சனி, 5 டிசம்பர், 2015

ஆண் பிரசவம்

ஆணின் ஒவ்வொரு வயது பருவத்திலும் பெண்களை பற்றிய பார்வை  ஒவ்வொரு  விதமாக இருக்கிறது . ஆனால் பெண்ணை பெண்ணாகவும் அதற்க்கு மேலாகவும் பார்ப்பது அவள் கருவுற்று  இருக்கும்போதுதான் .


தன் மனைவியின் பிரசவத்தை அருகிலிருந்து பார்த்த அணைத்து கணவர்களுக்கும் இது தெரிந்து இருக்கும். பிரசவ வலியில் அவள் துடிக்கும்போது கூடவே கணவனின் கண்களும் இருதயமும் சேர்ந்தே துடிக்கிறது . அவன் செய்த தவறுகள்  செதில் செதிலாக அரித்து உயிரணுவை சிதைகிறது . மனைவியின் மீது மட்டுமல்ல அனைத்து பெண்களை பற்றிய கண்ணோட்டமும் மாறுகிறது .

டீன் ஏஜில்  பெண்களை பார்க்கும் ஹார்மோன்கள் இறந்து உருத்தெரியாமல் காணமல் போயிருக்கிறது

ஈவ் டீசிங் செய்யும் இளைஞர்களை பிரசவ காத்திருப்பு அறையில் காத்திருக்க வைத்து அந்த சப்தத்தை கேட்க செய்ய வேண்டும் , கற்பழிப்பு முயற்சி செய்தவர்களை அந்த சப்தத்தை கேட்க செய்து ஒரு பிரசவ வீடியோவை பார்க்க செய்ய வேண்டும். மீண்டும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் எண்ணமே வராது.  கவர்ச்சி அங்கங்கள் என தோன்றுபவை மனித உறுப்புகளாக தோன்றும்.

அந்தந்த  வயதில் இருக்கும் உணர்வுகள் இருக்கத்தான் செய்யும் , அது எல்லை  மீறாமல் இருக்க குடும்பத்தில்  யாருக்காவது  நடக்கும் பிரசவத்தை உணர்ந்தாலே போதும்.

பெண்களை பற்றிய கண்ணோட்டத்தை சுத்தபடுத்தும் ஒரு நிகழ்வு பிரசவம். மனைவி கருவுற்று இருக்கும் காலம் முதல், பிரவச வலி மற்றும் பிரசவத்திற்கு பின் அவள் படும் அவதிகள் வரை கண்டிப்பாக கணவன் கண்ணெதிரில் நடக்க வேண்டும் .பெண்ணின் பிரசவத்தில் அருகில் இருக்கும் ஆணும் அன்று புதிதாக பிரசவிக்கிறான்.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

உண்மைதான் என்றாலும், பெண்ணை மனிதனாகப் பார்க்கும் எண்ணம் எல்லா ஆண்களுக்கும் வரவேண்டும்.பெண்ணை பொருளாகப் பார்க்கும் ஆண்களின் பார்வையில் மாற்றம் வரவேண்டும்.

Unknown சொன்னது…

உண்மைதான் என்றாலும், பெண்ணை மனிதனாகப் பார்க்கும் எண்ணம் எல்லா ஆண்களுக்கும் வரவேண்டும்.பெண்ணை பொருளாகப் பார்க்கும் ஆண்களின் பார்வையில் மாற்றம் வரவேண்டும்.

Unknown சொன்னது…

காற்றென்றும் கரும்பென்றும்
பொற்கோள் நீயென்றும்
நானுன்னைச் சாற்றேன்!

மானுடத்தின் அரைவடிவம் நீ!
பின் னிவையெல்லாம்
மயிருக்கோ பெண்ணே!

Unknown சொன்னது…

காற்றென்றும் கரும்பென்றும்
பொற்கோள் நீயென்றும்
நானுன்னைச் சாற்றேன்!

மானுடத்தின் அரைவடிவம் நீ!
பின் னிவையெல்லாம்
மயிருக்கோ பெண்ணே!