்துல ஊத்திக்கும்.
# ஆனா நம்ம படிச்ச பசங்க ரொம்ப உஷாரு ..படிச்ச பையன் வேலைகாரி, ஹோட்டல் ல வேலை செய்யற பொண்ணு ,ஜெராக்ஸ்   ஷாப்ல இருக்குற பொண்ணு , டெலிபோன் பூத்ல இருக்குற பொண்ண காதலிச்சதா  நியூஸ் அதிகமா பார்த்தது இல்ல.. அப்படியே பார்த்தாலும் கண்டிப்பா கடலை  போடுறதோட சரி .. கல்யாணம் பண்ணிகிட்டதா பார்த்தது இல்ல.

ஆனா இது எல்லாமே TOWN  ல நடக்குறது.. கார்பரேட் ல இருக்குற நவீன  இளைஞன்,இலைஞகளோட ரேஞ்சு எங்கயோ போய்ட்டு இருக்கு.. 
 
  
 

2 கருத்துகள்:

Harinniy சொன்னது…

sema post....sowie sowie true!!!athuvum antha fourth category la irukara aalunga thaan maximum....i've seen many of my friends who start to believe their crush as love,ithuku neenga sonna madri kooda irukara frnds usupethuradhu thaan karanam..inoru pakkam suthi irukara friends laam commit aagitaangalae nu thaanum commit aaganum nu muttaal thanama alaiyuravangalum neraya per irukaanga(mostly ppl who are innocent and new to city culture are victims to this)....edhu epadiyo kadaisila love love nu feel panni avunga padipulayum,vazhkaiyilum kotta vidradhu thaan nadakuthu...

Guna சொன்னது…

unga photo la irukkura mathiri medai yeri karuthu solltteenga ponga :)