திங்கள், 18 ஏப்ரல், 2011

2020 தேர்தல்-தமிழ்நாட்டில் தலைவன் ஒருவனும் இருக்க போவதில்லை.

இன்னும் பதினைந்து வருடங்களுக்கு பிறகு அதாவது இன்னும் இரண்டு தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சிகளும் கட்சி தலைவர்களும் எப்படி இருப்பார்கள்?




யோசித்தால் ..



இரண்டு பெரிய  கட்சிகளும் தனது செல்வாக்கை இழந்து இருக்கும் அதாவது ஒரு கட்சியில், தற்போது இருக்கும் தலைவர் இல்லாமல் இருப்பார். உள்கட்சியில் குடும்ப சண்டை வந்து பிளவு பட்டு இருக்கும். இதனால் இந்த கட்சி அப்போது 50௦ இடங்கள் வெற்றி பெறவே போராட வேண்டிய நிலைமை வந்து இருந்தாலும் ஆச்சர்ய பட அவசியம் இல்லாமல் இருக்கும். மற்றொரு பெரிய கட்சி - இப்போது அதன் எதிர் கட்சி இருக்கும் நிலைமைக்கு ஆளாகியிருக்கும் . அதன் தலைவருக்கு பிறகு வேறு எந்த ஆளுக்கும் அந்த கட்சியில் சக்தி இல்லாததால் இதற்கும் அதே நிலைமை தான் இருக்கும் . இந்த கட்சிக்கு இப்போது இருக்கும் தலைமையை விட்டால் யார் கட்சியை தலைமை தாங்குவது என்று அவர்களுக்கே தெரியாது.



மூன்றாவது சக்தி என்று வளர்ந்து வரும் கட்சி .. இந்த தேர்தலில் இதன் அரசியல் அனுபவம் ... மூன்றாவதாக நமக்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டாரா என்று எதிர் பார்த்தவர்களின் எண்ணத்தை தவிடுபொடி ஆக்கி இருக்கிறது. ஆனாலும் திருத்தி கொள்ள வாய்ப்பு இருபதாகவே தோணுகிறது.



மற்ற ஐந்து கட்சிகளும் ( கூட்டணிக்கும் மட்டுமே பயன்படுகின்ற கட்சிகள் ) அப்போதும் இப்படியேதான் இருக்கும்.



இதை எல்லாம் கூட்டி கழித்துதான் இளம் நடிகர்கள் கூட, தான் நாற்பதில் வருகிறேன், ஐம்பதில் வருகிறேன்.. என்று கூறி வருகிறார்களோ ? ஆனாலும் இவர்காது சுய நலமும் இந்த தேர்தலில் அப்பட்டமாக தெரிந்தது.



இந்த தேர்தலில் நடந்த நல்ல விஷயம் .. ஓட்டு பதிவான சதவீதம். படித்தவர்களின் வாக்கு சதவீதம் .. ( ஆனால் இதிலும் கூட ஓட்டு போடுவது பேஷன் என்று ஓட்டு போட்ட இள ரத்தங்கள் உண்டு .. ரொம்ப கஷ்டம்டா..) இது தவிர்த்து , இது தொடர்ந்து நடக்குமென்றால் மிக நல்ல விஷயம்.



ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாது .. ஒரு கொட்டனியில் குறைந்தது பத்து கட்சிகளாவது இருக்கும். ஒரு இடம் ஜெயிக்கும் கட்சிக்கு கூட பணம் விளையாடும் .. ஜெயிக்க போவோரும் , தோற்க போவோரும் கடைசி நேரத்தில் கூட காசுக்காக கட்சி மாறுவார்கள் ( அது தற்போதே சர்வ சாதாரணம் .. மாம்பழம் திண்ணுவதை போல் சுலபமாக மாறுகிறார்கள் )



வாக்கு அளிப்பவர்களும் தெளிந்து விட்டால் .. பதினைந்து வருடங்களுக்கு பிறகு , அதாவது இன்னும் இரண்டு தேர்தலுக்கு பிறகு.. கட்சிகளின் நிலைமையை யோசிக்கும்போது தலைவர்கள் இல்லாமல் கட்சியும் , தலைவன் இல்லாமல் தமிழ்நாடும் நிற்கும் என்றே தோனுகிறது .



ஒரு மாற்று சக்தி வேண்டும் எனில் அது இப்போது இருக்கும் கட்சிகளும், புதிய கட்சிகளும், அரசியலுக்கு வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டும் நடிகர்களும் அல்ல என்று தோனுகிறது



இன்னும் ஐந்து முதல் ஏழு வருடங்களில் அந்த அரசியல் சக்தி தமிழ்நாட்டில் புதிதாக தோன்றும். அப்படி தோன்றா விட்டால் அது தமிழ்நாட்டின் அழிவிற்கு ஆரம்பம்.

4 கருத்துகள்:

GoodJob சொன்னது…

நல்ல முயற்சி ..நாம் தமிழர் சீமான் மாற்று சக்தியாக வருவார் ( இது என் கருத்து)

Guna சொன்னது…

@ kettavan - indaraya thethiyil nalla choice thaan.

i saw soem of videos of him in this election meetgs .. awesome speach..

KAALAM BATHIL SOLLUM

Nadu Nisi Naai சொன்னது…

My instinct says that some new power will arise soon not in TN but in whole India...Thinking will change, ideology will change, belief will change as the current generation knows started realizing how back we are and how bad we are...and they want to see a disciplined society for them..

Guna சொன்னது…

Nadanthal Santoshamey :)