கணவன் எப்பவுமே தன் மனைவி , தன்னை மற்றும் ஏற்று கொண்டால் போதாது,தன் குடும்பத்தையும் அவள் குடும்பம் மாதிரி எடுத்துக்கணும்னு விரும்புவான். அதாவது தன்னோட அப்பா,அம்மாவ மனைவி அவளோட அப்பா அம்மா மாதிரி பார்க்கணும்,பழகனும்னு எதிர் பார்ப்பான்.
ஆனா கண்டிப்பா கணவன், மனைவியோட அப்பா,அம்மா வ அப்படி பார்க்குறது இல்ல. சுய மனநிலையும் அப்படிதான் இருக்கும். அப்படியே அவன் பார்த்தாலும், சுத்தி இருக்குறவங்க அத தப்பா பேசி அவன் மனநிலை மாற ஆரம்பிக்கும்.
பண்டிகை வந்துட்டா மனைவிக்கு தன் வீட்டுக்கு போகணும் அங்க கொண்டாடனும்னு இருக்கும். ஆனா கணவனும் விட மாட்டான், கணவன் வீடும் அத அனுமதிக்குறது இல்ல.
கணவன் வீட்ல இருக்கும்போது மனைவி இருக்குற COMFORT LEVEL , மனைவி வீட்ல கணவன் இருக்கும்போது அவனுக்கு வர்றது இல்ல.
கண்டிப்பா கணவனுக்கு மனைவி கொடுக்குற முக்கியத்துவம் , மனைவிக்கு கணவன் கொடுக்குறது கம்மியாதான் இருக்கும்.
தன் மனைவி அழகு னு கேட்குறப்ப கணவனுக்கு சந்தோசமாதான் இருக்கும். ஆனா அதுக்கு அவ அதிக முக்கயத்துவம் கொடுத்தா அது அவனுக்கு அவ்ளோவா பிடிக்குறது இல்ல.
பெண்ணுக்கு எப்பவுமே தன் கணவனுக்கு தான்தான் எல்லாம இருக்கணும் , தனக்குதான் முதல் முக்கியத்துவம் கொடுக்கணும்னு பார்ப்பா. ஆனா அவளுக்கு மட்டுமே அப்படீங்குறது நடைமுறைல சாத்தியம் ஆகுறது இல்ல. பின்னாடி குழந்தைக்கு அப்புறம் பெண்ணுக்கும், கணவன் இரண்டாவது இடத்துக்கு போயிடுறான்.
மனைவி மத்தவங்க முன்னாடி தன் கணவன் தன்ன விட்டு கொடுக்க கூடாதுங்குற நியாயத்த எதிர்பார்ப்பா. தன்ன கண்டிக்குறதா இருந்தா கூட அத தனியா செய்யனும்னு எதிர் பார்ப்பா.
கண்டிப்பா தன் கணவன் வேற பொண்ண சைட் அடிக்குறது பிடிக்காது. காட்டிக்கலனா கூட கண்டிப்பா எரிச்சலா இருக்கும். பையன் அடுத்த பொண்ண ரொம்ப பாராட்டி பேசிடவே கூடாது.
இது எல்லாமே இப்ப இருக்குற புதுசா கல்யாணம் பண்ணின தலைமுறைக்கு பொருந்தும்னு நெனைக்குறேன்.
இந்த எதிர்பார்ப்பு தோல்வி அடையுறப்ப கீழ இருக்குற படம் நடக்குது ...
யாரவது படிச்சா ... அப்படியிய சொந்த அனுபவங்கள/ அறிஞ்ச அனுபவங்கள சொல்லுங்க .. கேட்டு தெரிஞ்சுக்கலாம்.. பின்னாடி படிக்குற நம்ம ஆளுங்களுக்கும் உதவியா இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக