வெள்ளி, 20 ஜூலை, 2012

. தமிழ் சினிமா விரு(ந்)து

ஒரு காலத்தில் சினிமா விருதுகள் என்பது படம் எடுப்பவர்கள் அனைவருக்கும் ஒரு கனவாக இருந்தது.. ஆரம்பத்தில் தேசிய விருதுகள் முக்கியமாக கருதப்பட்டு பின்பு மாநில விருதுகளும் அரசு சார்பில் கொடுக்க பட்டது.

 பிறகு மெதுவாக FILM  FARE  விருதுகளுக்கு முக்கியத்துவம் போனது...  அடுத்து சிறிது சிறிதாக பல நிறுவனங்கள் , பத்திரிகைகள் விருதுகள் கொடுக்க ஆரம்பித்தன.. 90 களின் ஆரம்பத்தில் கமல்ஹாசன் என்ற ஒரு மனிதரால் ஆஸ்கார் விருது என்று ஒன்று இருக்கிறது என்பது அணைத்து தர மக்களுக்கும் தெரிய வந்தது. தமிழ் சினிமாவில் 90  களில் தான் விருதுக்கு முக்கயத்துவம் வர ஆரம்பித்தது மக்களிடத்தில். அதற்க்கு கமல்ஹாசன் தேசிய விருதுகள் வாங்கியது அச்சாரம் போட்டது எண்டு கூட சொல்லலாம்.  பிறகு நடிகர்கள் மட்டும் அல்லாமல் டைரக்டர் , ஒளிப்பதிவாளர் போன்றவர்களின் விருதுகளும் கவனிக்கப்பட்டன. மெல்ல அணைத்து டெக்னீசியன் விருதுகளும் கவனிக்க பட்டன.. அனைவரும் தேசிய , film fare விருதுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

இந்த விருதுகளால் மெல்ல தமிழ் படங்களின் தரமும் உயர தொடங்கின என்று கூட சொல்லலாம். விருதுகள் கொடுக்க ஆரம்பித்ததில்,புத்தகங்களின் விமர்சனகளும் மேலும் தரமாக மாற தொடங்கின... சரியான படங்களுக்கு விருதுகள் சேர்ந்தன..

ஆனால் கடந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாக விருதுகளும் தடம் மாற தொடங்கி உள்ளன... விருதுகளின் கௌவரமும் பாதாளத்திருக்கு சென்று கொண்டு இருக்கின்றன.

தமிழ்நாட்டு மாநில விருதுகள் முற்றிலும் அரசியல் சாயம் பூசப்பட்ட விருதுகளாக  மாறிவிட்டது.. தினகரன் சினிமா விருதுகள் கொடுத்தன, அதற்க்கு வாசகர்கள் மட்டும் விருது பெறுபவர்களை தேர்ந்தெடுக்குமாறு வைத்ததால் திறமையானவர்களுக்கு  விருதுகள்  போகமால் .. பிடித்தவர்களுக்கு  விருதுகள் போயின..  அடுத்து விஜய் டிவி விருதுகள் கொடுக்க ஆரம்பித்தது.. இரண்டு மூன்று ஆண்டகள் நன்றாகத்தான்  சென்றது ... ஒரு குறிப்பிட்ட வருடம் செந்தமிழ் மாநாடு கோயம்புத்தூர் நடப்பதற்கு முன்னால் இந்த விருதுகள்  நிகழ்ச்சி நடந்தது.. அப்போது விளம்பரத்திற்காக கனிமொழி வந்தார்.. அதில் இறுதி இதுவும் தடம் புரள ஆரம்பித்தது.அனைவருக்கும் விருதுகள் என்று புதிது புதிதாக விருதுகள் அளிக்கப்பட்டன ... ஒரு ஆண்டு விருது நிகழ்ச்சியில்  கிட்டத்தட்ட 25  விருதுகளை கொடுத்து விருதுகளின் தரத்தை குறைத்து .  இது போக என்று புலியை பார்த்து சூடு போட்ட கொண்ட கதையாக மற்ற தொலைகாட்சிகளும் தன் இஷ்டம் போல் விருதுகள்  கொடுக்க  ஆரம்பித்தன.. இப்போது எந்த சானல் பார்த்தாலும் விருதுகள்  நிகழ்ச்சி என்று  TRP  புள்ளிகளுக்காக , விருதுகளை கேவலபடுத்தி நிகழ்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

சேனல்கள் இப்படி இருக்க.. படம் எடுப்பவர்களும் .. மொக்கை படத்தையும் கண்ட வெளிநாட்டு விருதுகளுக்கு அனுப்பி.. விருது வாங்கிய படம் என்று விளம்பரம் தனக்கு தானே சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். செய்து மொத்தமாக விருது என்பதற்கு அங்கிகாரம் இல்லாமல் போய்விட்டது


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மையான ஆதங்கம்...
பகிர்வுக்கு நன்றி...

s suresh சொன்னது…

உண்மைதான்! விருதுகள் இப்போது இப்படி பிடித்தவர்களுக்கு கொடுக்கும் பரிசுகள் ஆனது வேதனையே!

T.N.MURALIDHARAN சொன்னது…

தொலைக் காட்சி களெல்லாம் எந்த அடிப்படையில் விருதுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.நடிகர்களைக் காட்டி விளம்பரத்தில காசு பார்க்கிறார்கள்.