புதன், 27 ஜூன், 2012

தமிழ் செய்திகளின் லட்சணம்

கடந்த பத்து , பதினைந்து  ஆண்டுகளாகவே   தமிழ் தொலைகாட்சிகளில் நடுநிலையான  செய்திகள் என்பது அரிதாகிப்போன ஒன்று. மேலும்  தரமானதாக  இருக்கிறதா என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றம் மட்டுமே . தற்போது அலைவரிசை என்பது அரசிய்லாதிகளின் கையில் பிடியில் இருக்கும்போது , ஆளாளுக்கு ஒரு தொலைகாட்சிகளை வைத்து தனது புராணத்தையும், அடுத்த கட்சியை தூற்றுவதற்கும் மட்டுமே தத்தம் தனது செய்திகளை பயன்படுத்துகின்றன . அதிலும் தற்போது செய்திகளுக்கேன்றே  தனி அலைவரிசைகள் .. இருபது நாலு மணி நேரமும் தன்னை பற்றி தம்பட்டம்  அடிப்பதற்கே அலறிகொண்டு  இருக்கின்றன. சரி அரசியல் இப்படித்தான் என்று விட்டு தொலைந்தால்.. மற்ற செய்திகள் எப்படி இருக்கிறது என்று பார்த்தால்... சாமியார் லீலைகள் காட்டுவதில் இருக்கும் அக்கறைய மற்ற சமூக செய்திகளில் தொலைகாட்சிகள் அக்கறை  காட்டுவதில்லை... விளையாட்டு செய்திகள் என்று என்று எடுத்தால் கிரிக்கெட் மட்டுமே இவர்களுக்கு விளையாட்டு... அதிலும் இந்திய விளையாண்டால் மட்டுமே செய்திகள் இவர்களுக்கு..  ( நடுநிலையான  செய்திகள் என்று  அணைத்து தொலைகாட்சிகளும் தருவது தங்கம் விலை மட்டும்தான் என்று நினைக்கிறன்)

சன், ஜெயா, கலைஞர் தொலைகாட்சிகள் என்று செய்திகளை குதறி கொண்டு இருக்க... தமிழ் செய்திகளில் ஒரே ஆறுதலாக தற்போது "புதிய தலைமுறை" சானல்  செய்திகளை முடிந்த வரை தரமானாதாக கொடுத்து வருகின்றன... கண்டிப்பாக மற்ற தொலைகாட்சிகளை  விட முற்றிலும்  மாறுபட்ட கோணத்தில செய்திகளை அளித்து வருகின்றன.. செய்திகளை 24 மணி நேரமும் செய்திகளாக  கூறமால்.. வெவ்வேறு  வகையில். வெவ்வேறு நிகழ்சிகளாக  செய்திகளை அலுப்பு தட்டாமல் தருகின்றன . செய்திகளும்  அரைத்த மாவை அரைக்காமல்  முடிந்தவரை பயனுள்ள செய்திகளாகவும் , உடனுக்கு உடன் தருவதிலும் புத்திசாலிதனமாக வழங்கி வருகிறது. அணைத்து வகை செய்திகளும்.. அணைத்து இட செய்திகளையும் தவறாமல் சேர்த்து அளித்து  வருகின்றது. காணமல் போன "நடுநிலையான செய்திகள்" என்பதை திரும்பவும் சாத்திய படுத்தி வருகின்றது ..

செய்திகளை உண்மையாக தெரிந்து கொள்ள தாரளமாக இதை நாம் பின் தொடரலாம்...

தற்போது NDTV தமிழ் செய்திகளும் நடுநிலையாக  இருகின்றது என்று நினைக்கிறன்.. இன்னும் இதை தொடர்ச்சியாக கவனிக்க வில்லை.. இந்த அலைவரிசையும் நடுநிலையான  செய்திகளை வழங்கினால்.. மீண்டும் செய்திகள் செய்திகளாக வலம் வர வாய்ப்பு உள்ளன...


கருத்துகள் இல்லை: