புதன், 21 நவம்பர், 2012

சச்சின் not versus கோஹ்லி




ஒரு காலத்தில் கிரிக்கெட் புத்தகம் எழுதுபவர்களும், வர்ணனையாளர்களும் ஏன் சச்சின் கூட சிறந்த பேட்ஸ்மேன்  ப்ரோட்மேன்  அல்லது ரிச்சர்ட்ஸ் என்று சொல்லும்போது சச்சினை விட இவர்கள் சிர்ந்தவர்களா ? கண்டிப்பாக  சச்சின்தான் சிறந்த பேட்ஸ்மேன் மேலும் அவரது சாதனை,புள்ளியியல் பட்டியலும் அதிகம் என்று நினைத்தது உண்டு.

ஆனால் தற்போது புரிகிறது.. வெவேறு காலகட்டத்தில் உள்ளவர்களை  ஒப்பீடு செய்து பார்ப்பதே   முட்டாள்தனம் என்று.

உதாரணமாக தற்போது கிரிக்கெட் பார்ப்பவர்களும்  சரி, எழுதுபவர்களும் சரி விராட் கொஹ்லியை அடுத்த சச்சினாகவும் அல்லது சச்சினின் சாதனைகளை இவர் எளிதாக முறியடிப்பார்,முக்கியமாக ஒருநாள் போட்டிகளில்  சச்சினின்  சாதனைகளை எளிதில் மிஞ்சும் வைப்பு உள்ளது .. இவரை விட அவர் மிக சிறந்த வீரராக  வருவார்  என  ஒப்பிட ஆரம்பித்து இருகிறார்கள்.

சற்று  யோசித்தால் சச்சின் வந்த காலத்தில் இருந்து 1999 வரை இருந்த மைதானங்கள்  அவற்றின் அளவு , பௌலர்களுக்கு  சாதகமான ஆடுகளங்கள் , மேலும் வாசிம் அக்ரம் , வாக்கர் யூனுஸ், அக்யூப் ஜாவித்  , ரீட், மெக் கரகிராத் , வார்னே, பிக்கல்,கில்லஸ்பீ  , அம்புரோஸ் , வால்ஷ், மார்ஷல், பொல்லாக் , டொனால்ட்,வில்லியர்ஸ் , மோரீசன், கேன்ஸ் , லெவிஸ், ஸ்ட்ரிக், வாஸ், முரளிதரன்  மற்றும்  பல சிறந்த பௌலர்களின்  தரம் தற்போது உள்ள பௌலர்களிடம்  உள்ளதா  என்று பார்த்தால்  அதில் பாதி அளவு கூட இல்லாதது நிஜம்.  இந்த மைதாணங்களில் இந்த பௌலர்கள் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சுகளில்  ஒரு நாள் போட்டிகளில் 250 ரன்கள்  எடுத்தால் ( தற்போது  320 ரன்களுக்கு சமம்) வெற்றி  என்ற காலகட்டத்தில் இருந்து ஆடி வந்து இன்னும் விளையாடிக்கொன்டிருக்கும்  சச்சினை கண்டிப்பாக  கொஹ்லியுடன் ஒப்பீடு செய்வது முட்டாள்தனம் .

சச்சினின் கிளாஸை இந்த 20-20 காலத்தில் மாடர்ன்  கிரிக்கெட்டில் இருக்கும் கொஹ்ளியை சேர்த்து பேசுவதே தவறு . இதைத்தான் இதுவரை  பப்ரோட்மேன்  அல்லது ரிச்சர்ட்ஸ் போன்றவர்களை சச்சினுடன்  ஒப்பீடு செய்ய இயலாது என்று சொல்லி கிரிக்கெட் அறிந்தவர்கள் சொல்லிவருகிறார்கள்
வெவேறு காலகட்டத்தை  பார்த்தாலும் கிரிக்கெட்டின் பொற்காலம் என்னும் காலத்தில் இருந்த சச்சினை யாருடனும்  ஒப்ப்டீடு செய்ய இயலாது .. நாளை கொஹ்லி இவரது சாதனைகளை மிஞ்சினால் கூட சச்சினை விட சிறந்த வீரராக  இவரை கருத முடியாது என்பதே உண்மை. 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சச்சினை ஒப்பிடலாம் - அவரோடு மட்டும்...!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உங்கள் கருத்துக்கள் உண்மைதான்! மேதைகளை எவரோடும் ஓப்பிடத்தேவைஇல்லை!