சென்னை
மிதக்கிறது. பார்த்து பார்த்து கட்டமைத்த வெனிஸ் கூட இப்படி மிதக்காது.
சாலையில் மார்பளவு தண்ணீர்,வீடுகள் மூழ்கியது,ஏடிம் இல்லை,மிண்சாரம்
இல்லை,போன் இல்லை,கடை,உணவு,குடிநீர்,போக்கு வரத்து இல்லை. இயற்கை தனது பாடத்தை நடத்த தொடங்கியுள்ளது.
அரசுக்கு 2500 கோடி நிதி. மழை நிவாரணத்திற்க்கு
2500 கோடி நிதி என கூறுவது தவறு. என்னதான் மழை அதிகம் என்றாலும் மாறி மாறி ஆட்சி செய்து வந்த பணத்தையெல்லாம் சுருட்டி கொண்டும் இலவசம்கொடுக்க பயன்படுத்தி அடிப்படை ஆதாரமாண நீர் நிலம் குளம் குட்டை, ஏரி ,கழிவு நீர்சாக்கடையை தொலைத்த அரசியல்வாதிகள் இன்றும் பத்து கார்களில் படைசூழ மழைநீரை வேடிக்கை பாா்க்க கிளம்புகிறார்கள். மற்ற மாவட்டங்கள் நிலை இன்னும் மோசம் யாரும் கவனிப்பார் போல் இல்லை. கிடைத்த கோடிகளில், என்ன பண்ண முடியும் என இறங்கி வேலை செய்பவனுக்கு தெரியும்.ஆனால் நம் அரசு எ[எப்படி கணக்கு காமிக்கலாம் என இப்போதே புத்தி தீட்ட ஆரம்பித்து இருக்கும்.

சமூக வலைதலங்களில் ரஜினி கொடுக்கவில்லை அந்த நடிகன்
கொடுக்கவில்லை இந்த நடிகன் கொடுக்கவில்லை என கிழித்து கொண்டிருக்கிறார்கள்
இதை சொல்பவர்களில் எத்தனை பேர் என்ன கிழித்தார்கள் என்று தெரியவில்லை .
பேசும் இதே ஆட்களில் பெரும்பாலானோர் என்ன உதவி செய்தார்கள் ?அல்லது
பக்கத்தில் அள்ளாடுபவருக்கு பத்து ரூபாய் கொடுத்திருக்க மாட்டார்கள் என்பதே
உண்மை. நம்மவர்களுக்கு யாரிடம் எதை கேட்பது யாரை எங்கே வைப்பது என்று
புரிவதேயில்லை.அவன்அவனது வேலையை செய்வதற்க்கு உன் வேலையை விட்டு கட்-
அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து தூக்கி வைத்து கொண்டாடி இப்போது லிட்டர்
பாலை 100 ரூபாய்க்கு கள்ளசந்தையில் வாங்குவது நம் தவறு.
உண்மையில் கமல்ஹாசனின் நேற்றைய பேட்டி நியாயமான ஒன்றுதான்.http://www.firstpost.com/bollywood/the-entire-system-has-collapsed-kamal-haasan-sends-distress-message-from-chennai-2531358.html
உண்மையில் கமல்ஹாசனின் நேற்றைய பேட்டி நியாயமான ஒன்றுதான்.http://www.firstpost.com/bollywood/the-entire-system-has-collapsed-kamal-haasan-sends-distress-message-from-chennai-2531358.html
அவனொன்றும் அரசு இல்லை அவன் சம்பாதித்ததை
கொடுக்காததை திட்டுவதும் சரியில்லை. இனியும் பாலபிஷேகம்
நடந்தகொண்டேதான்இருக்கும். அவன் நடிகன் என்பது உரைக்க போவதே இல்லை.
ஏரி /சாக்கடை வசதி /குளம்/நீர்
இருந்தால் என நூறு அறிவுரைகள்,குற்றம்,போராட்டம்,விவாதம் என இப்போது
செய்பவர்கள் யாரும் இதற்க்கு முன்பு இது விஷயமாக செய்ததில்லை அல்லது நீர் வடிந்ததும்
இதைபற்றி கவலை பட போவதும் இல்லை.
சாதரண மக்கள் வீடுகட்டும்போது நீர் நிலத்தடியில் சேர இடம் விட
போவதில்லலை. வசதிபடைத்தவர்கள் ஏரி குளம் விட்டு வைக்காமல் , பணக்காரர்கள்
மணல் மலையை கொள்ளை அடிக்காமல இருக்க மோவதும் இல்லை. அவரவர் சக்திக்கு
தகுந்த படி இயற்கையை கொள்ளை அடித்துகொண்டேதான் இருப்போம். இயற்கையும் ஒரே
அடியாக திருப்பி கொடுக்கும்.தனி மனிதர்களாக இயன்ற வரை இயற்கையை நோண்டி
கொண்டே இருப்போம்.
வடக்கத்திய ஊடகம் அப்படித்தான் இதில் புதிதொண்றும் இல்லை.
அவர்களை பொறுத்தமட்டில் தமிழகம் இந்தியாவில் இல்லை நம்மை பற்றி அவர்களுக்கு
கவலையில்லை.அவர்கள் பிரச்சனை இந்திராணி வழக்கு. நமக்கிருக்கும் வேதாளம்
வசுல் , தெறி தலைப்பு, இந்த வாரம் பட ரிலீஸ் இல்லை போன்ற பிரச்சனைகள் போல.
பேருந்து கட்டண கொள்ளை/ ஆகார விலை கொள்ளை /அரசு மெத்தனம் போன்றவற்றின் நடுவில் இக்கட்டான நிலையில் டோல் கட்டண தடை,இளைஞர்களின் தன்னலமற்ற உதவிகள் ,.தனி
மனிதர்களின் உணவு இருப்பிட உதவிகள,கர்ப்பிணி பெண்களுக்கு முன்ணுரிமை
கொடுக்கும் ஆட்களும், பல்வேறு காரணங்களால் தம்மால் உதவிட முடியவில்லை
எனினும் உண்மையாக வருந்தும் உள்ளங்களும் ஆறுதல்.
எவ்வளவு மழைபெய்து எவ்வளவு நீர் கிடைத்தாலும் இன்னும் ஐந்து
மாதத்தில் மீண்டும் தண்ணீருக்கு கர்நாடகா கேரளாவிடம் பிச்சைதான்
எடுப்போம்.
2 கருத்துகள்:
உங்கள் கருத்துகளை 100 சதம் ஆமோதிக்கிறேன்.
அருமை
கருத்துரையிடுக