வியாழன், 18 செப்டம்பர், 2014

அரசியல்வாதிக்கு கிடைத்தது கெட்டவன் நமக்கு கிடைக்கவில்லை அப்பாவி

 கடைக்கோடி பிச்சைகாரன் முதல் நாகரீக  கோடீஸ்வரன் வரை யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்கையில் ஒரு முறையாவது சொல்லி இருக்கும் வார்த்தை அரசியல் சாக்கடை / அரசியல்வாதிகளால் தான் நாடு குட்டிச்சுவர் ஆகிறது / அணைத்து அரசியல்வதிகல்மும் ஊழல் பேர்வழிகள் / இவர்களது ஊழலால் தான் நாடு நாசமாகிறது / இப்படி ..

அரசியவாதிகள் மட்டுமே கெட்டவர்கள் அவர்கள் மட்டுமே மக்கள் பணத்தை உறிஞ்சுகிறார்கள் / மக்களை ஏமாற்றி ஊழல் செய்கிறார்கள் அவர்களை சுட்டு தள்ள வேண்டும் இதுதான் பெரும்பாலான முக்கியமாக படித்தவர்களின் கருத்து .
உண்மையில் ஊழல் செய்யாதவன் யார்? எழுதுகிற நானோ ?  என் அருகில் இருப்பவர்களோ என் நண்பர்களோ அல்லது இதை படிபவர்களோ ? ஒருவரும் இல்லை . இருக்கும் அனைவரும் ஊளை செய்து கொண்டு இருப்பவர்களே..
 வேலை செய்யும் நம்மில் எத்தனை பேர் நாம் conveyance  செலவுகள் ( Marketing,onsite, Training,etc..) அலுவலகத்தில் கொடுக்கும்போது ஒரு ருபாய் கூட  நாம் செய்த செலவிற்கு அதிகமாக காட்டாதவர்கள் நம்மில் கிடையாது ஏன் உலகில் ஒருவனும் கிடையாது . இங்கு இருந்து நமது ஊழல் ஆரம்பிகிறது. நமக்கு வேலை கொடுத்து சம்பளம் தருபவனிடம்  நாம் ஊழல் செய்கிறோம் . அதாவது நம் வரி பணத்தில் சம்பளம் வாங்கி நமக்கு வேலை செய்யும்  அரசியல்வாதி நம்மிடம் ஊழல் செய்வதை போல்.
இதுபோல் தான் நடத்துனர் சில்லறையில் , production செய்பவன் பொருள் வாங்குபவனிடம் , மருத்துவன் மருந்து வாங்குபவனிடம் , கட்டிட பொறியாளன் சிமெண்ட், மணல்  வாங்குபவனிடம், என்று எல்லாரும் ஊழலின் பிம்பங்கள் .

நாம் நம் தகுதிக்கு ஊழல் செய்வது போல , நம் முதலாளிகள் அவர்கள் தகுதிக்கு ஊழல் செய்வது போல் அரசியல்வாதிகள் அவர்கள் தகுதிக்கு ஊழல் செய்கிறார்கள் ( தகுதி என்று சொன்னது கிடைக்கும் வாய்ப்பை /chance ) . நாளை நமக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்போது தவறமால் நாமும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஊழல் செய்வோம் என்பது உண்மை.
உண்மையில் நம்மில் உத்தமன் எவனும் கிடையாது. நாளை எனக்கோ , உனக்கோ அரசியல் வாய்ப்பு கிடைக்கும்போது நாமும் பணம் சம்பாதிக்கத்தான் போகிறோம். இப்போது நமக்கு வாய்ப்பு இல்லை அதனால் நல்லவனாகவும் அல்லது வாய்ப்பு இல்லையே என்ற திமிர்/பொறாமையிலும் அரசியல்வாதிகள் கெட்டவர்கள் , ஊழல் பேர்வழிகள் என்று கூப்பாடு போடுகிறோம் போடுகிறோம் . கெஜ்ரிவாளில் இருந்து நான் வரைக்கும் இது பொருந்தும்.
நாம் வேலை செய்து கொடுத்து கிடைக்குற சிறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறோம் என்று வாதிடலாம் . ஆனால் நமது வேலையை கண்காணிக்க ஆள் உண்டு, அதருக்கு ஊதிய உயர்வு உண்டு அதனால் வேலை செய்து கிடைக்குற காசை அடிக்கிறோம். நம்மை , நம் வேலையை கண்காணிக்க ஆள் இல்லை என்றால் நாமும் வேலை கூட செய்யாமல் பணம் அடிக்கத்தான்  பார்ப்போம்.அரசியவதிகளை  கண்காணிக்க இன்னொரு அழுக்கு  அரசியல்வாதியே இருக்கிறான்   சொன்னால் கவனிக்க ஆள் இல்லை அதனால் அவன் சரிவர வேலை செய்யாமல் பணம் அடிக்கிறான் . நாளை நாம் அரசியல்வாதி ஆனால் இதே கதைதான்.
 அரசு வேலையில் இருந்து தனியார் வேலையில் இருப்பவர்களிடம்  வரை  அணைத்து தனிமனிதர்களும் ஊழல் செய்து கொண்டு இருக்கிறோம். ஊழல் ஒருவரிடம் இருந்துகூட போகாது .. அதனால அரசியல்வாதிகள் மட்டுமே ஊழல் பேர்வழிகள் என்பதை  விடுத்து .. முடிந்தவரை தேவையான வேலையை மட்டும் செய்வதும் ,எதிர்பார்ப்பதும் , கொடுப்பதும் வாங்குவதுமே நிதர்சன உண்மை.

பின்குறிப்பு : கொடுத்தது அதிகம்,செய்தது மிக அதிகம் ,  வாங்கியது இல்லை, எடுத்தது எள் அளவு.

கருத்துகள் இல்லை: