ஞாயிறு, 24 அக்டோபர், 2010

BIRTHDAY WISHES (பிறந்த நாள் வாழ்த்து)

இன்று எனக்கு பிறந்த நாள் ... நேரம் சரியாக 12 மணி..

இதோ போன் கால்ஸ் தொடர்ந்து வருது ... அம்மா ,அப்பா , குடும்பம், நண்பர்கள்னு வந்துட்டே இருக்கு.
போனா வருஷம் எந்த இடத்துல இருந்தனோ அதே இடத்துல இருக்கேன். போனா வருஷம் முதல் தடவ இந்த flat ல இருந்தேன் , ஆனா நிஜமா மறுபடியும் இதே இடத்துல இந்த வருஷம் இருப்பேனு நெனச்சு கூட பார்க்கல. இந்த தடவ ஒரு மாற்றம்... தனியா உக்கார்ந்து இருக்கேன். ஏற்கனவே எழுதின மாதிரி SUNDAY கொடுமை நேத்து. ஆனா நாளைக்கு நாள் நல்லா இருக்கும்னு ....என்னவோ தோணுது.

இதுவரைக்கும் பிறந்தநாள் பெருசா ஒன்னும் நல்லா இருந்தது கிடையாது.
பிறந்த நாள் அப்படீங்குற feel எல்லாம் படிக்குற வரைக்கும்தான். அதாவது மஞ்சள் வச்சு புது சட்டை போட்டு கேக் வெட்டி சாக்லேட் கொடுக்குற வயசு வரைக்கும்தான்.ஆனா இன்னும் புது துணி போடுறது தொடர்ந்துட்டு இருக்கு எனக்கு.. என்னதான் இருந்தாலும் பிறந்தநாள் அன்னைக்கு நண்பர்கள் , வீட்டோட இருக்குறப்பதான் சந்தோஷம்.

சின்ன வயசுல  நானும் என் அண்ணனும் ஒரே வீட்ல இருந்துட்டு பிறந்தநாளைக்கு  அவன் எதாவது ஒரு படம் வரைஞ்சு அது  கூடவே  ஒரு பொருள் கொடுக்குறது, நான் கொடுத்தது, இதெல்லாம் சிரிப்பா இருந்த கூட, அதுல ஒரு சந்தோஷம் கெடைச்சது என்னவோ உண்மை.

ஆனா நாம என்னதான் பிறந்தநாள் வாழ்த்து எதிர்பார்க்க மாட்டேன்னு  சும்மா ஜம்பமா சொன்ன கூட,வாழ்த்து கிடைகுறப்ப ஒரு சந்தோஷம் கிடைக்குறது என்னவோ நிஜம்தான்...

நெருக்கமனாவங்க பிறந்தநாளுக்கு இனி ,வாழ்த்து கண்டிப்பா மறக்காம சொல்லனும்னு தோணுது.. ஒரு அரை நிம்ட போன் காலா இருந்தாலும் , அந்த அரை நிமிட சந்தோஷம் அவங்கவங்க பிறந்தநாள்ல அவங்களுக்கு கிடைக்குறது அவங்களுக்கு அது நல்ல நாளா அமையும் ..


ஆனா இது எல்லாமே அவங்க நமக்கு செஞ்சாங்க/ வாழ்த்து சொன்னாங்க, அதுக்காக கடமைக்காக சொல்லனும்னு இல்லாம, உண்மையான வாழ்த்த இருந்தா நிஜமா அது அவங்கவங்க பிறந்தநாள் எண்ணிகைய அழகா அர்த்தம் சொல்லும் .. ( இத அவங்க இதனை வருஷம் எத்தனை பேர சம்பாதிச்சு இருகாங்க அல்லது புதுசா இந்த வருஷம் எத்தன பேர சம்பாதிச்சு இருக்காங்கனு காமிக்கும் )
சில நேரத்துல கடமையான வாழ்த்து கூட நம்மள சந்தோஷ படுத்தும் .. முடிஞ்சவரைக்கும் வாழ்த்து சொல்றவங்க அது கடமையான வாழ்த்த இருந்தா கூட கூட அது தரியாம பார்த்துகிட்டா நல்லா இருக்கும் .. நம்மள (அட என்னை தான் ) குரங்குக்கு பர்த்டே னு பின்னாடி சொல்றவங்க  கூட இருக்காங்க ..

நம்மகிட்ட அடுத்தவங்கள பாராட்டுறது ரொம்ப கம்மி . ( அதுவும் என்கிட்டே அது சுத்தம் ... இது நாள் வரைக்கும் நான் பிறந்தநாள் வாழ்த்து கூட சொன்னது ரொம்ப கம்மி..இத படிக்குற நம்ம ஆளுங்களுக்கு அது தெரியும்) , ஆனா சின்ன சின்ன வார்த்தைகள் அடுத்தவங்கள சந்தோஷ படுத்துவது நிஜம்..

complimentsa தப்பா பயன் படுத்துற ஆட்களும் அதிகமாக இருக்காங்க.. எனக்கு தெரிஞ்சு , நான் வொர்க் பண்ணின இடத்துல இருந்தா ஒரு CEO , complimentesa  ரொம்ப தப்பா பயன்படுத்தி தன்னோட பொருளுக்க மார்க்கெட்டிங் பண்ணினத பார்த்து இருக்கேன்.ரொம்ப கேவலமா எத காட்டினாலும்,பார்த்தாலும் உங்களோடது super,awesome, very good னு பல்ல காட்டி வியாபாரம்  பண்ணினதையும் பார்த்து இருக்கேன் , பின்னாடி போய் வசைமொழில திட்டினதையும் பார்த்து இருக்கேன்.

இன்னும் சில பேர் slow kiler மாதிரி பயன் படுத்துவாங்க. என்னோட அண்ணனுக்கு  பாராட்டுன்னு  ஒன்னு கெடைச்சா , சோறு தண்ணி தூக்கம் இல்லாம பலநாள் வேலை தொடர்ந்து  செஞ்சுட்டே  இருப்பான். அத பயன்படுத்தி  அவன் managers அவனுக்கு சரியான recoginition கொடுக்காம வெறும் பொய்யான பாராட்டு வார்த்தைகளால வேலை வாங்குறதயும்   பார்த்துட்டு இருக்கேன்.
சரியான விஷயத்துக்காக பாராட்டவும் செய்யணும், அத உண்மைய செய்யணும்.நியாமான பாராட்ட ஏத்துக்கணும், பொய்யான பாராட்ட கூட ஏத்துக்கணும் , ஆனா எமாந்துட கூடாது.. ( மொக்கை கருத்துதான்.. :) )


இன்று எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

2 கருத்துகள்:

surendran சொன்னது…

kanna un blog la fire irukke..vela than pa fire a irukkanum..blog la fire padam potta sariya potcha?

Guna சொன்னது…

THEEYA VELAI SEIYAANUM...