புதன், 1 அக்டோபர், 2014

ஜெ வழக்கு ஆதரவாளர்களின் விமர்சகர்கள்



 தினமும் வீறு குறையாத போராட்டம் முன்னால் முதல்வரை விடுதலை செய்ய வேண்டும் என்று.
 போராட்டம் செய்பவர்களை , விமர்சகர்கள் " ஊழல் செய்தவரை விடுதலை செய்ய கோருவதன் மூலம் அனைவரும் ஊழலை ஆதரிக்கிறார்கள்; முட்டாள்தனமாக ஊழல் செய்தவருக்காக போராடுகிறார்கள்" என்று விமர்சிகிறார்கள் சில நடுநிலையாளர்கள் உட்பட.
இதற்க்கு ஒரே பதில் மற்ற திருட்டு பயல்களுக்கு இவர்கள் எவ்வளவோ  மேல் என்று நினைப்பதும் . மீண்டும் திருட்டு குடும்பம் எதாவது ஆட்சிக்கு வந்து விடுமோ என்று மட்டுமே. கருத்து கணிப்புகளும் அதிமுக விற்கு ஆதரவாகவே இருக்கிறது.
எனக்கோ உனக்கோ, அணைத்து மக்களுக்குமே 91-96 இல் நடந்து யாருக்குமே தெரியாது ஊழல் உண்மைகள் தெரியும் . ஆனாலும் எதற்காக மீண்டும் இரண்டு முறை முதல்வர் ஆகினார்கள ?

ஏன் மீண்டும் முதல்வர் ஆகும் போது விமர்சர்கள் ஊழல் செய்தவற்கு ஒட்டு போட்டு ஊழலை ஆதரிக்கிறார்கள் என்று சொலலவில்லை ,ஏனெனில் அவர்களும் ஒட்டு போட்டது அதிமுக விற்கே .   நீதிமன்றத்தில் தீர்ப்பு வர வில்லை அதனால் ஒட்டு போட்டோம் என்று சப்பை கட்டு கட்ட முடியாது . உண்மை தெரிந்தே வாக்களித்தார்கள்.
இப்போது முன்னால் முதல்வரை  ஆதரிபவர்கள் சட்டத்தை முன்னிறுத்தி ஆதரிக்காமல்  , மனதால் மட்டுமே ஆதரிகிறார்கள். இதையே தான் அணைத்து தரப்பு மக்களும், விமர்சகர்களும்  சென்ற தேர்தலில் மனத்தால் ஒட்டு போட்டார்கள் .

வழக்கின் முக்கியமான நல்ல அம்சம் நூறு கோடி  வரவேற்க தக்கது , வழக்கை  முன்னால் முதல்வர் கையாண்ட விதத்திற்காகவே இந்த அபராதம்  சரியாக போகும். ஆனால் மற்ற படி சரியாக மூன்று வருடங்களுக்கு மேல் கொடுத்து ஜாமீன் பெற முடியாமல் செய்வது , பார்வையாளர்களை அனுமதிக்காதது  இவற்றை பார்த்தால் ,ஏற்கனவே இது போன்ற ஊழல் வழக்கில் ஜாமீன் கிடைத்ததையும் , தற்போது இந்த வழக்கில் ஜாமீன் தள்ளி போவதையும் யோசிக்கும்போது உண்மையில் இது நீதி மன்றத்தையும் தாண்டிய ஒரு வழக்காகவே யோசிக்க வைக்கிறது.

ஆனால் மீண்டும் மக்கள் முட்டாள் ஆக்க படுவார்கள்  என்பதும் , புகழ்ச்சி விளம்பரங்கள் வரும் என்பதே உண்மை
 

கருத்துகள் இல்லை: