செவ்வாய், 31 மே, 2011

இந்திய கிரிக்கெட் அணி - யாருமே கண்டுக்கல :(

ஹும்ம்..  நம்ம ஆளுங்க வெஸ்ட் இண்டீஸ் டூர் கு அணி அறிவிச்சதும் வந்த எரிச்சல் எல்லாருக்கும் வரும்னு பார்த்தா... அமைதி. என்னடா ஒருத்தனும் வாய திறக்கல .. எப்பவும்  விமர்சிக்கற கபில்தேவ்கிட்ட இருந்து கூட ஒரு கண்டனமும்  வரல.. ப்ளாக் ல கூட அவ்ளோவா யாரும்  யாரும் எழுதின மாதிரி  தெரியல.. கடைசியா  ரெண்டு நாள்  முன்னாடி ஒரு வழியா கவாஸ்கர்கிட்ட இருந்து மட்டும் நெத்தியடியா ஒரு பேட்டி.

உணமையான சாடல்.

எப்ப உலக கோப்பை  ஜெய்த்ததுக்கு கொடுத்த பணம் எங்களுக்கு போதாது.. இன்னும் ஒரு கோடி வேணும்னு  கேட்டு வாங்கினாங்களோ.. அப்பவே இவங்களோட நாட்டுக்காக விளையாடுற  அந்த உணர்வு ரொம்ப நல்லா புரிஞ்சது. இதுல எவனவாது எந்த நல்ல காரியதுக்காவது பணம் கொடுத்து இருக்கானா? தேடி  பார்த்தா.. ஒன்னும் கிடைக்காது ( ஹர்பஜன் ஒரு காக்க கடி கடிச்சு கொஞ்ச பணத்த  ஒரு ஆசிரமத்துக்கு கொடுத்ததா  ஒரு தகவல் )..


வார்னே சொன்னதும் சரி .. இந்தியா  தனது கிரிக்கெட் பணபலத்தால் மத்த  கிரிக்கெட் நாடுகளை நசுக்க கூடாது. கோடி கோடியா பணம் புரண்டாலும் நம்ம நாடு ground  பார்த்தா அவ்ளோ அழகா வச்சு இருப்பாங்க நம்ம ஆளுங்க.. இங்கிலாந்த், ஆஸ்திரேலியா இங்க கிரிக்கெட்ல வர்ற பணம் ரொம்ப குறைவு (நம்ம நாட்ட விட ) .. அப்படி இருந்தும் அங்க இருக்குற  ground   பக்கத்துல கூட நம்ம ground  போகாது.

இந்திய கிரிக்கெட்ல எத எடுத்தாலும்,எங்கயும் ஊழல்.

IPL ல விளையாட  முடியும் அனால் இந்திய அணிக்காக ஆட மாட்டேன் . எனக்கு ரெஸ்ட் வேணும்னு சொன்ன அணைத்து வீரர்களுக்கும்  இனி இந்திய அணியில் எப்போதும் சேர்க்க  கூடாதுனு கவாஸ்கர் சொன்னது மிக சரி.  

இவங்களுக்கெல்லாம் ஆயுட்கால  தடை விதிக்கணும் .. எபப்டியாவது இந்திய அணிக்கு ஆட மாட்டோமா? .. அப்படின்னு பல கனவுகளோடு  போராடுற இவங்க.. முதல ஐம்பது நூறு மேட்ச்  விளயனட்டஹும் . .அந்த நாட்டு  பற்று காணாம போய் பண பற்றுக்காக மட்டுமே  ஆடிட்டு இருக்காங்க.

IPL ல ஊக்குவிக்குற  பிசிசிஐ, இதுல பல இளம் வீரர்கள் கண்டறிய படுகிறார்கள் , பயன் பெறுகிறார்கள்னு  சொல்றாங்க. இதுல எந்த அளவுக்கு உண்மை இருக்குது? வெறும் பணத்துக்காக ஆடுற ஸ்டார் PLAYERS  மட்டும்தான பயன் பெருறாங்க? அப்படி இளம் வீர்கள்  பயன் பெறுகிறார்கள்னு சொல்றவங்க எதுக்காக வெளி நாடு வீரர்களை ஆட விடுறாங்க?

உண்மைய்லே இந்திய அணிக்கு வீரர்களை கண்டு பிடிக்கணும்னா .. ஏன்  ரஞ்சி போன்ற உள்ளூர் விளயாட்ட  ஊக்கிவித்து   பெருசா கொண்டு வர கூடாது..  ஏன்  இந்திய இளம்  வீரர்களை வெளி நாடுக்குகு அனுப்பி வச்சு , பயிற்சி அல்லது அந்த நாடு உள்ளோர்ர் அணிகளில் ஆட முயற்சி செய்ய கூடாது ? முடியும் ஆனா செய்ய மாட்டாங்க.. காரணம் பணம். நம்ம பணத்த   சுரண்டி  இவங்க ஊழல் செய்யுறதுக்காகவே  நடத்தபடுகிறது பிசிசிஐ. 

எனக்கு அது வலிக்குது , இது வலிக்குது என்னால ஆட முடியலன்னு சொல்லுற ஆளுங்க ஏன்  IPL  மட்டும் ஆடுறாங்க? இதுல ஆடாம அதுல ஆடலன்னு  சொன்னா சரி, ஒத்துக்கலாம். இதுல ஆடிட்டு  இந்திய அணிக்காக ஆட மாட்டேன்னு  சொல்ற கேடு கேட்ட வீரர்களை என்ன செய்வது? IPL ல சம்பளம் இல்லாம ஆடுங்கன்னு சொன்ன ஒருத்தன் கூட IPL  ஆட போக மாட்டன். விளம்ம்பரதுல நடிச்சு சம்பாதிக்குறதுல  இருக்குற ஆர்வம் கூட நாடு அணிக்காக ஆடுறதுல இல்ல இவங்களுக்கு.

IPL  கு தடை , இவங்களுக்கு ஆயுட்கால தடை.

எது நடந்தாலும்., யார் மேல கோப பட்டாலும்.. சச்சின் மேல மட்டும் கோபம் வராது .. இந்த தடவ சச்சின் மேலயும் இதே அபிப்ராயம் தான்.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

சரியான நெத்தியடி பதிவு மக்க............................ஆனா நீங்க என்னத்த எழுதினாலும் இந்த பயபுள்ளைங்க திருந்த போவது இல்லை........................இதை பற்றி நானும் என்னுடைய வலைப்பூவில் நிறைய பதிவுகள் போட்டுள்ளேன்..................நேரமிருந்தால் படிக்கவும்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்ல பதிவு,இந்திய அணி இப்போதெல்லாம் பணத்துக்காகதான் விளையாடுகிறது.யுவராஜ் ,காம்பிர் போன்றோர் வளர்த்த அணியை மறந்து விட்டனர்.

bigilu சொன்னது…

அருமையான பதிவு. இவனுங்களக்கு எவ்வளவு கொள்ளையடிச்சாலும் பத்தாது போல..

BCCI பண கஷ்டத்தில் இருக்கா ? - http://ivanbigilu.blogspot.com/2011/05/bcci.html

Guna சொன்னது…

நன்றி தளிர், சரோ, அபு மற்றும் பிகிலு