வேலை கிடைக்கவில்லை என்று நமது பல நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள்
அலைந்து கொண்டி இருக்கும்போது.. என் பையனுக்கும் (முக்கியமாக தற்போதுதான்
படித்து முடித்தவர்களும்) உங்க கம்பெனில அல்லது தெரிந்த வேலை காலி இடங்கள்
இருந்தால் சொல்லுங்கள் என்று பெற்றோர் கேட்டு கொண்டு இருக்கும்போது ....
நமக்கு சில விளம்பரங்கள் தென்படுகின்றன
நாம வேலை தேடி கொண்டு இருக்கும் காலத்தில் இருந்து இது போன்ற விளம்பரங்களை பஸ் , ட்ரெயின் மற்றும் ஆட்டோகளில் பார்த்து இருக்கிறோம்... ஆனால் நம்மில் பெரும்பாலோர் அது "என்ன" என்று கூட தோணியது இல்லை..
நாம உட்பட பெரும்பாலோர் இது ஏமாற்று வேலை என்று நம்புகிறோம் . 95 சதவீதம் இது ஏமாற்று வேலை என்பது உண்மைதான்.. ஆனால் இவர்கள் யார்? எப்படி பட்ட வேலை ? சில விளம்பரங்களில் மார்க்கெட்டிங் இல்லை.. கமிஷன் சம்பளம் இல்லை என்று சொல்லுகிறார்கள்.. பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இருபது ஆயிரம் ருபாய் சம்பளம் என்று சொல்கிறார்கள்... மூன்று மணி நேரம் வேலை பார்த்தால் பத்து ஆயிரம் என்று சொல்கிறாகள்...
ஒருபோதும் என்ன வேலை? ... நிறுவனத்தின் பெயர் என்ன? என்பதை இவைகள் போஸ்டரில் அடித்தே இல்லை... இவர்கள் ஏமாற்றுகாரர்கள் என்றால் யாரும் இவர்களை கண்டுகொள்ளவில்லையா? ஒரு தடவ கூட இந்த மாதிரி ஏமாத்துறாங்கனு ஒரு புகாரோ அல்லது ஊடகங்களிலோ செய்தி வந்ததில்லை...
யாருக்கு தெரியும் இவர்கள பற்றி ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக