திங்கள், 24 செப்டம்பர், 2012

சூலும் அரசியல்


 இன்றைய தேதியில் சுழன்று கொண்டு இருக்கும் மூன்று முக்கிய காட்சிகள் 


எங்கயோ வெளியிடப்பட்ட ஆங்கில படத்தில் நபிகள்   நாயகம்  அவமானபடுத்தபட்டதாக   ஆங்காங்கே   போராட்டம்  என்று  செய்திகளில்  வந்து  கொண்டு  இருக்கிறது  , நம்ம  ஊரிலும்  அதற்க்கு  போராட்டம்  என்று  சென்னை  மற்றும்  அணைத்து  இடங்களிலும்   ரயில்  மறியல் , இன்னும் என்னென்ன  மறியல்  இருக்கிறதோ  எல்லா  மறியலும்  நடைபெற்று  கொண்டு  இருக்கிறது . ஆனால்  அது  என்ன  படம் , பெயர்  என்ன ? என்று கூட போரட்டத்சில் இருக்கும் பலருக்கு தெரியாது. அது ஒரு குறும்படம் , அதன் ட்ரைலர் மட்டுமே வெளயாட பட்டு இருக்கிறது என்று கூட பலருக்கு தெரியாது. ஒரு மதத்தை புன்படுதுமாறு நடந்து கொள்வது தவறுதான். இதற்க்கு அமெரிக்கா காரணம் .. வேண்டுமென்றே  செய்கிறது, என்று ஒரு புறம் , ஏன் நம் அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் முஸ்லிம் கடவுள் இகழபட்டால் மட்டும் குரல் கொடுகிறார்கள் என்றும் அரசியல் மற்றும் மத விவதாங்கள் ஒரு புறம் நடைபெற்று இருக்கும்போது , இதை இன்னும் அசிங்கபடுத்தும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அஹமத் பிலோர் இந்த படத்தை எடுத்தவர் தலையை கொண்டு வந்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு என்றும் , அவனை நானே கொள்ளுவேன் என்றும் வக்கிரமாக பேசி தனது மதத்தை தானே கேவலபடுத்தி படம் எடுத்தது சரிதான் என்று நினைக்க வைத்து விட்டாரோ என்று தோனுகிறது . இது வரை இப்படி ஒரு படம் வந்தது என்று பெரும்பாலான ஆட்களுக்கு தெரியமால் இருந்தது உண்மை. இவர்களே அதை பிரபலபடுத்தி விட்டார்கள் என்பதும் உண்மை.

மின்சாரம் இல்லாமல் எல்லாரும் அல்லல் பட்டு  இருக்கும் நிலையில் , கூடங்குளம் சற்று இந்த தாகத்தை அணைக்கும் என்ற எதிபார்ப்பு தவிடு பொடி ஆகி கொண்டிருகிறது .போராட்டம் மற்றும் அடக்குமுறைகளால்  வீணாகிகொண்டிருகிறது  யார் சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. போராடுபவர்கள் பெரும்பாலும் எளிய நடுத்தர மக்கள்,அவர்களுக்கு அச்சத்தை போக்கினால் மட்டும் போதும், தாரளமாக அடுத்த கட்ட வேலைகளை தொடங்கலாம். ஆனால்  இவர்கல் அச்சத்தை போக்க  ஏன் ஜெயலலிதா நேரடியாக அங்கு சென்று உரையாற்றவில்லை  என்று இன்னும் புரியவில்லை. கண்டிப்பாக ஜெயலலிதாவால நேரிடையாக சென்று அங்கு பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை மக்களுக்கு புரியவைக்க முடியும். ஆனால் ஏன் அவர் தயக்கம் காட்டுகிறார் என்று புரியவில்லை.


சமையல் எரிவாயு கட்டுபாடுகள், டீசல் விலை உயர்வு, நேரடி அந்நிய முதலீடு சிறு வணிகங்களில்  - நாடு முழுவதும் இதற்க்கு எதிர்ப்பு , அணைத்து கட்சிகளும் இதற்க்கு எதிர்ப்பு.. மேலும் மேலும் ரத்தத்தை சூடாக்கி கொண்டு இருக்கிறது காங்கிரஸ் அரசு. மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டும் அதிக சீலீண்டர்  என்று சேற்றை எடுத்து முகத்தில் பூசிக்கொண்டு உள்ளது. பணம் என்ன மரத்திலா  காய்கிறது என்று மன்மோகன் சொன்னதுக்கு FACEBOOK சிரிக்கிறது, லட்சம்கோடி ஊழல்  புரிந்த போது மட்டும் பணம் என்ன  மரத்திலா காய்த்தது? என்று. டீசல் செல்வந்தர்கள் பயன்படுத்தும் கார்களுக்கு பயன்படுகிறது, இதனால் ஏழைகள் பாதிக்க மாட்டார்கள் என்று அடி முட்டாள்  போல உரையாற்றுகிறார்.. அறிவுகெட்ட முண்டமே பஸ், லாரி என்ன தண்ணீரிலா  ஓடுகிறது? இதன் செலவு அதிகமானால் அணைத்து பொருட்களின் விலையும் ஏறாதா?   என்று திருப்பி கேட்க தோணுகிறது. மனசாட்சி இல்லாத இந்த காட்டு மிராண்டிகளுக்கு  சத்தியமாக மூளையும்,இதயமும் இல்லாமல் போயிருக்க வேண்டும்









2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// ஜெயலலிதாவால நேரிடையாக சென்று அங்கு பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை மக்களுக்கு புரியவைக்க முடியும். ///

ஆபத்தான உண்மை அவருக்கும் தெரியும்....

Guna சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் - இருக்கலாம் ..செல்வதுதான் பிரச்சினையே ... ஒருவேளை கூடங்குளம் என்ற பெயருக்கு பதிலாக கொடநாடு என்று பெயர் வைத்திருந்தால் சென்று இருப்பாரோ என்னவோ